Monday, July 29, 2024

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா. - வ.ந.கிரிதரன் -


 


- இசை & குரல்; AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=iMsm8VIEsSY

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

எதை நீ கேட்டாலும்
எதை நீ வாசித்தாலும்
அதை நீ அப்படியே
நம்பி விடாதே நண்பா.
நம்பி விடாதே நண்பா.

பகுத்தறிந்து பார்  முதலில்.
பின்பு முடிவு செய் நண்பா.
பகுத்தறிவு சரி பிழை காட்டும்.
பகுத்தறிவு உண்மை  பொய் காட்டும்.
பகுத்தறிவு ஏற்றம் தரும். இங்கு
பகுத்தறிவு மாற்றம் தரும்.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே - வ.ந.கிரிதரன்



- இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதையான 'அறிந்தால் அறிவியடி அருவியே!' என்னும் கண்ணம்மாக் கவிதை இங்கு 'அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே' என்று கண்ணாக் கவிதையாக மாற்றம் பெற்றுள்ளது. . யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=dU8drlIPfLY

கண்ணா!
அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடா நம்காலவெளி.
ஆம்!

கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடா.

கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணா

கண்ணா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடா!

அறிந்தால் அறிவியடி அருவியே! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=jYECMABfJno


கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!

கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.

கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!

கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!

இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.

நகரைச் சுத்தமாக்குவோம். - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=SfMaqvmYcPs
    
நகரைச் சுத்தமாக்குவோம். வாழும்
நகரைச் சுத்தமாக்குவோம்.

குப்பை கூளங்கள் போடாதீர்.
கிருமிகள்  பெருகிடச் செய்யாதீர்.
எப்பொழுதும் சுத்தமாக நகர்தனை
வைத்திருப்போம். நாம் வைத்திருப்போம்.

சூழலைப் பாதுகாப்போம். நாம்
சூழலைப் பாதுகாப்போம்.
சூழற் பாதுகாப்பு வாழ்வைச்
சீரமைக்கும், நலமாக்கும்.

யாழ் பொதுசன நூலக நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில்  கேட்க - https://www.youtube.com/watch?v=zw_bRYpmaNw

யாழ் பொதுசன நூலகத்தில்
வாழ்நாளில் கழித்த பொழுதுகளை
எப்படி மறப்பேன். எப்படி மறப்பேன்.

என்றும் என்னுள் இருக்கும் நினைவுகள்,

இன்று நினைக்கையில் அங்கு
அன்று நான் கழித்த தருணங்கள்
அலையலையாக எழுகின்றன.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

ஒன்று விட்ட அக்கா ஒருத்தியுடன்
அன்று நான் சென்றதுதான் முதல் தடவை.
எட்டி எட்டி விரைந்து நடப்பேன்.
என்னுடன் ஈடு கொடுக்க முடியாத
அக்கா கத்துவாள். அக்கா கத்துவாள்.
''ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே.
எட்டிப் போகாதேடா. மெதுவாப் போடா.
மூச்சு வாங்குது' என்பாள் அவள்.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

வாரத்தில் பல தடவைகள் அங்கு செல்வேன்.

நான் வணங்கும் ஆலயங்கள்
நூலகங்களே.

யாழ் பொதுசன நூலகமும்
வாழ்வில் நான் வணங்கும்
ஆலயங்களில் ஒன்று.

வீணையும் கையுமாக வாசலில்
வரவேற்கும் சரஸ்வதி சிலை.
காற்று சிலு சிலுக்கும் சூழல்.
கனிவு மிகு உணர்வொன்றில்
இனிமையை உணர்வோம்.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

நூலகம் என் ஆசான்.
நூலகம் என் நண்பன்.
நூலகத்தில் படித்த நூல்கள்.
நினைவில் நிலைத்து நிற்கின்றன.

பெளதிகத்தின் வரலாறு.
பறவைகளின் வரலாறு.
நீங்களும் விஞ்ஞானிகள் ஆகலாம்.
வாசித்து
நாங்களும் விஞ்ஞானிகள் ஆவோம்.

அறிவியல் நூல்கள் பற்பல.
அறிவியல் நூல்கள்  பற்பல.

அனைத்தையும் வெளியிட்டது
அன்று சென்னயின் பதிப்பகம்
ஒன்று.

கல்கியின் பொன்னியின் செல்வன்,
கள்வனின் காதலி, அலையோசை
சிவராம் காரந்தின் மண்ணும் மனிதரும்,
சாண்டில்யனின் கடல் புறா
சிந்திக்க வைக்கும் போரும் அமைதியும்
டால்ஸ்டாயின் போரும் அமைதியும்
வாண்டுகள் எம்மை மகிழ்வித்த
வாண்டுமாமாவின் சிறுவர் நூல்கள்

பல நூல்கள். இப்படிப்
பல நூல்கள்.

எப்படி நான் மறப்பேன்.
எப்படி நான் மறப்பேன்.

அருகில் முற்றவெளி.
அதனருகில் பண்ணைக் கோட்டை.
சிறிது தொலைவில்
சுப்பிரமணியம் பூங்கா.
திறந்த வெளி அரங்கு.
தந்தை செல்வா நினைவுத்  தூபி.

நடுவில் அமைந்திருக்கும் நூலகம்.
நான் வணங்கும் நூலகம்.

நூலகம் எரிந்த நாட்கள்.
நான் நிலை குலைந்த நாட்கள்.

இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை.
வரலாற்று ஆவணங்கள்.
வரலாற்றுச் சுவடிகள்.

நூலகத்தை நினைக்கையில்
நெஞ்சில் பற்பல உணர்வுகள்.
 
என்றும் என் ஆசான் நீ.
என்றும் என் நண்பன் நீ.

உன்னுடன் கழித்த நாட்கள்.
உன்னுடன் வளர்ந்த நாட்கள்.

நூலகமே உனக்கு என் நன்றி.
நூலகமே உனக்கு என் நன்றி.

கார்ல் மார்க்ஸ் - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=CVBQ50q7zLE


சரித்திர வளர்ச்சியிலே
சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்
மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ்.

ஏழ்மை இவன் தன்
எண்ணங்களை என்றுமே
சிதைத்திட இவன்
சிறிதும் இடம் கொடுத்ததில்லை.

Sunday, July 28, 2024

அறிவுரை கூறு கண்ணா! - வ.ந.கிரிதரன் -

                                                            - இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=OXVWT6wJBhQ

காதல் வயப்பட பெண் ஒருத்தியின் உணர்வுகளை விபரிக்கும் கவிதை இது.

அறிவுரை கூறு கண்ணா!  - வ.ந.கிரிதரன் -

உன்னை மறப்பதற்கு முடியவில்லை.
என்னால் முடியவில்லை கண்ணா
என்னால் முடியவில்லை.

எத்தனை தடவை முயற்சி செய்தேன்.
அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரே.
கண்ணா,
விழலுக்கு இறைத்த நீரே.
என்னால் முடியவில்லை கண்ணா
என்னால் முடியவில்லை.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...