தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அல்லது எண்பதுகளின் இறுதியில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி டொரோண்டோ வந்திருந்தார். அவருடனான கலந்துரையாடலொன்றைத் தேடகம் அமைப்பினர் டொரோண்டோப் பல்கலைக்கழக மண்டபமொன்றில் ஏற்பாடு செய்திருந்தனர்.
எழுத்தாளர் குமார் மூர்த்தி தலைமையில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்கலந்துரையாடலில் எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றி, அவரது 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் சு.ரா அவர்கள் தெரிவித்திருந்த கருத்தினையொட்டி நான் வினாத்தொடக்க, 'தேடகம்' சிவா அவர்கள் தொடர, வாதப்பிரதிவாதமொன்று வெடித்தது.
அப்போது என்னிடமிருந்த கமரா மூலம் எடுத்த புகைப்படமொன்று சு.ரா அவர்கள் பேசுவதையும், எழுத்தாளர் குமார் மூர்த்தி அருகில் இருப்பதையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. ஆனால் அப்புகைப்படம் சு.ரா அவர்களை ,நிலைக்குத்தான நிலையில் அரைவாசிப் பகுதியை மட்டுமே காட்டி நின்றது. மிகுதி கரிய நிறத்தால் மூடப்பட்ட நிலையில் சிதைந்திருந்தது.
அப்புகைப்படத்தைக் கூகுள் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் மூலம் பூர்த்தி செய்து தரும்படி கேட்டபோது சு.ரா அவர்களை முழுமையாக்கித் தந்தது. அவருடைய ஏனைய புகைப்படங்களுடன் ஒப்பிட்டுத்தான் எவ்வளவு தூரம் செயற்கை நுண்ணறிவு தன் முயற்சியில் வெற்றியடைந்துள்ளது என்பதைக் கூற முடியும். கூடவே பின்புறமிருந்த ஜன்னலுடன் கூடிய சுவரையும் பூர்த்தி செய்திருந்தது.

No comments:
Post a Comment