Friday, March 19, 2021

வ.ந.கிரிதரனின் 'கணவன்' (Husband Short Story by V.N.Giritharan Summary) - Witty Garden -

சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத்தில் பல்வேறு தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. மின்னூல்களாகப் பல படைப்புகளுள்ளன. எனது படைப்புகள் பலவற்றை வாசகர்கள் தாமாகவே இனங்கண்டு அவற்றைப்பற்றி எழுதியுள்ளார்கள். பல்கலைகழகங்களில் ஆய்வுகள் செய்துள்ளார்கள். தற்போதும் மாணவியொருத்தர் முனைவர் பட்டப்படிப்புக்காக ஆய்வுகள் செய்து வருகின்றார். எழுத்தாளர்கள், கலை,இலக்கிய விமர்சகர்கள், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் என என்னுடன் தொடர்பு கொண்ட பலரும் இணையத்தில் வெளியான எனது படைப்புகள் வாயிலாக என்னை அறிந்து தொடர்பு கொண்டவர்கள்தாம். நான் ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால்.. இன்னும் எழுத்தாளர்கள் பலர் இணையத்தின் ஆரோக்கியமான பயன்பாட்டினை அறியாமல் , அவற்றைப்பாவிக்காமல் இருக்கின்றார்கள் என்பதனால்தான். மேலும் அவர்கள் தம் படைப்புகளை வெளிப்படுத்துவதற்குக் கலை,இலக்கிய ஆளுமைகளின் அங்கீகாரத்தை எண்ணிச் செயற்படுவதுதான். உங்களுக்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. உங்கள் படைப்புகளை இணையத்தில் வலைப்பதிவுகளில், இணைய இதழ்களில் பதிவேற்றுங்கள். அவை வாசகர்களை நேரில் சென்றடையும். உங்கள் படைப்புகள் தரமாக இருந்தால் நிச்சயம் இன்றோ அல்லது நாளையோ அல்லது என்றோ நிச்சயம் அது உரிய வாசகர்களைச் சென்றடையும் என்பது மட்டும் நிச்சயமானது. 
 
சரி இனி விடயத்துக்கு வருகின்றேன். பல வருடங்களுக்கு முன்னர் , தொண்ணூறுகளில் கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' சஞ்சிகையில் எனது சிறுகதையான 'கணவன்' வெளியானது. அச்சிறுகதை பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் வெளியானது. அண்மையில் அச்சிறுகதை மீண்டும் என் கவனத்தை ஈர்த்தது. அவ்வப்போது நான் கூகுளில் என் படைப்புகள் எங்கெல்லாம் இணையத்திலுள்ளன என்பதை அறிவதற்காக நான் தேடிப்பார்ப்பதுண்டு. அவ்விதமான தேடலொன்றில் அகப்பட்டதுதான் 'Witty Garden' என்னும் இந்த 'யு டியூப் சானல்'! இந்தச் 'சான'லில் எனது சிறுகதையான மேற்படி 'கணவன்' சிறுகதையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கணவன் சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணையத்திலுள்ளது. எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ளார். அதனூடு என் கதையைக் கண்டறிந்துள்ளதையும் மேற்படி காணொளியின் மூலம் அறிய முடிகின்றது. ஒலி வடிவில் அக்கதை அறிமுகத்தைக் கேட்பதும் சுவாரசியமானதோர் அனுபவம்தான், நீங்களும் கேட்டுப்பாருங்களேன். 
 
 Husband Short Story by V.N.Giritharan Summary: https://www.youtube.com/watch?v=1I-_WztAltM  
 
சிறுகதையை வாசிக்க: https://vngiritharan230.blogspot.com/2020/02/13.html#more

4 comments:

Witty Garden said...
This comment has been removed by the author.
Witty Garden said...

மிக்க நன்றி ஐயா! இன்றுதான் தங்களின் இந்த உரையை காண நேரிட்டது. நீங்கள் எங்கள் சேனலுக்கு (Witty Garden) வழங்கிய அங்கீகாரம் மிகப்பெரியது. நெஞ்சார்ந்த நன்றி ஐயா. எதிர்காலத்தில் உங்கள் படைப்புகளில் நாங்கள் அதிகம் பணியாற்றுவோம். உங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் மேலும் உலகறியச் செய்வோம். தங்களுக்கும் தங்களது படைப்புகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு என்றும் தேவை ஐயா.

நன்றிகளுடன் Witty Garden

Unknown said...

மனிதனின் உள்ளுணர்விற்கு பதிலளிக்கும் விதமாகவும் ஒரு திருப்புமுனையாகவும் இக்கதை அமைந்துள்ளது மிகச் சிறப்பு. நன்றி!! அதனை ஒலி வடிவில் தந்த யூடியூப் சேனல் Witty Garden க்கும் நன்றி.

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...


Blogger Witty Garden நன்றி உங்கள் ஆர்வத்துக்கும், கருத்துக்கும். உண்மையில் என் சிறுகதையை நீங்கள் கூறும் முறை சுவாரசியமாகவுள்ளது. வாழ்த்துகள்.

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்