Sunday, June 15, 2025
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.
இன்று தந்தையர் தினம். அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள். (ஓவியம் - AI )
எந்தையின் நினைவுகள் கூடவே
அன்னையின் நினைவுகள்!
அன்னையின் நினைவுகள் கூடவே
அன்னை மண்ணின் நினைவுகள்!
இந்நாளில் எந்தையரை ,
இந்நாளில் அன்னையரை,
இந்நாளில் அன்னை மண்ணை
நினைவில் வைப்போம்.
நினைவில் வைப்போம்.
எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார் - பாடகர் டி.என்.சேசகோபாலன்
https://www.youtube.com/watch?v=yiMVXlvVa8k
கவிதை; எந்தையும் தாயும்... மகாகவி பாரதியார்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
Saturday, June 14, 2025
'தக் லைஃப்' 'முத்தமழைப் பாடலின் பாடகி சின்மயி பாடும் காணொளி!
இப்பொழுது 'தக் லைஃப்' 'முத்தமழை' பாடலைப் பாடகி சின்மயி பாடுவதாக அமைந்துள்ள காணொளியை வெளியிட்டிருக்கின்றார்கள் படக்குழுவினர். நடிகை திரிஷா கிருஷ்ணனை நினைவில் வைத்திருக்கும் முதலிரு வேடங்கள் 'பொன்னியின் செல்வன்' குந்தவைப் பிராட்டியார். அடுதத்து 'தக் லைஃப்' இந்திராணி. இரு படங்களையும் இயக்கியிருப்பவர் மணிரத்தினம். இது போல் நடிகை ஐஸ்வர்யா ராயை நினைவில் நிறுத்தி வைத்திருக்கும் வேடம் 'பொன்னியின் செல்வன்' பழுவூர் ராணி நந்தினி.
என்றும்
பதினாறு மார்க்கண்டேயரைப்போல் திரிஷாவும் என்றும் இருபது
மார்க்கண்டேயணிதான். இன்னும் பல வருடங்களுக்குத் தமிழ்த்திரையுலகில் கொடி
கட்டிப் பறக்கும் சாத்தியங்கள் உள்ள நடிகை.
நடிகை
கே.ஆர்.விஜயா நீண்ட காலம் நாயகியாக நிலைத்திருந்தார். ஆனாலும் அவரது
இரண்டாவது வருகையின்போது அவர் உடல் பருத்திருந்தார். ஆனால் இரசிகர்கள்
ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவோ இன்னும் அதே உடல் வாகுடன் இருக்கின்றார். இது
அவரது எதிர்கால வெற்றிக்கு வழி வகுக்கும்.
இயக்குநர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
Friday, June 13, 2025
நோபல் பரிசினை ஏற்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எழுத்தாளர் மிகையில் ஷோலகாவும் , நிராகரித்த எழுத்தாளர் சார்த்தரும்!
எழுத்தாளர் சுகன் பின்வரும் எழுத்தாளர் அம்பையின் கூற்றை முகநூலில் பகிர்ந்திருந்தார்:
"1964 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஜீன்-பால் சார்த்தர் மறுத்துவிட்டார், ஏனெனில் அதை ஏற்றுக்கொள்வது தன்னை ஒரு நிறுவனமாக மாற்றும், ஒரு எழுத்தாளராகவும் அறிவுஜீவியாகவும் சுயாதீனமாக செயல்படும் திறனைக் கட்டுப்படுத்தும் என்று அவர் நம்பினார். மேலும், அவர் எப்போதும் அதிகாரப்பூர்வ வேறுபாடுகளை மறுத்து வருவதாகவும், "நிறுவனமயமாக்கப்பட" விரும்பவில்லை என்றும் கூறினார். கூடுதலாக, நோபல் பரிசு பெரும்பாலும் "மேற்கத்திய எழுத்தாளர்கள் அல்லது கிழக்கின் கிளர்ச்சியாளர்களுக்கு" மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த வார்ப்புருவில் பொருந்தக்கூடியவராகக் கருதப்படுவதை அவர் விரும்பவில்லை என்றும் அவர் கவலைப்பட்டார். ( அம்பை)"
Thursday, June 12, 2025
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடகி டீ (dhee) : முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ?
