Sunday, October 18, 2026
தேனிசைத்தென்றல் தேவா மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!
இந்த ஒரு பாட்டு போதும் இருப்புள்ளவரை இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவாவை நினைவு கூர்வதற்கு. https://www.youtube.com/watch?v=KXM7nVYIn9csu
'பொற்காலம்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இசை, பாடகரின் குரல், பாடல் வரிகள், நடிப்பு அனைத்துமே சிறப்பாக அமைந்த பாடல்களில் ஒன்று இந்தப்பாடல். ஒளிப்பதிவும் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
இப்பாடலுக்கு இன்னுமொரு முக்கியத்துவம் உண்டு. அது: சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ் .ஆர்.நாதனுக்கு இப்பாடல் மிகவும் விருப்பம், அதன் காரணமாக அவரது கடைசி ஆசை - தான் இறந்தால் தனது இறுதிச் சடங்கில் இந்தப்பாடல் ஒலிக்க வேண்டும். அவரது இறுதிச் சடங்கை நடத்திய சிங்கப்பூர் அரசு , இறந்த அதிபரின் இறுதிச் சடங்கின் ஆரம்பத்தில் இப்பாடலை ஒலிக்கச் செய்து மறைந்த அதிபரின் ஆசையை நிறைவேற்றியது.
'தேனிசைத்தென்றல்' தேவா அவர்களுடன் நடிகர் முரளியையும் கூடவே நினைவு கூர்வோம்.
பாடலை எழுதியிருப்பவர் - கவிஞர் வைரமுத்து. நடிப்பு - முரளி & மீனா. பாடகர்- கிருஷ்ணராஜ். படம் - பொற்காலம். @highlight
https://www.youtube.com/watch?v=KXM7nVYIn9csu
Subscribe to:
Post Comments (Atom)
தேனிசைத்தென்றல் தேவா மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!
இந்த ஒரு பாட்டு போதும் இருப்புள்ளவரை இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவாவை நினைவு கூர்வதற்கு. https://www.youtube.com/watch?v=KXM...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
No comments:
Post a Comment