இன்று அம்மாவின் நினைவு தினம். நவரத்தினம் டீச்சர் என்று மாணவர்கள் மத்தியிலும், 'மங்கை' என்று அவரது சிநேகிதிகள் மத்தியிலும் அறியப்பட்ட அம்மாவின் மறைவின்போது நான் எழுதிய கவிதை இது. அம்மாவின் நினைவாக அதனைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு பாடலாக்கியிருக்கின்றேன். நான் எழுதிய கவிதை வரிகளை இசையமைத்து பாடியிருக்கின்றது செயற்கை நுண்ணறிவு.
வ.ந.கிரிதரன் பாடல் - தாயே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
தாயே! என்னிருப்பில்
உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
Thursday, March 26, 2026
வ.ந.கிரிதரன் பாடல் - தாயே! - வ.ந.கிரிதரன் -
Wednesday, March 25, 2026
' வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' 'யு டியூப் சானல்': மகாகவி பாரதியார் பாடல்கள் நான்கு!
'வ.ந.கிரிதரனின் பாடல்களும் & பார்வைகளும் ' (V.N.Giritharan Songs & Views) என்னும் 'யு டியூப் சான'லில் செயற்கை அறிவின் (AI) துணை மூலம் இசையமைக்கப்பட்ட , குரல் கொடுக்கப்பட்ட என் பாடல்களைக் கேட்டு மகிழலாம். பல்வேறு விடயங்களைப் பற்றியஎன் பார்வைகளையும் கேட்டறிந்து கொள்ளலாம்.
அவ்வப்போது காப்புரிமைப் பிரச்சனை அற்ற , எனக்குப் பிடித்த மகாகவி பாரதியார் போன்றோரின் கவிதைகளையும் செயற்கை நுண்ணறிவு மூலம் இசையமைத்து, பாட வைத்துப் பகிர்ந்து கொள்வேன்.
பாடல்களும், பார்வைகளும் பிடித்திருந்தால் என்னுடன் தொடர்ந்துவர மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி Bell பட்டனையும் தேர்வு செய்யுங்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. எனது மின்னஞ்சல் முகவரி girinav@gmail.com
Tuesday, March 24, 2026
மகாகவி பாரதியார் பாடல் - காற்று வெளியிடைக் கண்ணம்மா!
மகாகவி பாரதியார் பாடல் - காற்று வெளியிடைக் கண்ணம்மா!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்
Monday, March 23, 2026
மகாகவி பாரதியார் பாடல் - செந்தமிழ் நாடெனும் போதினிலே!
மகாகவி பாரதியார் பாடல் - செந்தமிழ் நாடெனும் போதினிலே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே -
மகாகவி பாரதியார் பாடல் - மனமெனும் பெண்ணே! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - மனமெனும் பெண்ணே!
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!
Saturday, March 21, 2026
மகாகவி பாரதியார் பாடல் - கண்ணன் என் காதலன்! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் நனோ பனானா வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
Friday, March 20, 2026
மகாகவி பாரதியார் பாடல் - புதிய கோணங்கி! இசை & குரல்: SUNO AI ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - புதிய கோணங்கி
இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட்ஜிபிடி வழி வநகி
ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது.
வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது.
படிப்பு வளருது;பாவம் தொலையுது.
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்.
போவான்,போவான்,ஐயோவென்று போவான்.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு.
நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது.
அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!
என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள் ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும். ராணி வாராந...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...