Sunday, June 7, 2026
விசுவநாதன் டீச்சர் (திருமதி தவமணி விசுவநாதன்) மறைவு!
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும், முன்னாள் யாழ் மேயர் திரு.இராசா விசுவநாதனின் மனைவியுமான விசுவநாதன் டீச்சர் மறைந்ததாக வாட்ஸ் அப்பில் என் சகோதரிகளில் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.
விசுவநாதன் டீச்சர் அம்மாவின் (நவரத்தினம் டீச்சர்) சிநேகிதிகளில் என் நினைவுக்கு உடனடியாக வரும் இருவரில் ஒருவர். மற்றவர் முன்னாள் யாழ் இந்த மகளிர் கல்லூரி அதிபரான இராமநாதன் டீச்சர்.
என் அப்பாவின் மறைவின்போது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வந்திருந்தார். அம்மாவுடன் அழுதபடி நின்ற தோற்றம் மனக்கண்ணில் தெரிகிறது.
அம்மாவின் பால்யப் பருவத்திலிருந்து பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையாக எனத் தொடர்ந்த நட்பு தொடர்ந்து நீடித்தது.
Thursday, June 4, 2026
கட்டடக்கலைஞர் மயூரநாதன் இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948) ! (பகுதி2 - தொடர்ச்சி) - வ.ந.கிரிதரன் -
[ அண்மையில் 'டொரோண்டோ'ப் பெருநகரில் நடைபெற்ற கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனின் ''யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு ( 1621 - 1948)1" நூல் பற்றி நான் ஆற்றிய உரையின் விரிவான. ஓரளவு முழுமையான கட்டுரையிது. நேரக்கட்டுப்பாடு காரணமாக அங்கு முழுமையாக என் உரையினை ஆற்ற முடியாது போயிற்று. அதனை முழுமையாகத் தருவது முக்கியம் என்பதால் அது இங்கு முழுமையாக இடம் பெறுகின்றது.]
பகுதி இரண்டு: கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு (தொடர்ச்சி)
'சங்கிலித்தோப்பு' வாயில் அல்லது கல்தோரண வாயில் பற்றி....
சங்கித்தோப்பு வாயில் என்று இது அழைக்கப்பட்டாலும், உண்மையான சங்கிலித்தோப்பு மந்திரிமனையை அண்டிய பகுதியே. அக்காணிப்பெயர்தான் சங்கிலித்தோப்பு என அழைக்கப்படுகின்றது. இவ்வாசல் உள்ள பகுதி பாண்டியமாளிகை வளவு என்றழைக்கப்படுகின்றது.
இந்த வாயில் பற்றியும் மயூரநாதனின் இந்நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை யாரும் சுட்டிக்காட்டாத முக்கிய விடயமொன்றையும் மயூரநாதன் இவ்வாயில் பற்றிக் குறிப்பிடுகின்றார். அது முக்கியமானது. இவ்வாயிலானது ஒரு மாளிகையின் முகப்பு வாசலாக இருப்பதற்குச் சாத்தியமில்லை என்கின்றார். இதன் குறைந்த பருமன் இதனுடன் அகலமான மாளிகைச் சுவர்கள் பொருந்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அவர் முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றார். இது பற்றிய நுணுக்கமான ஆய்வு அவசியம் என்றும் கூறுகின்றார். இது மாளிகையின் முகப்பாக அல்ல , .அங்கிருந்த மாளிகையொன்றின் வளவை அல்லது வீட்டுத் தோற்றத்தைச் சுற்றி அமைந்துள்ள மதிலில் இருந்த நுழை வாயிலாக இம்முகப்பு இருந்திருக்கலாம் என்பதை ஊகிக்கலாம் என்கின்றார்.(பக்கம் 222).
Wednesday, June 3, 2026
தமிழக முதலவருக்கு ஓர் ஆலோசனை!
Tuesday, June 2, 2026
விஞ்ஞான அறிவு நூல்களை வெளியிட்ட ஹிக்கின்பாதம்ஸ் பதிப்பகம்!
