'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Tuesday, May 13, 2025
யாழ்ப்பாணம் வேறு! நல்லூர் வேறு! மேலுமொரு முக்கிய வரலாற்றுத் தகவல்! - வ.ந.கிரிதரன் -
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்னும் எனது நூலின் இரண்டாவது அத்தியாயம் 'நல்லூரும் யாழ்ப்பாணமும்! இதில் நல்லூரும் ராஜதானியும் ஒன்று என்பார்கள் கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் என்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோர் அவை இரு வேறானவை என்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டி, அவற்றில் தர்க்க நியாயங்களின் அடிப்படையில் முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா ஆகியோரின் கருத்தான நல்லூரும், யாழ்ப்பாணமும் வேறானவை என்னும் என் கருத்தை முன் வைத்திருப்பேன்.
நான் மீண்டும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வினை மீண்டும் கனடாவிலிருந்து எழுதிய காலகட்டடத்தில் என்னிடமும் இந்நூல் இருக்கவில்லை. ஏனயோர் எழுதிய குறிப்புகளின் அடிப்படையிலெயே என் தர்க்கத்தை முன் எடுத்திருந்தேன். அதன்படி முதலியார் செ.இராசநாயகம், கலாநிதி க.செ. நடராசா ஆகியோரின் கூற்றுக்களுக்கமையவும், அவர்களின் தர்க்கத்தின் அடிப்படையிலும், கைலையமாலையில் யாழ்ப்பாணம், நல்லூர் ஆகியவைத் தனித்தனியாகக் குறிப்பிடப்படுவதன் அடிப்படையிலும், நல்லூர் வேறு, யாழ்ப்பாணம் வேறு என்னும் முடிவுக்கு வந்திருந்தேன். அண்மையில் மீண்டும்பதினாறாம் நூற்றாண்டுப் போர்த்துக்கேயரின் நூலான 'The Temporal And Spiritual Conquest Of ceylon என்னும் நூலை மீண்டும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அதனை எழுதியிருப்பவர் Fernao De Queyroz. ஆங்கில மொழிபெயர்ப்பு - S.G.Perera. இந்நூலில் மேற்படி கேள்விக்கான பதில் தெளிவாகவுள்ளது. சுவாமி ஞானப்பிரகாசரின் கண்களிலிருந்தும், கலாநிதி சி.க.சிற்றம்பலத்தின் கண்களிலிருந்தும் இது தப்பி விட்டது. முதலியார் செ.இராசநாயகத்தின் பார்வையிலிருந்தும், கலாநிதி க.செ.நடராசாவின் பார்வையிலிருந்தும் இது தப்பி விட்டது. பட்டிருந்தால் அவர்களும் இதனைச் சுட்டிக் காட்டியிருப்பார்கள். ஆயினும் இது அவர்கள்தம் பார்வைகளில் படாமலிருப்பினும் , அவர்கள் ஊகம் சரியானதாகவே அமைந்திருக்கின்றது.
தற்போது மேற்படி நூலின் மீதான மீள்வாசிப்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமான நல்லூரும் , யாழ்ப்பாணமும் வேறு வேறான நகர்கள் என்னும் உறுதி செய்யும் கூற்று இந்நூலின் 27ஆம் அத்தியாயத்திலுள்ள 353ஆம் பக்கத்திலுள்ளது. அது இதுதான்:
".. ...... the other half a league from the city of Nelur, called patanao, where there was less danger,.. ." (The Temporal And Spiritual Conquest of ceylon; பக்கம் 353)
மேற்படி அத்தியாயத்தின் தலைப்பு - Chapter 27 Other Successes of this war and the expedition of the Viceroy to Jafanapatao (Page 347)
பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில் நிகழ்ந்த , பதினாறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த போர்த்துகேயரின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள் பற்றியெல்லாம் இந்நூலில் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன. பதினாறாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் ஏனைய போர்த்துகேயரின் குறிப்புகளின் அடிப்படையில் விபரிக்கப்பட்டுள்ளன. இக்குறிப்பின்படி Nelur (நல்லூர் நகர்) நகரிலிருந்து அரை லீக் தொலைவிலுள்ள Patanao ( Jafanapatao - யாழ்ப்பாணப் பட்டினம்) என்பதை அறிய முடிகின்றது. இது முக்கியமான வரலாற்றுக் குறிப்பு. இதன்படி யாழ்ப்பாணப் பட்டினம் என்பது நல்லூர் நகரிலிருந்து அரை லீக் தொலைவிலுள்ள பட்டினம். யாழ்ப்பாணம் வேறு. நல்லூர் வேறு என்பதைத் தெளிவாக்கும் கூற்று இது.
Subscribe to:
Post Comments (Atom)
மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment