[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பம் (chatGPT) உதவி; VNG]
நடிகை கெளரி கிஷன் மிகவும் கடுமையாக ஆர்.எஸ்.கார்த்தி என்னும் யு டியூப் ஊடகவியலாளரைச் சாடும் காணொளி இது. யு டியூப் ஊடகவியலாளர் கெளரி கிஷனுடன் நடித்த நடிகரிடம் கெளரி கிஷனின் எடை எவ்வளவு என்று கேட்டிருக்கின்றார்.அது தான் கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுள்ளது. அது Body Shaming என்று குற்றஞ் சாட்டியிருக்கின்றார் அவர். அவரது ஆத்திரம் நியாயமானது. அனைவரும் அவருக்காதரவாகக் குரல் கொடுப்பது அவசியம்.
இவ்வளவு நடந்த பிறகு யு டியூப்காரர் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில் தன் கேள்வி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறியிருக்கின்றார். இந்தக் கூற்று ஒன்றே போதும் அவர் இன்னும் தன் குற்றத்தை உணரவில்லையென்பதற்கு. எல்லோரும் எதிர்ப்பதால் , பயந்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார். இவர் தன் குற்றத்தை, தவறினை உணர்ந்து எதிர்காலத்தில் இவ்விதத் தவறுகளற்றுத் தனது வேலையைச் செய்வது அவசியம். அதற்கு அவர் இச்சம்பவத்திலிருந்து இத்துறையில் கைக்கொள்ள வேண்டிய நெறி முறைகள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
இவரைப்போன்ற தவறான ஊடகவியலாளர்கள் மலிந்து விட்டதற்குக் காரணமென்ன? இணையத்தொழில் நுட்பம், குறிப்பாகச் சமூக ஊடகத்துறையின் வருகை ஆக்கபூர்வமானது என்றாலும் , கூடவே தீய சக்திகளின் கைகளில் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கும் நிலையினையும் உருவாக்கியுள்ளது. நவீனத் தொழில் நுட்பத்தின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்றுதான் இவரைப்போன்ற ஊடகவியலாளர்களின் வருகையும்.
எவ்வித ஊடகத்துறை அனுபவங்களுமற்று, அத்துறையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றிய அறிவற்று, சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்விதமான ஊடகவியலாளர்களை நெறிப்படுத்தும் வகையில் இணையத் தொழில் நுட்ப விதிகள் மாற்றப்பட வேண்டும், அல்லது உருவாக்கப்பட வேண்டும்.
நடிகை கெளரி கிஷனின் முதலாவது குற்றச்சாட்டு ஏன் நடிகைகளிடம் அவர்கள் எடையைக் கேட்கின்றீர்கள்? ஏன் நடிகர்களிடம் கேட்பதில்லை. சரியான கேள்வி. நியாயமான குற்றச்சாட்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறைகளில் முதலிடத்தில் இருப்பது திரைப்படத்துறைதான். பெண்களைப் போகப்பொருளாகக் கருதும், பாலியல் சுரண்டல் மலிந்த துறை. இத்துறையில் அவ்வப்போது கெளரி கிஷன் போன்ற பெண்கள் தம் ஆளுமை, சுய கெளரவம் பாதிக்கப்படுகையில் துணிந்து குரல் எழுப்புகின்றார்கள். இக்குரல்கள் வரவேற்புக்குரியவை. ஆதரிக்கப்பட வேண்டியவை.
கெளரி கிஷனின் அடுத்த குற்றச்சாட்டு - எதற்காக ஆண் நடிகரிடம் இக்கேள்வியைக் கேட்க வேண்டும். இதுவும் மிகவும் சரியான குற்றச்சாட்டே. இவ்விதம் சக நடிகையின் எடை பற்றி அவருடன் நடித்த சக நடிகரிடம் கேட்பது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல. அந்நடிகையை அவமானப்படுத்துவதும் போலத்தான்.
புதுமுக நடிகயாக இருந்தாலும், எவ்வித எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாமல் கெளரி கிஷன் குரல் கொடுத்திருக்கின்றார். அதற்காக அவரைப் பாராட்டுவோம். அவர் இவ்விதம் உரிமைக் குரலெழுப்பியிருப்பது அவருக்காக மட்டுமல்ல, இத்துறையிலுள்ள பெண்கள் அனைவருக்காகவும்தான்.
