Thursday, September 24, 2026

கனடாவில் தமிழ் முதியவர்கள்!


கனடாவில் வசிக்கும் முதியவர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா நண்பர்களே! அவ்வப்போது முதியவர்கள் மாடியிலிருந்து பாய்ந்து தம்முயிரைப் போக்கும் செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பிள்ளைகள் முதியவர்களின் ஓய்வூதியங்கள், சமூக உதவிக் கொடுப்பனவுகளைக் கையாடல் செய்வதாக அவ்வப்போது செய்திகளைக் கேள்விப்படுகின்றோம். முதியவர்கள் உழைத்து வாங்கிய வீடுகளிலிருந்து முதியவர்கள் இல்லங்களுக்கு வலிந்து அனுப்பப்படுவதாகம் கேள்விப்பட்டிருக்கின்றோம். முதியவர்கள் பலர் ஓய்வூதியம் பெற்ற நிலையிலும் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருப்பதையும் அறிந்திருக்கின்றோம்.  முதியவர்களைக் குழந்தைகள் தம் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்யுமாறு வறுபுறுத்துவது பற்றியும் அறிந்திருக்கின்றோம்.

கனடிய அரசிடமிருந்து, டிரில்லியம் அறக்கட்டளையிலிருந்து இலட்சக்கணக்கில் நிதியுதவி பெறும் முதியவர்கள் நலன்களை மையமாக வைத்து இயங்கும் அமைப்புகள் இவ்விடயங்களிலும் கவனம் எடுத்து முதியவர்களுக்கு உதவியிருக்கின்றனவா?

Wednesday, September 23, 2026

நூல் பெயர்: குற்றமும் தண்டனையும் (பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு) ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி


[Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.]

[செயற்கை நுண்ணறிவு தயாரித்தது] ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) நூலின் பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு விவரங்களும் அறிமுகமும் 

புத்தகத் தகவல்கள்

நூலை வாங்க  - https://amzn.to/4xJrzR7

நூல் பெயர்: குற்றமும் தண்டனையும் (பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு)
ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி
மொழிபெயர்ப்பாளர், அறிமுகம் மற்றும் ஆசிரியர்: ஆலிவர் ரெடி மற்றும் ஒருவர்
வடிவம்: பேப்பர்பேக் (Paperback)

மதிப்பீடுகள்: 5க்கு 4.6 நட்சத்திரங்கள் (635 பேர்), குட்ரீட்ஸ் (Goodreads) தளத்தில் 4.3 (1,160,185 மதிப்பீடுகள்).  விலை: $23.00 (அமேசான் சலுகை விவரங்களுக்கு உட்பட்டது)

விமர்சனமும் கதைக் களமும்

மதிப்புரை: "உண்மையிலேயே ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு... இந்த ஆங்கிலப் பதிப்பு உண்மையில் மிகச் சிறந்தது." — ஏ. என். வில்சன், தி ஸ்பெக்டேட்டர்.
கதை நாயகன்: ரஸ்கோல்னிகோவ் என்ற ஏழை மற்றும் விரக்தியான முன்னாள் மாணவன்.

களப் பின்னணி: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் சேריப் பகுதிகளில் அவன் அலைகிறான்.தண்டனை: அவன் ஒரு கொலையைச் செய்கிறான். அவனுடைய சொந்தக் குற்ற உணர்ச்சி அவனைக் கருக்குழியில் தள்ளுகிறது.

மீட்பு: சோனியா என்ற எளிய பெண் மட்டுமே அவனுக்கு மீட்புக்கான வழியைக் காட்டுகிறாள்.

பெங்குயின் கிளாசிக்ஸ் சிறப்பு
65 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறந்த இலக்கியங்களை வழங்கி வருகிறது.
1,500 க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டுள்ளது. புகழ்பெற்ற அறிஞர்களின் முன்னுரைகள் மற்றும் குறிப்புகளுடன் நம்பகமான நூல்களை வாசகர்களுக்கு அளிக்கிறது.

நூலை வாங்க  - https://amzn.to/4xJrzR7

(என் ஆரம்பகாலச் சிறுகதைகளில் ஒன்று) சிறுகதை: போரே! நீ போய் விடு! - வ.ந.கிரிதரன் -


[- வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது.  இச்சிறுகதை வீரகேசரியில் பிரசுரமானதா இல்லையா என்பது தெரிய்வில்லை. - ]


1.

வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று  குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது.  திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது.  மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் ... கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்... மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்... இம்மண்ணினழகே தனிதான்.

