'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, January 7, 2026
நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'
நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'
தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.
திராவிடம் என்று வடக்கு நாட்டவர் தமிழை அழைத்தனர். அதனால்தான் கால்ட்வெல் தமிழிலிருந்து வந்த மொழிகளைத் திராவிட மொழிகள் என்றழைத்தார். அதாவது தமிழ் மொழிகல், தமிழை அடியாகக் கொண்ட மொழிகள். முனைவர் அரியேந்திரன் மொழியியல் அறிஞர் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து வடமொழி உட்படப் ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல தோன்றின என்பதையிட்டு ஆய்வுகள் பல செய்தவர். அவர் பாவாணரின் வழி வந்தவர். தமிழம் என்னும் சொல்லிலிருந்தே திரவிடம் என்னும் சொல் தோன்றியது. அதுவே பின்னர் திராவிடம் என்று காலப்போக்கில் மாறியது. இது தேவநேயப்பாவாணரின் கருத்து. என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பிறந்து , பரம்பரை பரம்பரையாகத் தமிழராக வாழ்ந்து கொண்டிருக்கும் எவருமே தமிழர்தாம். அவர்களைத் தெலுங்கர், மலையாளி என்று பிரித்துப்பார்ப்பது தமிழகத்தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்கும். இதனைத்தான் சீனா போன்ற நாடுகள் எதிர்பார்க்கின்றன. உண்மையில் திராவிடக் கட்சிகள் புரட்சிகர அமைப்புகள் இல்லாவிட்டாலும், அவை சுயமரியாதை, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு, மதச்சார்பற்ற தன்மை போன்றவற்றுக்காகக் குரல் கொடுப்பவை,.அவற்றில் ஆரோக்கியமான, புரட்சிகரமான அம்சங்கள் உள்ளன.
நூலை வாசிக்க - https://www.tamilvu.org/ta/library-lA46P-html-lA46Pind-152036
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!
வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்! இசை & பாடல் - SUNO AI ஓவியம் - Google AI அதிகாலைகளில் , அந்திவேளைகளில் அன்று கல்லுண்டாய...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

No comments:
Post a Comment