'தக் லைஃப்' படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடலைப் பாடியிருப்பவர் பாடகி டீ. 'ஆடியோ லோஞ்ச்'இல் மேடையில் பாடியிருப்பவர் பாடகி சின்மயி. இருவர் குரல்களிலும் இப்பாடலைக் கேட்டேன். இருவரிலும் என்னை மிகவும் கவர்ந்தவர் பாடகி டீ. இவரது குரலில் ஒலிக்கும், தென்படும் உணர்வு வெளிப்பாடுகள் பாடகி சின்மயியின் குரலில் இல்லைபோல் உணர்ந்தேன். டீயின் குரல் நவகாலத்துக்குரியது.
Tuesday, June 10, 2025
தமிழ் இலக்கியத் தோட்டம் 25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்! - தகவல்: அ.முத்துலிங்கம் -
தமிழ் இலக்கியத் தோட்டம் 25 ஆண்டு விருதுகளின் கொண்டாட்டம்!
2025ல் வழங்கப்படும் 2024ம் ஆண்டுக்கான விருதுகள்
இயல் விருது - சச்சிதானந்தன் சுகிர்தராஜா (பேராசிரியர், விளக்கவியலாளர், எழுத்தாளர்)
இயல் விருது - யுவன் சந்திரசேகர் (எழுத்தாளர், கவிஞர்)
புனைவு – இரவி அருணாசலம்
நூல் – பம்பாய் சைக்கிள்- (காலச்சுவடு பதிப்பகம்)
அல்புனைவு – த.பிச்சாண்டி
நூல் – எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள் ( பி.வி.பதிப்பகம்)
கவிதை -ரவி சுப்பிரமணியன் – நூல்: அருகிருக்கும் தனியன்- (போதிவனம் பதிப்பகம்)
கவிதை - றியாஸா எம் ஸவாஹிர்- நூல்: நிலங்களின் வாசம்- (வேரல்புக்ஸ் பதிப்பகம்)
மொழிபெயர்ப்பு : நீட்ரா ரொட்ரிகோ நூல்: கனவுச் சிறை (பாலா தேவகாந்தன்)
Prison of Dreams (5 Parts) - Published by Mawenzi House (author Bala Devakanthan)
Saturday, June 7, 2025
Friday, June 6, 2025
மருத்துவர் கதிரவேலு சந்தரின் (Kathiraveloo Santher) வெளிவரவுள்ள மனநல நூல் பற்றிய சிந்தனைகள்! -
நயகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் கடந்த ஐம்பதாண்டுகளாக மனநல மருத்துவராகப் பணியாற்றி வருபவர் மனநல் மருத்துவர் கதிரவேலு சந்தர் (Kathiraveloo Santher). மருத்துவர் கென் சந்தர் (ken Santher) என்று அறியப்பட்டவர். இவர் 2015ஆம் ஆண்டில் 'நம்பிக்கை விருது ( Hope Award) குழந்தைகளுக்கான மனநலச்சேவைக்காக இவ்விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இவரை இவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அந்தச்சந்திப்பின்போது அவர் தன் மகள் கல்யாணி சந்தருடன் இணைந்து எழுதிக்கொண்டிருக்கும் மனநலத்தைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம் குறித்து அறியும் சந்தர்ப்பம் கிட்டியது. கல்யாணி சந்தரும் உடல நலத்துறையில் பணியாற்றுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகிழ்ச்சியின் மீதான அழுக்குகள் , அவை யாவை?, அவற்றை எவ்வாறு நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியை அடைவது ? சிந்தனைகள் என்றால் என்ன? அவை எவ்வாறு உருவாகின்றன? போன்ற தலைப்புகளில் நூல் அமைந்திருப்பதை மேற்படி உரையாடலின்வாயிலாக அறிந்துகொண்டேன். தனது இதுவரை கால மனநல மருத்துவத்துறை அனுபவங்களின் அடிப்படையில் அவரது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் நூலாக இந்நூல் அமையவிருப்பதைப் புரிந்து கொண்டேன். உரையாடலின்போது உரையாடுபவரின் உரையினை முழுமையாக உள் வாங்கித் தன் கருத்துகளை அவர் வெளிப்படுத்தும் பாங்கினை இரசித்தேன். நம்மில் பலரும் உரையாடலை முழுமையாக உள் வாங்காமல் முண்டியடிப்பதைப் பார்த்திருந்த எனக்கு இவரது கூறப்படுபவற்றை உள் வாங்கி உரையாடும் பாங்கு மகிழ்ச்சியைத்தந்தது.
Subscribe to:
Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

