Friday, January 30, 2026
காலத்தால் அழியாத கானம்: "உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே"
'பாக்தாத் திருடன்' திரைப்படத்துக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. எம்ஜிஆரும், வையந்திமாலாவும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் என்ற முக்கியத்துவம்தான் அது. 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' வரிசையில் அராபியச் சூழலில் பின்னப்பட்ட கதை.
என்னைப்பொறுத்தவரையில் இப்படத்துக்கு இன்னுமொரு முக்கியத்துவமுண்டு. எழுபதுகளில் கொழும்பில் மீள் வெளியீடாக வெளியானபோது இத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. ஜெஸிமா திரையரங்காக இருக்க வேண்டும். அதே காலகட்டத்தில் 13ஆவது தடையாக வெளியான 'குலேபகாவலி' அறுபது நாட்களைக் கடந்து ஓடியது. நானறிந்தவரை மீள் வெளியீடுகளில் 100 நாள்களைக்கடந்து ஓடியவை எம்ஜிஆரின் 'ஒளி விளக்கு'ம் , 'பாக்தாத் திருடன்' திரைப்படமும் மட்டும்தாம்.
* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோ பனானா வழி வநகி.
படம் – பாக்தாத் திருடன் 1960
இசை – G. கோவிந்தராஜுலு நாயுடு
பாடியவர் – T.M. சௌந்தரராஜன் P.சுசிலா
இயற்றியவர் – A. மருதகாசி
பாடல் - உண்மை அன்பின் உருவாய்
https://www.youtube.com/watch?v=vSIgHve4B-Q
பாடல் வரிகள் முழுமையாக :
உண்மை அன்பின் உருவாய்
என் முன் வந்தாயே
உனை நினைந்து மனம் மயங்க செய்தாயே
ஊரை எல்லாம் கொள்ளை கொள்ளும் என்னையே
பார்வையாலே கொள்ளை கொண்டாய் கன்னியே
ஓ….ஓ….ஒ…..
உண்மை அன்பின் உருவாய்
என் முன் வந்தாயே
உன்னை நினைந்து மனம் மயங்க செய்தாயே
கள்ளம் இல்லா காதல் இன்பம் தன்னையே
கள்வா நீயும் காண செய்தாய் என்னையே..
ஓ….ஓ….ஒ…..
சொல்ல சொல்ல எல்லை மீறி
உள்ளம் துள்ளி பாயுதே
பள்ளம் நாடும் வெள்ளம் போலே
உன்னைக் கண்டு தாவுதே..
சொல்ல சொல்ல எல்லை மீறி
உள்ளம் துள்ளி பாயுதே
பள்ளம் நாடும் வெள்ளம் போலே
உன்னைக் கண்டு தாவுதே…ஓ….ஓ….ஒ…..
அல்லல் இருள் தன்னை தீர்த்த
அணையா ஜோதியே
அல்லல் இருள் தன்னை தீர்த்த
அணையா ஜோதியே….ஓ….ஓ….ஒ…..
உந்தன் மின்னல் ரூபம்
எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே
சொந்தம் கொள்வாய் மன்னா என்று
சொல்லி என்னை கெஞ்சுதே…..
உந்தன் மின்னல் ரூபம்
எந்தன் கண்ணில் வந்து கொஞ்சுதே
சொந்தம் கொள்வாய் மன்னா என்று
சொல்லி என்னை கெஞ்சுதே……ஓ….ஓ….ஒ…..
விந்தை காதல் பெண் புறாவே
அருகே வாராய்……
விந்தை காதல் பெண் புறாவே
அருகே வாராய்……ஓ….ஓ….ஒ…..
Subscribe to:
Post Comments (Atom)
புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!
காலத்துக்குக் காலம் புதுப் புதுத் தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...
No comments:
Post a Comment