என் பதின்ம வயதுகளில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் விரும்பி வாசித்த நூல்களில் அறிவியல் நூல்களுக்கும் முக்கிய இடமுண்டு. இது பற்றி எனது பல முகநூற் பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். நூலகம் பற்றிய பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:
"நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இந்த நூலகத்தில் எத்தனையோ அறிவியல் நூல்களைப் படித்திருக்கின்றேன். மிகவும் அழகாக விஞ்ஞானத்தின் பல்வேறு பிரிவுகளிலும் நூல்களை அக்காலகட்டத்தில் சென்னையிலுள்ள பதிப்பகமொன்று வெளியிட்டுக்கொண்டிருந்தது. 'பெளதிகத்தின் வரலாறு', 'கடலின் வரலாறு', 'உயிரினங்களின் வரலாறு',.. என்பது போன்ற தலைப்புகளிருக்கும்.
'பெளதிகத்தின் வரலாறு' என்னுமந்த நூலில் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும், பொருளுக்குமிடையிலான தொடர்பினை வெளிப்படுத்தும் சூத்திரத்தை, ஒளித்துகளுக்கு உந்தம் மற்றும் இயக்கச்சக்தி ஆகியவற்றுடன் தொடர்புடைய சூத்திரங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நிறுவியிருந்தது இன்னும் பசுமையாக மனதிலுள்ளது. '... இவ்வகையான அறிவியல் நூல்கள் எங்கள் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. மேற்படி விஞ்ஞான நூல்களில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் பிரசுரமான அறிவியல் நூல்களின் தரமான மொழிபெயர்ப்புகளே. "
Saturday, May 30, 2026
அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!
என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள் ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும்.
ராணி வாராந்தரியில் இரு பக்கங்கள் சிறுவர் ஆக்கங்களுக்கு ஒதுக்குவார்கள். ஒரு பக்கத்தில் சிறுவர் தொடர்கதையொன்று வெளியாகும், அடுத்த பக்கத்தில் விடுகதைகள் , வேறு பல்சுவைத்துணுக்குகள் போன்றவை வெளியாகும்.
அண்மையில் இணையத்தில் பழைய ராணி இதழ்களின் சில பக்கங்களைக் கண்டேன். முகநூல் நண்பர் மோகன்குமார் பகிர்ந்திருந்தார். அதிலுள்ள ராணி இதழ்கள் நான் தீவிர வாசிப்பில் இறங்குவதற்கு முன் வெளியானவை. இருந்தாலும் அதே மாதிரியான வடிவமைப்பில்தான் நான் வாசிக்கத் தொடங்கியபோது ராணி வெளியாகிக்கொண்டிருந்தது. அதனால் மேற்படி ராணி இதழின் பக்கங்கள் பழைய நினைவுகளை எழுப்பி விட்டன.
(தமிழக அரசியல்) உதயநிதி & விஜய்: ஆரம்பமாகும் புதிய மோதல்!
அன்று தமிழகத்தில் திமுகவினர் ஆட்சியைப் பிடித்தபோது அவர்கள் இளவயதினர். அன்று இள வயதுத் திமுகவினர் கோட்பாட்டு ரீதியில் பகுத்தறிவு, சமநீதி , சுயமரியாதை என்று எழுத்துகள், மேடைப்பேச்சுகள், திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் என்று புயலாகப் புறப்பட்டபோது அவர்கள் பின்னால் தமிழகத்தின் இளைஞர்கள் திரண்டனர். தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்தனர் தமிழக மக்கள்.
அதன் பின் இன்றுவரை அதே திமுகவினர் முதுமையின் தாலாட்டில் இருக்கும் அமைச்சர்கள் பலரை உள்ளடக்கி இருக்கும் நிலையில் தமிழக இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இன்று தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்குப் பெரியதொரு வெற்றியைக் கொடுக்கவில்லை. அவர்களுக்குத் தவெக பற்றி உறுதியான, நம்பிக்கையான எண்ணம் இருப்பதாகத்தெரியவில்லை. அதனால்தான் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தபோது அரைகுறை வெற்றியினைக் கொடுத்தார்களோ என்று தோன்றுகின்றது.
திமுகவின் கோட்டையான சென்னையிலேயே பழையவர்களையெல்லாம் தோல்வியைத் தழுவ வைத்த மக்கள், இளையவரான உதயநிதி ஸ்டாலினை வெற்றி பெற வைத்துள்ளனர்.
Thursday, May 28, 2026
நாம் அறிந்திராத யாழ்ப்பாண நகரின் மறுபக்கங்கள் - பகுதி 1, பகுதி 2 & பகுதி 3
''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' - எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ்!
''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' என்று குறிப்பிட்டு, என் பால்யப் பருவத்து நண்பரும், ஶ்ரீராம...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...


