எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
Friday, May 30, 2025
அஞ்சலி: எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்தார்.
எழுத்தாளர் கூகி வா தியாங்கோ மறைந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். 'அழாதே, குழந்தாய்!' (Weep not Child), 'இடையிலுள்ள நதி' (The River Between) , 'ஒரு கோதுமைத் தானியமணி' ( a Grain of Wheat) , 'இரத்த இதழ்கள்" ( Petals of Blood), 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on the Cross ) ஆகியவை இவரது முக்கியமான நாவல்கள்.
Thursday, May 29, 2025
சிறந்த குணசித்திர நடிகரான நடிகர் ராஜேஷ் மறைந்தார்!
நடிகர் ராஜேஷ் மறைந்த தகவலினை இணையம் தாங்கி வந்து அதிர்ச்சியைத் தந்தது. அண்மையில்தான் தற்செயலாக யு டியூப்பில் அவரது நேர்காணலொன்றைப் பார்த்தேன். அதில் அவர் நடிகையர் திலகம் சாவித்திரியின் இறுதி நாட்கள், அவரது 'ரியல் எஸ்டேட்' வர்த்தகம் மற்றும் அவர் கே.கே. நகரில் வாங்கிய வீட்டில் நடந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகள் போன்ற விபரங்களை விபரித்திருந்தார். முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். கார்ல் மார்க்ஸ் இவருக்குப் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். இங்கிலாந்து சென்று அவரது சமாதியைப் பார்த்து வந்தவர். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் ஜானகி அம்மையாரை ஆதரித்தவர்.
சின்னத்திரை,பெரிய திரை என்று தன் கலையுலகப் பங்களிப்பை வழங்கியவர் நடிகர் ராஜேஷ். சிறந்த குணச்சித்திர நடிகர். கன்னிப்பருவத்திலே, சிறை, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை ஆகியவை இவரை நினைத்ததுமே நினைவுக்கு வரும் திரைப்படங்கள். 'அச்சமில்லை, அச்சமில்லை' திரைப்படத்தில் உலகநாதன் என்னும் அரசியல்வாதியாக நடித்திருப்பார். மறக்க முடியாத பாத்திரம். கே.பாலச்சந்தரின் இயக்கத்திலும், அவரது குடும்பத்தினரின் 'கவிதாலயா' தயாரிப்பிலும் வெளியான 'அச்சமில்லை. அச்சமில்லை' திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
Wednesday, May 28, 2025
புகழ்பெற்ற இலங்கை நடிகை மாலினி பொன்செகா மறைந்தார்!
இலங்கையின் புகழ்பெற்ற நடிகையான மாலினி பொன்செகாவின் மறைவுச் செய்தியைத்தாங்கி வந்தது முகநூல். ஆழ்ந்த இரங்கல்.
என்னைப் பொறுத்தவரையில் சிங்களத்திரையுலகின் புகழ் பெற்ற நடிகைகளில் முதலில் நினைவுக்கு வரும் நடிகை மாலினி பொன்செகா. நடிகர் காமினி பொன்செகா. நான் முதன் முதலில் அறிந்த சிங்களத்திரைப்பட நடிகர்கள் இவர்கள்தாம். அறிந்துகொண்ட அந்த நிகழ்வு என் வாழ்வின் அழியாத கோலங்களில் ஒன்றாக ஆழ்மனத்தில் படிந்து விட்டது. 'பாரா வலலு' என்னும் சிங்களத் திரைப்படம் அறுபதுகளின் இறுதியில் யாழ் மனோஹராவில் திரையிடப்பட்டபோது அதற்கு மிகுந்த விளம்பரம் பத்திரிகைகளில் கொடுக்கப்பட்டது.
Monday, May 26, 2025
எழுநா பதிப்பகம் வெளியிட்ட மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' (1621 - 1948)
நண்பரும்,கட்டடக்கலைஞருமான மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' (1621 - 1948) என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூல் எழுநா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இது பற்றிய நண்பரின் முகநூற் பதிவு கீழே:
"இலங்கையில் இந்நூலின் விலை 4,800 ரூபா. இலங்கைக்கு வெளியே தேவைப்படுவோர் பதிவிலுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். எழுநாவின் மற்றுமொரு பதிப்பாக இ.மயூரநாதன் அவர்களின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' எனும் நூலினை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.
தொடர்புகளுக்கு : இல:63, சேர்.பொன்.இராமநாதன் வீதி, கலட்டிச் சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். | +94 77 797 5029 "
![]() |
| கட்டடக்கலைஞர் மயூரநாதன் |
வாழ்த்துகள் மயூரநாதனுக்கும், எழுநா பதிப்பகத்திற்கும்.
