இலங்கைப் பாடகர் ஏ.ஈ.மனோகரனும் 'யாழ்தேவி' பற்றியொரு பாடல் பாடியுள்ளார். அது "உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி"
Thursday, October 30, 2025
பாடகர் ஏ.ஈ.மனோகரனின் 'யாழ்தேவி'ப் பாடல்!
இலங்கைப் பாடகர் ஏ.ஈ.மனோகரனும் 'யாழ்தேவி' பற்றியொரு பாடல் பாடியுள்ளார். அது "உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி"
Tuesday, October 28, 2025
கூகுள் ஏஐ ஸ்டுடியோவுக்கு நன்றி!
இங்குள்ள பெண்ணின் உருவம் கூகுள் ஏஐ ஸ்டுடியோ மூலம் உருவாக்கப்பட்டது. இங்கு கீழுள்ள எழுத்து வடிவத்திலான பதிவுக்கான குரல் அதே தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது. இதனை இப்பெண் பேசுவது போல் காணொளியாகவும் ஆக்க முடியும். நான் தற்போது பாவிப்பது இலவச சேவையென்பதால் அதற்கான வசதிகள் இல்லை.
Monday, October 27, 2025
நினைவில் நிற்கும் வான் பாயும் பட்டாணிச்சுப் புளியங்குளம்!
என் பால்யப் பருவத்து அனுபவங்களைப் பற்றி நிறையவே பதிவுகள் எழுதியிருக்கின்றேன். அவற்றில் வவுனியா பட்டாணிச்சுப் புளியங்குளத்தின் , வான் பாயும் அணைப் பகுதியை என்னால் மறக்கவே முடியாது.
Sunday, October 26, 2025
கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளியானது. யாவரும் அறிந்ததே. இவர் ஊடகவியலாளரும் கவிஞருமான ஏ.எச்.சீத்திக் காரியப்பரின் மனைவி. எண்பதுகளிலிருந்து இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மற்றும் வானொலியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது முதற்கவிதையை வெளியிட்டது தினகரன் பத்திரிகை.
இத்தருணத்தில் இவரது கணவரான கவிஞர் ஏ.எச்.சித்திக் காரியப்பரை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விழைகின்றேன். எண்பதுகளில் தினகரன் பத்திரிகையில் வெளியான 'கவிதைச் சோலை'ப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தவர் அவர். அப்போது என் கவிதைகளுடன் , என் புகைப்படத்தையும் பிரசுரித்து நல்லதோர் அறிமுகம் தந்தவர் அவர். எனது கவிதைகள் சில அவர் நடத்திய கவிதைச் சோலையில் வெளியாகியுள்ளன. என் எழுத்துலகின் ஆரம்பக் கட்டத்தில் அவர் தந்த ஊக்கத்தை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.
எண்ணங்களே வாழ்வு என்பதை எடுத்துக்காட்டும் காணொளி!
* Digiat Art (Google Nano Banana) help: VNG
வாழ்க்கைக்கு ஆரோக்கியமான விளைவுகளைத் தருபவை நேர்மறையான , நம்பிக்கை மிக்க எண்ணங்களே. எண்ணும் எண்ணங்களுக்கேற்பவே வாழ்க்கை அமைகிறது என்பது உளவியல் நிபுணர்கள் பலரின் கண்டு பிடிப்பு.
வாழ்வில் இன்பமென்பதை உணர்வது மனத்தின் உணர்வுகள் மூலமே. மனிதரின் செயற்பாடுகள் அனைத்தையும் இறுதியில் இன்பத்தை அடைதலையே நோக்கமாகக் கொண்டு அமைகின்றன.
இன்பம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியிருப்பதில்லை. ஒருவருக்குப் பயணத்தில் இன்பம். ஒருவருக்குக் கலைகளில் இன்பம். ஒருவருக்குச் செல்வத்தைப் பெருக்குவதில் இன்பம். ஒருவருக்குச் சேவை செய்வதில் இன்பம். ஒருவருக்கு எழுதுவதில், வாசிப்பதில் இன்பம். இவ்விதம் மனிதரின் செயல்கள் அனைத்துமே அவரவர் அடையும் இன்பத்தை நோக்கியே அமைந்திருக்கின்றன.
இக்காணொளி நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய வேண்டிய இன்பத்தை, இலக்குகளை எப்படி அடையலாம் என்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் காணொளி. நீங்கள் எண்ணும் எண்ணங்களே உங்கள் அடைய வேண்டிய இலக்குகளை அடைய உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் காணொளி.
இவ்விதமான நூல்கள் பல உலகின் பல்வேறு மொழிகளிலும், தமிழ் உட்பட, வெளியாகியுள்ளன. காணொளிகளும் அவ்விதம் வெளியாகியுள்ளன. அவற்றில் நல்ல காணொளிகளில் ஒன்று இந்தக் காணொளி.
இறுதிவரை இக்காணொளியைத் திறந்த மனத்துடன் பாருங்கள். நம்பிக்கையுடன் பாருங்கள்.
Saturday, October 25, 2025
காலத்தால் அழியாத கானம்: 'அம்மா என்றால் அன்பு'
கே.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளை, அடிமைப்பெண் திரைப்படத்தில் பாடுபவர் ஜெயலலிதா.
கண்களை மூடிக்கொண்டு கேட்டுப் பாருங்கள் கர்நாடக சங்கீதம் நன்கறிந்து பாடும் பாடகியொருவரின் குரலோ என்று பிரமித்துப் போவீர்கள்.
https://www.youtube.com/watch?v=0kZMaWiExME&list=RD0kZMaWiExME&start_radio=1
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
காலத்தால் அழியாத கானம்: 'காசிக்குப் போகும் சந்நியாசி'
'சந்திரோதயம்' திரைப்படத்தில், மெல்லிசை மன்னரின் இசையில், #கவிஞர் வாலியின் வரிகளுக்குக் குரல் கொடுத்திருப்பவர்கள் டி.எம்.எஸ் & சீர்காழி கோவிந்தராஜன். நடிப்பு: #எம்ஜிஆர் , நாகேஷ் & மனோரமா.
அப்பாவுக்குப் பிடித்த இப்பாடல் எனக்கும் பிடித்தது. பாடகர்களின் குரல்களையும், எம்ஜிஆர், நாகேஷின் நடிப்பையும் கேட்கும்போதெல்லாம் இரசிப்பேன். கூடவே அப்பா பற்றிய நினைவுப்பாம்பும் ஆழ்மனப்புற்றிலிருந்து எழுந்து தலை விரித்தாடும்.
இத்திரைப்படம் எம்ஜிஆர் சுடப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம். இப்பாடலின் ஆரம்பத்தில் எம்ஜிஆர் , நாகேசுடன் சிறிது நேரம் உரையாடுவார். அப்போது சுடப்படுவதற்கு முன்பிருந்த எம்ஜிஆரின் இன் குரலையும் கேட்கலாம். கேட்கையில் சுட்டவர்மீது ஆத்திரம் வருவதைத் தடுக்க முடியாது.
https://www.youtube.com/watch?v=UwpvmT6_rvY&list=RDUwpvmT6_rvY&start_radio=1
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

.png)