கெளரி கிஷனின் ஆத்திரத்தைக் கிளப்பிய சம்பவத்தை விபரிக்கும் காணொளி இதுதான் - https://www.youtube.com/watch?v=cVF7ALfCbKs
Saturday, November 8, 2025
பெண்களுக்கான உரிமைக்குரல் நடிகை கெளரி கிஷனின் எதிர்ப்புக் குரல்!
Friday, November 7, 2025
புகலிடச் சிறுகதை - ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! - வ.ந.கிரிதரன் -
[‘தாயகம்’ (கனடா) பத்திரிகையில் வெளியான இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட 'பனையும் பனியும்' சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.]
ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை. ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.
புகலிடச் சிறுகதை: யன்னல்! - வ.ந.கிரிதரன் -
Thursday, November 6, 2025
‘குடிவரவாளன்’: வ.ந.கிரிதரனின் மனதைத் தொடும் சுயசரிதைக் குறிப்பு. - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி -
முனைவர் ஆர். தாரணி , வ.ந.கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'An Immigrant' (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளியானது) பற்றி ஆங்கிலத்தில் ‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் தலைப்பில் எழுதிய விமர்சனக் கட்டுரை. இதனைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருப்பது கூகுளின் நனோ பனானா (Google Nano Banana) செயற்கை நுண்ணறிவு (AI)
"சில புத்தகங்களைச் சுவைக்க வேண்டும், சிலவற்றை விழுங்க வேண்டும், சிலவற்றை மென்று ஜீரணிக்க வேண்டும்" - சர் பிரான்சிஸ் பேக்கன் ஆங்கில எழுத்தாளர் (1561 - 1626)
'குடிவரவாளன்' இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனடா எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் புனைகதையில் ஒரு பெரிய பாய்ச்சல். அந்நிய நாட்டில் ஒரு நம்பிக்கைச் சோர்வுற்றிருந்த் ஆன்மாவின் இருத்தலியல் நெருக்கடியைச் சித்திரிப்பதால், இந்தப் புத்தகம் மிகுந்த "கவனத்துடனும் ஈடுபாட்டுடனும்" படிக்கப்பட வேண்டியது. கதை ஊக்கமளிப்பதுடன், ஒவ்வொரு உள்ளத்திலும் உற்சாகத்தைப் பற்றவைக்கிறது. இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம், இளங்கோ என்ற கதாபாத்திரத்தின் உயிர்வாழும் போராட்டத்தின் மீது அதிகம் இருந்தாலும், இது இலங்கையின் கொடூரமான இனப்படுகொலைக்கு ஒரு வலுவான சான்றாக நிற்கிறது, இது உலகெங்கிலும் உள்ள மக்களை இன்றும் கொதிப்படையச் செய்கிறது. தமிழ் மக்களைத் துன்புறுத்தும் சிங்களக் காடையர்களின் கொடூரத்தால் தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தனது புத்தகத்தில், தனது முதல் அனுபவமாக எழுத்தாளர் வ.ந.கிரிதரன் முன்வைத்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த கலவரத்தில் தங்கள் உயிர்கள், குடும்பங்கள், உடைமைகள், தேசியம் மற்றும் மனிதன் என்ற அடையாளத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு இது ஒரு தனித்துவமான அஞ்சலியாகும். புத்தகத்தின் முதல் சில அத்தியாயங்களில், கலவரத்தில் சிக்கிய இளங்கோ என்ற இளைஞனின் அவலநிலையை எழுத்தாளர் தெளிவாக விளக்குகிறார். தனது சொந்த நாட்டில், இளங்கோ இனவெறியர்களால் சிக்கித் தவிப்பதாக உணர்ந்து, அரக்கர்களிடமிருந்து தப்பிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இளங்கோவின் கண்களினூடாக கலவரத்தைப் பற்றி எழுத்தாளர் மனதை உருக்கும் விதமாக விவரிக்கிறார்.
