Monday, January 12, 2026

வ.ந.கிரிதரன் பாடல் : கனடாவில் கிட்டார் அடிக்கும் கலைஞன் நானே

வ.ந.கிரிதரன் பாடல் : கனடாவில் கிட்டார் அடிக்கும் கலைஞன் நானே

இசை &  குரல்: SUNO AI  ஓவியம்: Google Nano Banana AI

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.

நண்பன் சொன்னான் கிட்டார் அடிக்க விருப்பமா என்று.
நண்பா யாருக்குத்தான் விருப்பம் இல்லை என்றேண்.
அப்படியென்றால் உனக்கு ஒரு வேலை ரெடி என்றான்.
எப்படியென்றாலும் வேலை கிடைத்தால் போதுமென்றேன்.

கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.அதுசரி நண்பா, கிட்டாருக்கும் வேலைக்கும் சம்பந்தம் என்ன என்றேன்.
அதெல்லாம் அப்புறம் . முதலில் வா இப்புறம்  என்றான் நண்பன்.
எப்புறமென்றாலும் ரெடி நண்பா. சொல்லு வாறன் என்றேன்.
தப்புற வழியைப் பாரு முதலில் என்றான் நண்பன்.

கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.

முதலில் வா. பலசுக்குப் போவோம் என்றான் நண்பன்.
அரண்மனை செல்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
அது சரி பலஸ் யாருக்குச் சொந்தம் என்றேன்.
அது கிரீக்காரன் ஒருவனுக்கு சொந்தம் என்றான் நண்பன்.

கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.

அரண்மனையில் இருந்து ஆட்சி செய்யும் அரசனைக் காணும் 
ஆவலினால் நண்பன் பின்னே சென்றேன் நானும் கூட.
நகரின் நடுவில் இருந்தந்த அரண்மனை. 
நண்பா, அரண்மனை இதுவா என்றேன்.

கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.

நண்பன் சொன்னான் அரண்மனை இதுதான்.
நீ கிட்டார் அடிப்பதும் இங்குதான் என்றான்.
கிட்டார் அடித்து அரசனை மகிழ்விப்பதும் நல்லதே என்றேன்.
கண்ணைச் சிமிட்டினான் நண்பன். உள்ளே வா என்றான்.

கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.

பெரியதோர் சமையல்  கூடம்  அது.
பெருத்த உருவில், கொடுவா மீசையுடன் ஒருவன்.
இவன் தான் தலைவன் இங்கே.
சொல்லித்தருவான் கிட்டார் அடிக்கும் கலையை உனக்கு.
தொட்டியில் பெரிய அண்டா குண்டாக்கள்.
கொட்டிக்கிடந்தன கோப்பைகள் எங்கும்.
நண்பன் சொன்னான் எடுத்துக் கழுவுடா.
நண்பா, அப்போ கிட்டார் அடிப்பது எப்போ என்றேன்.
கிட்டார் அடிப்பது கோப்பை கழுவுதலின் மறு பெயர்.
என்றான் நண்பன். எக்காளமிட்டுச் சிரித்தான் மேலும்.
கிட்டார் அடிக்கப் போய் கோப்பை கழுவினேன்.
கனடாவில் என் நிலை இப்படி ஆச்சுதே.

கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.

கிட்டார் அடித்தால் ஊரில் யார் பெண் தருவார்?
நண்பனின் மேல் ஆத்திரம் வந்தது. 
அதற்கு நண்பன் சொன்னான் அது வெகு சுலபம் என்று.
யாரும் கேட்டால் சொல்லு கிட்டார் கலைஞன் என்று.

கனடாவில் கிட்டார் அடிக்கும் கலைஞன் நானே.
கனடாவில் கிட்டார் கலைஞன் கலைஞன் நானே.

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!

வ.ந.கிரிதரன் பாடல்:  நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்! இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI [வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.yo...

பிரபலமான பதிவுகள்