மழையுடன் போட்டி போட்டபடி 'ஓ..வ்..வ்..'வென்று காற்று வேறு பெரிதாக அடிக்கத்தொடங்கிவிட்டிருந்தது. வானம் இருண்டுபோய் கன்னங்கரேலென்று பெரும் பிரளயமே வந்து விடுவது போன்றதொரு தோற்றத்தில் அந்தப்பிரதேசம் மூழ்கிக்கிடக்கின்றது.ஆன்லைன் வலைப்பூ உருவாக்கு

முள்ளியவளைக்கும், மாங்குளத்துக்கும் இடையில், நெடுங்கேணியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்திருந்த அந்தச்சிறு கிராமத்தில் இருந்த ஒரேயொரு பாடசாலைக்குத் தமிழ் வாத்தியாராகக் கருணாகரன் வந்து ஒருவருடம்  என்ன மாதிரி போனதென்றே தெரியவில்லை. நேரம் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Tuesday, September 22, 2026

லண்டனில் எஸ். அகஸ்தியர் நூற்றாண்டு விழா! - நவஜோதி ஜோகரட்னம் -


எழுத்தாளர் அகஸ்தியரின் நூற்றாண்டு விழா அண்மையில் இலண்டனில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சி பற்றிய  குறிப்பினை அவர்தம் மகளும், எழுத்தாளருமான நவஜோதி ஜோகரட்னம் பதிவுகள் இணைய இதழில் எழுதியிருந்தார். அதனை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

லண்டனில் எஸ். அகஸ்தியர் நூற்றாண்டு விழா!  - நவஜோதி ஜோகரட்னம்  -

   அகஸ்தியரின் 100ஆவது நூற்றாண்டு விழாவும் அவர்பற்றிய நினைவுகள் குறித்த ‘இலங்கையின் குறுமுனி தரிசனங்கள் (1926-2026) என்ற நூல் வெளியீடும் லண்டன் சென் அன்ருஸ் கோயில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இலக்கிய ஆர்வலர்கள்;, ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உறவினர்கள் மத்தியில், அகஸ்தியருக்குப்; பக்க துணையாகச் செயற்பட்ட அவரது மனைவி நவமணி அவர்களை அங்கு கௌரவித்தமை மிகுந்த கவனிப்புக்குரியதாகியது.

வ.ந.கிரிதரன் கட்டுரைகள் (தொகுப்பு மூன்று) அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது!


எனது கட்டுரைகளின் மூன்றாவது தொகுப்பான 'வ.ந.கிரிதரன் கட்டுரைகள் (தொகுப்பு மூன்று)' தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது.
முதலாவது தொகுப்பு (14 கட்டுரைகள்) இலங்கையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளியானது.
இரண்டாவது தொகுப்பு (52 கட்டுரைகள்) பதிவுகள்.பதிப்பக வெளியீடாக .அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளியானது.
தற்போது இந்த மூன்றாவது தொகுப்பு (52 கட்டுரைகள்) பதிவுகள்.காம் வெளியீடாக , அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது.
முதலாவது, இரண்டாவது தொகுப்புகள் நூலகம் தளத்திலும், இணையக் காப்பகத்திலும் (archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை அங்கிருந்து தரவிறக்கி அல்லது அங்கேயே வாசிக்கலாம்.
அமேசன் - கிண்டில் மின்னூலுக்கான இணைப்பு - https://www.amazon.com/dp/B0HKQ2VLJW

Monday, September 21, 2026

வ.ந.கிரிதரன் பாடல் : குருமண் காடே!


வ.ந.கிரிதரன் பாடல் : குருமண் காடே!
வ.ந.கிரிதரன் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5. AI.
ஓவியம் - கூகுள் நனோ பனானா  வழி வநகி 

என் 'குருமண்காட்டு நினைவுகள்' என்னும் நெடுங் கவிதை  இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். 


நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோய்கின்றேன்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)


'கடற்புள்ளே (வ.ந.கிரிதரனின் பாடல்கள் தொகுப்பு மூன்று)

'கடற்புள்ளே!' எனது முகநூல், யு டியூப் சானல்களுக்காக எழுதப்பட்ட என் பாடல்களின் மூன்றாவது தொகுப்பு. 45 பாடல்களை உள்ளடக்கியது. அண்மையில் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியான இந்த மின்னூல் தற்போது நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நூலை வாசிக்க -


எனது, 'வ.ந.கிரிதரனின் பாடல்கள்' , யு டியூப் சானலில் , SUNO 5.5 செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. இங்குள்ள பாடல்கள் அந்தச் 'சான'லுக்காக எழுதப்பட்டவை. நேரம் கிடைக்கும்போது சென்று கேளுங்கள். ஆரோக்கியமான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளூங்கள். பிடித்திருந்தால் 'சான'லை subscribe செய்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நான் பதிவிடப் போகும் பாடல்களைக் கேட்பதற்கு அது உதவியாகவிருக்கும். பாவிக்கப்பட்ட ஓவியங்கள் கூகுள் நனோ பனானா , சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை.

எனது யு டியூப் சானலுக்கான இணையத்தள முகவரி: https://www.youtube.com/@girinav1

வ.ந.கிரிதரனின் தமிழ்ப் பாடல் வரிகள்: இருப்பு பற்றிய விசாரம்!

வ.ந.கிரிதரனின்  தமிழ்ப் பாடல் வரிகள்:  இருப்பு பற்றிய விசாரம்! வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5.AI ஓவியம் - செயற்கை நுண்ணறி...