Sunday, May 25, 2025
'டொரோண்டோ'க் காட்சி!
'டொரொண்டோ' நகரை ஊடறுத்துச் செல்லும் உயர்த்தப்பட்ட , 'கார்டினர்' நெடுஞ்சாலையூடு செல்கையில் , என் மூத்த மகள் தமயந்தி எடுத்த புகைப்படம். இங்கு தெரிவது உலகப்புகழ் பெற்ற சி.என்.கோபுரம் (CN Tower). அதனருகில் தெரிவது ஆரம்பத்தில் 'ஸ்கை டோம்' (Sky Dome) என்றழைக்கப்பட்டு , தற்போது 'றோயர்ஸ் சென்டர்' (Rogers Centre) என்றழைக்கப்படும் , மூடித்திறக்கும் கூரை கொண்ட 'பேஸ்போல்' விளையாட்டரங்கு.
எடுக்கப்பட்ட இடத்திலிருந்து , கரு முகிற் பின்னணியில், மேல் நோக்கி விரியும் நகரத்துக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். 'டொரொண்டோ' நகரை ஊடறுத்துச் செல்லும் உயர்த்தப்பட்ட , 'கார்டினர்' நெடுஞ்சாலையூடு செல்கையில் , என் மூத்த மகள் எடுத்த புகைப்படம். இங்கு தெரிவது உலகப்புகழ் பெற்ற சி.என்.கோபுரம் (CN Tower). அதனருகில் தெரிவது ஆரம்பத்தில் 'ஸ்கை டோம்' (Sky Dome) என்றழைக்கப்பட்டு , தற்போது 'றோயர்ஸ் சென்டர்' (Rogers Centre) என்றழைக்கப்படும் , மூடித்திறக்கும் கூரை கொண்ட 'பேஸ்போல்' விளையாட்டரங்கு.
எடுக்கப்பட்ட இடத்திலிருந்து , கரு முகிற் பின்னணியில், மேல் நோக்கி விரியும் நகரத்துக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
அஞ்சலி: மறக்க முடியாத பேராசிரியர் நிமால் டி சில்வா!
பேராசிரியர் நிமால் டி சில்வா மறைந்த செய்தியினை என்னுடன் கட்டடக்கலை படித்த சக கட்டடக்கலை மாணவர்கள் அறியத்தந்திருந்தனர். ஆழ்ந்த இரங்கல். இவரை ஒரு விதத்தில் மறக்க முடியாது. அமைதியானவர். எப்போதும் மெல்லிய புன்னகையுடன் காணப்படுபவர். அன்பாக உரையாடுபவர். பாரம்பர்யக் கட்டடக்கலை என்னும் பாடத்தை எமக்குப் படிப்பித்தவர் இவர். நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலை எழுதுவதற்கு இவரும் ஒரு காரணம்.
இவர் றோலன்ட் சில்வா என்பவரின் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு என்னும் கட்டுரையை அறிமுகப்படுத்தியபோது அது என்னைப் பிரமிக்க வைத்தது. அநுராதபுர நகரம் பெளத்தர்களின் புனித நகர். இலங்கையின் ஆரம்ப ராஜதானிகளில் ஒன்று. பல புகழ்பெற்ற தாதுகோபங்களை உள்ளடக்கிய நகர். யாழ்தேவியில் கொழும்பு செல்லும் எவரும் அநுராதபுர நகரின் தாதுகோபங்களைக் காணாமல் செல்ல முடியாது. ரொலனட் டி சில்வாவின் ஆய்வின்படி பண்டைய அநுராதபுர நகரமானது நடுவில் சந்தையையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் தாதுகோபங்களையும் கொண்டதாக விளங்கியது. என் கண் முன்னால் பண்டைய அநுராதபுர நகரம் விரிந்து பிரமிப்பைத்தந்தது.
பெளத்தர்களின் கட்டக்கலையில் வட்டம் முக்கிய பங்கினை ஆற்றுமொன்று. தாதுகோபங்கள் வட்ட வடிவமானவை. அது போல் நகரங்களின் நகர அமைப்பிலும் வட்ட வடிவம் ஆதிக்கம் செலுத்தியதை ரோரல்ன் சில்வாவின் அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய கட்டுரை புலப்படுத்தும். மாறாக, இந்துக்கள் கட்டடக்கலையில் சதுர (அல்லது செவ்வகம்) வடிவம் ஆதிக்கம் செலுததுவதை அவதானிக்கலாம்.
என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -
- இன்று பாரிஸில் ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜென் ஏற்பாட்டில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -
என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள். அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...