Wednesday, November 5, 2025
ஆய்வுக் கட்டுரை: உள்ளத்தின் வெற்றிடம் – ஒரு அல்பாட்ரோஸின் (வெண்ணிறக் கடற்பறவை) தேவையற்ற நிலப்பரப்பிற்கான இடப்பெயர்வு – கனடிய தமிழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த ஆய்வு! - முனைவர் . ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி –
| முனைவர் ஆர். தாரணி | ணி |
உள்ளத்தின் வெற்றிடம் – ஒரு அல்பாட்ரோஸின் (வெண்ணிறக் கடற்பறவை) தேவையற்ற நிலப்பரப்பிற்கான இடப்பெயர்வு – கனடிய தமிழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் எழுத்துக்கள் குறித்த ஆய்வு! - முனைவர் ஆர். தரணி M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D., ஆங்கில உதவிப் பேராசிரியர், LRG அரசு மகளிர் கலைக் கல்லூரி –
இலக்கியம் என்பது ஒரு தனிநபரின் அல்லது ஒரு சமூகத்தின் கண்டறிய முடியாத அனுபவங்களின் வெளிப்பாடாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் மட்டுமே நிகழ்வது சாத்தியமற்றது. உலக இலக்கிய வரலாற்றில், காதல், வீரம் மற்றும் மகிழ்ச்சியான முடிவுகளை விட பேரழிவுகளே அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர்களின் துயரங்கள் அவர்களுக்கு எப்போதும் உரிய நீதியைப் பெற்றுத்தந்துள்ளன. இனப் பின்னணி காரணமாக அச்சுறுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் துயரங்கள் மேற்கத்திய நாடுகளில் பல சமூக மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துள்ளன. வாழ்க்கையின் அனைத்து சிக்கல்களிலும், உயிர்வாழ்வதற்கான நெருக்கடியே எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையிலும் முதலிடத்தில் நிற்கிறது. மனிதன் இந்த கிரகத்தில் தனக்கென ஒரு இடத்தைக் கண்டறிய போராடுகிறான். தேசியம், பிறப்பிடம், சமூகம், குடும்பம், பாரம்பரியம், கலாச்சாரம், மொழி ஆகியவை ஒரு மனிதனின் உயிர்வாழ்வதற்கான உந்துதலை உறுதிப்படுத்தும் விஷயங்களாகும்.
Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.
Zohran Mamdani - நியூயோர்க் மாநகரின் புதிய மேயர்.
அமெரிக்கர்கள் பெருமையுறும் தருணம். உலகம் அமெரிக்கர்களை விருப்புடனும், வியப்புடனும் நோக்கும் தருணமும் கூட. வாழ்த்துகள்!
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
இலங்கை மலையகத்தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகள் இரண்டு!
தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள் சாவதில்லை'
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் முக்கிய நாவல்களிலொன்று 'காலங்கள் சாவதில்லை'. மலையகத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்று.
வீரகேசரி பிரசுரமாக வெளியான இந்நாவலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம் - https://noolaham.net/project/965/96468/96468.pdf
['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை'!
தமிழ் இலக்கியத்தில் முக்கிய நாவல்களிலொன்று. குறிப்பாக மலையகத்தமிழ் மக்களின் ஆரம்பக் காலத்தை மையமாகக் கொண்டது. கனவுகள், ஏக்கங்களுடன் நல் வாழ்வுக்காகத் தமிழகத்திலிருந்து மலையகம் கொண்டு வரப்பட்ட மக்களின் இருத்தலுக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் சிறந்த நாவல்.
எனக்கு இந்நாவலை வாசிக்கையில் தகழி சிவசங்கரம்பிள்ளையின் 'தோட்டி மகன்' நாவல் நினைவுக்கு வந்தது. அதில் மூன்று தலைமுறைகளை மையமாகக் கொண்டு அம்மக்களின் வாழ்க்கையை விபரித்திருப்பார் தகழி. அவ்விதமாகவே இந்நாவலும் பின்னப்பட்டுள்ளது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
சிதைந்திருந்த அட்டைப்படம் கூகுள் நனோ பனானா (Google Nano Banana) மூலம் சிறிது மெருகூட்டப்பட்டுள்ளது.
நாவலை வாசிக்க - https://noolaham.net/project/1090/108981/108981.pdf
கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)
கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...


.png)
.png)