Friday, May 16, 2025

வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' - திருத்திய இரண்டாம் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு


வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' -  திருத்திய இரண்டாம் மின்னூற் பதிப்பு அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது.  இதன் பிடிஃஃப் கோப்பினை இணையக் காப்பகத்திலிருந்து பதிவிறக்கி வாசிக்கலாம். இணைப்புகள் இறுதியில் தரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதித்தலைநகர் நல்லூர். நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்வாறிருந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வு நூலிது. வரலாற்றுத் தகவல்கள், இடப்பெயர்கள் மற்றும் பழந்தமிழர்தம் கட்டடக்கலை, நகர அமைப்புக் கோட்பாடுகள் ஆகிவற்றின் அடிப்படையில் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்வாறிந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வு. இத்துறையில் வெளியாகியுள்ள முதனூல். இது மேலும் பல ஆய்வுகளுக்கு வழி வகுக்கும்.

இதன் முதற் பதிப்பு ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு), மங்கை பதிப்பகம் (கனடா) ஆகியவற்றின் வெளியீடாக 1996இல் வெளியானது. இதன் திருத்திய பதிப்பு தற்போது மின்னூலாக வெளிவருகின்றது.  விரைவில் அச்சு வடிவிலும் வெளிவரவுள்ளது.உள்ளடக்கம்

முன்னுதாரணமான முயற்சி - செ. யோகநாதன்  - (நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்புக்கு எழுதிய அணிந்துரை)    4
என்னுரை! (நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்புக்கு எழுதிய என்னுரை)    8
அத்தியாயம் ஒன்று: நல்லூரும் சிங்கை நகரும்!    11
அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!    13
அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!    17
அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!    19
அத்தியாயம் ஐந்து: நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!    21
அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!    24
அத்தியாயம் ஏழு: 'கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும்'    29
அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!    31
அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்!    35
அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!    39
அத்தியாயம் பதினொன்று: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு!

பின்னிணைப்பு

1. கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம்! - வ.ந.கிரிதரன் -
2. ஆய்வு: கோப்பாய்க் கோட்டை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
3. யாழ்ப்பாணம் வேறு! நல்லூர் வேறு! மேலுமொரு முக்கிய வரலாற்றுத் தகவல்! - வ.ந.கிரிதரன் -
4. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு  - வ.ந.கிரிதரன் -
5 .நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல் (முதற் பதிப்பு) பற்றி வெளியான கட்டுரைகள் :
கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு ! - – கத்யானா அமரசிங்ஹ | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் -

மின்னூலை அமேசன் தளத்தில் வாங்க - https://www.amazon.com/dp/B0F8S6B6R4
இணையக் காப்பகத்தில் வாசிக்க -  https://archive.org/details/vng_nallura_rajadhani_city_layout_second_edition-10/page/64/mode/2up?view=theater

No comments:

கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!

இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால...

பிரபலமான பதிவுகள்