Sunday, May 25, 2025
அஞ்சலி: மறக்க முடியாத பேராசிரியர் நிமால் டி சில்வா!
பேராசிரியர் நிமால் டி சில்வா மறைந்த செய்தியினை என்னுடன் கட்டடக்கலை படித்த சக கட்டடக்கலை மாணவர்கள் அறியத்தந்திருந்தனர். ஆழ்ந்த இரங்கல். இவரை ஒரு விதத்தில் மறக்க முடியாது. அமைதியானவர். எப்போதும் மெல்லிய புன்னகையுடன் காணப்படுபவர். அன்பாக உரையாடுபவர். பாரம்பர்யக் கட்டடக்கலை என்னும் பாடத்தை எமக்குப் படிப்பித்தவர் இவர். நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலை எழுதுவதற்கு இவரும் ஒரு காரணம்.
இவர் றோலன்ட் சில்வா என்பவரின் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு என்னும் கட்டுரையை அறிமுகப்படுத்தியபோது அது என்னைப் பிரமிக்க வைத்தது. அநுராதபுர நகரம் பெளத்தர்களின் புனித நகர். இலங்கையின் ஆரம்ப ராஜதானிகளில் ஒன்று. பல புகழ்பெற்ற தாதுகோபங்களை உள்ளடக்கிய நகர். யாழ்தேவியில் கொழும்பு செல்லும் எவரும் அநுராதபுர நகரின் தாதுகோபங்களைக் காணாமல் செல்ல முடியாது. ரொலனட் டி சில்வாவின் ஆய்வின்படி பண்டைய அநுராதபுர நகரமானது நடுவில் சந்தையையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் தாதுகோபங்களையும் கொண்டதாக விளங்கியது. என் கண் முன்னால் பண்டைய அநுராதபுர நகரம் விரிந்து பிரமிப்பைத்தந்தது.
பெளத்தர்களின் கட்டக்கலையில் வட்டம் முக்கிய பங்கினை ஆற்றுமொன்று. தாதுகோபங்கள் வட்ட வடிவமானவை. அது போல் நகரங்களின் நகர அமைப்பிலும் வட்ட வடிவம் ஆதிக்கம் செலுத்தியதை ரோரல்ன் சில்வாவின் அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய கட்டுரை புலப்படுத்தும். மாறாக, இந்துக்கள் கட்டடக்கலையில் சதுர (அல்லது செவ்வகம்) வடிவம் ஆதிக்கம் செலுததுவதை அவதானிக்கலாம்.மேற்படி அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய அந்தக் கட்டுரையே எனக்கு நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராய வேண்டுமென்ற ஆர்வத்தினை ஏற்படுத்தியது. இதனை அந்நூலுக்கான முன்னுரையில் நான் குறிப்பிட்டுள்ளேன். இணையத்தின் வருகைக்குப் பின்னர் அவருடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டிருந்தபோது அவர் தன் முகவ்ரியினை அறியத்தந்திருந்தார். அவருக்கும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பினை அனுப்பியிருந்தேன். நல்லூர் ராஜதானியின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியானபோது அதனையும் அனுப்பினேன்.
அவரது மறைவு பற்றிய செய்தி மேற்படி நினைவுகளை மீள எழுப்பி விட்டன. மீண்டுமொரு தடவை ஆழ்ந்த இரங்கல்.
Subscribe to:
Post Comments (Atom)
மகாகவி பாரதியார் பாடல் - சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ! இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி ஆக்கியவர் - வ.ந.கிரிதரன்
மகாகவி பாரதியார் பாடல் - சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ! இசை & குரல்: SUNO AI ஓவியம்: சாட் ஜிபிடி வழி வநகி ஆக்க...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

No comments:
Post a Comment