வ.ந.கிரிதரனின் தமிழ்ப் பாடல் வரிகள்: இருப்பு பற்றிய விசாரம்!
வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5.AI
ஓவியம் - செயற்கை நுண்ணறிவு
என்னை எப்போதும் அலைக்கழிக்கும் கேள்வி
என்னிருப்பின் அர்த்தம் என்ன என்பதுதான்.
இங்கு வந்து ஏன் பிறந்தோம்?
இதன் அர்த்தம்தான் என்ன? என்ன?
இதற்கு விடை கிடைக்கப் போவதில்லை.
இது நான் அறிந்த ஒன்றுதான்.
அர்த்தம் அற்ற இருப்பின் பின்னே
அர்த்தம் உண்டு என்பதை நம்புவேன்.
அதனால் எப்போதும் இருப்பினை நான்
என்னை எப்போதும் அலைக்கழிக்கும் கேள்வி
என்னிருப்பின் அர்த்தம் என்ன என்பதுதான்.
முடிவற்ற பெருவெளி பிரமிப்பைத் தரும்.
வடிவமும் ஒரு மாயைதானா என்றே
அடிக்கடி எண்ணம் உதிக்கும். அலைக்கழிக்கும்.
உருவமும் உணர்வும் தொடர்பு உள்ளவைதாமா?
படிப்பதற்கு இன்னும் அதிகம் உண்டா?
பரந்து கிடக்கும் பெருவானும் சுடர்களும்
தரும் அறிவுச்செல்வம் தெளிவு தருமா?
இருப்பின் புதிரை அவை தீர்க்குமா?
என்னை எப்போதும் அலைக்கழிக்கும் கேள்வி
என்னிருப்பின் அர்த்தம் என்ன என்பதுதான்.
என்னை மீறிய பரிமாணங்கள் இருப்பின்,
எப்படி என்னால் உணர முடியும்?
எல்லையென் இருப்புக்கு உண்டு என்பதையும்
என்னால் உணர முடிகிறது என்பேன்.
தன்னை அறிதல் என்றால் என்ன?
தன்னிருப்பை அறிதலா அல்லது மீறுதலா?
அறிதலுக்கும் எல்லை உண்டு அல்லவா.
மீறிட முடியுமா பரிமாணச் சுவர்களை?
என்னை எப்போதும் அலைக்கழிக்கும் கேள்வி
என்னிருப்பின் அர்த்தம் என்ன என்பதுதான்.
No comments:
Post a Comment