இவ்வார இறுதியைக் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கழி(ளி)த்தேன். பாராளுமன்றம் அமைந்த பகுதியில் சுற்றித் திரிந்தபோது கண்ணைக் கவர்ந்த சிலை இது. கனடாவில் மட்டுமல்ல, உலகின் புகழ்பெற்ற பியானோ வாத்தியக்கலைஞர் ஒருவரின் சிலை அல்பேர்ட் வீதி - எல்ஜின் வீதியும் சந்தியில், தேசியக் கலை மையத்துக்கு வெளியில், அமைக்கப்பட்டிருந்த நேர்த்தி என்னைக் கவர்ந்தது. அவர் வேறு யாருமல்லர் மான்ரியாலில் குடியேறிய கரிபியன் குடியேற்றவாசிகளான தாய், தந்தையருக்கு மகனாகப் பிறந்த ஆஸ்கர் பீட்டர்சனே (Oscar Peterson) (1925–2007) அவ்வாத்தியக் கலைஞர்.
இவர் உலகப் புகழ்பெற்ற கனடிய ஜாஸ் பியானோ வாத்தியக் கலைஞராகக் கருதப்படுமிவர்.மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் பியானோ வாசிப்பதில் வல்லவராகக் கருதப்படுகின்றார்.






