இங்குள்ள கல்கி சஞ்சிகையின் ஓவியர் விஜயா வரைந்த அட்டை ஓவியத்துக்குச் சிறப்பொன்றுண்டு. பொதுவாக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாகும் புனைகதைகளுக்குத்தான் ஓவியங்கள், அட்டை ஓவியங்கள் வரைவார்கள். ஆனால் இங்குள்ள அட்டை ஓவியமோ அபுனைவில் குறிப்பிடப்படும் புனைகதையொன்றில் இடம் பெறும் காட்சிக்காக வரையப்பட்ட ஓவியம்.
Friday, July 23, 2021
மணிமேகலையின் காதல்!
அதுவரை நாவலில் வரும் முக்கிய பாத்திரங்கள் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, பெரிய/சின்ன பழுவேட்டைரையர்கள், பூங்குழலி, சேந்தன் அமுதன்., ஆழ்வார்க்கடியான், அருண்மொழிவர்மன், நந்தினி. மந்தாகினி. ஆனால் நாவலின் முடிவு முக்கியப்படுத்துவது வந்தியத்தேவனையும் , அதுவரை அதிகம் முக்கியப்படுத்தப்படாமலிருந்த கடம்பூர் சம்புவரையரின் புத்திரியான மணிமேகலையையும்தாம்.
Tuesday, July 20, 2021
வ.ந.கிரிதரனின் 'கண்ணம்மா'க் கவிதைகள் (1): காலவெளிக் கைதிகள்!
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா
சிந்திக்க விரும்புகின்றேனடி.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையடி கண்ணம்மா.
காலத்தால் அழியாத கானம்: "மயக்கும் மாலைப்பொழுதே நீ போ"
குலேபகாவலி (1955) திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இப்பாடலைப் பாடியுள்ளவர்கள் ஜிக்கி & ஏ.எம்.ராஜா. இப்பாடலை எழுதியவர் எழுத்தாளர் விந்தன். கூண்டுக்கிளிக்காக எழுதிய பாடலிது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன். ஆனால் இப்பாடல் இடம் பெற்றதோ குலேபகாவலி திரைப்படத்தில். அதன் இசையமைப்பாளர் விஸ்வநாதன் & ராமமூர்த்தி இரட்டையர்கள். அதனால் இப்பாடலின் இசையையும் அவர்கள் பெயரில் போட்டுவிட்டார் தயாரிப்பாளரான ஆர்.ஆர்.பிக்ஸ்சர்ஸின் உரிமையாளரான டி.ஆர்.ராமண்ணா.
காலத்தால் அழியாத கானம்: "வித்தாரக் கள்ளியெல்லாம் விறகு வெட்டப் போகையிலே"
"கையைத் தொட்டதும் மெய்யைச் சிலிர்க்குதே.
காதலின் வேகம் தானா?
அந்திக் காலத்தின் யோகம்தானா?
அனுராகத்தின் யோகம்தானா?" - கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் -
எம்ஜிஆருக்கு மாறு வேசங்கள் பொருந்துவதைப்போல் வேறெந்த நடிகருக்கும் பொருந்துவதில்லை. பல படங்களில் மாறு வேடங்களில் வந்து அவர் பாடும் பாடல்கள் பல கருத்தாழம் மிக்கவை. ஆனால் 'குலேபகாவலி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடல் ஒரு காதற் பாடல். இதில் எம்ஜிஆருடன் நடித்திருப்பவர் நாற்பதுகளில், ஐம்பதுகளில் தமிழ்த்திரையுலகின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி. (இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் சகோதரி. சென்னையில் நீண்ட காலம் இயங்கிய ராஜகுமாரி திரையரங்கின் உரிமையாளர்.)
'பதிவுகள்' இணைய இதழின் ஊடகத்தகவற் தொகுப்பு (Media Kit)
எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக் கொண்டு , "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரமாகக்கொண்டு 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணையத்தமிழ் இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை https://www.geotamil.com , https://www.pathivukal.com ஆகிய இணையத்தள முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் ngiri2704@rogers.com அல்லது editor@pathivukal.com என்னும் மின்னஞ்சல் முகவரிகளிலொன்றுக்கு அனுப்பி வையுங்கள்.
Wednesday, June 2, 2021
பொலனறுவை வானவன்மாதேவி ஈஸ்வர ஆலயச் சிற்பங்கள்! - வ.ந.கிரிதரன் -
அண்மையில் பொலனறுவைக்குச் சென்றிருந்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க
அங்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த (20
19) 'பண்டைத் தொழில்நுட்ப
அருங்காட்சியக'த்துக்குச் (Ancient Technology Museum) சென்றிருக்கின்றார்.
அங்கு சேகரிக்கப்பட்டிருந்த , சோழர்களின் காலத்தில் , பொலனறுவை இலங்கையின்
இராஜதானியாக விளங்கிய சமயத்தில் கட்டப்பட்ட வானவன் மாதேவி
ஈஸ்வரமென்றழைக்கப்படும் சைவ ஆலயத்தின் மாதிரி, மற்றும் அந்த ஆலயத்திலிருந்த
நடராஜர், பார்வதி, அப்பர் , பிள்ளையார் சிலைகள் ஆகியவற்றைப் படமெடுத்து
அனுப்பியிருந்தார். அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
Subscribe to:
Posts (Atom)
[எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிக் கூகுள் ஜெமினி செயற்கை நுண்ணறிவின் கருத்துகளைக் கூறும்படி கேட்டேன். அதன் கருத்துகளைக் கீழே தந்திர...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...

