நக்சல்பாரி இயக்கத்தை முன்னெடுத்தவர் சாரு மஜூம்தார் . நக்சல்பாரி என்பது மேற்கு வங்கக் கிராமம் ஒன்றின் பெயர். இப்பதிவை முழுமையாகக் கீழே தந்துள்ளேன்.
சுகுணா திவாகர் Singer Diwakar எழுதிய முகநூற் பதிவு:
·
![]() |
| நூலாசிரியர் இரா முருகவேள் |
| சுகுணா திவாகர் |
கீழ்வெண்மணி படுகொலைகளை நிகழ்த்திய கோபாலகிருஷ்ணநாயுடுவைக் கொன்ற நக்சல்பாரி தோழர்கள் குறித்த வெப்சீரிஸ் திரைக்கதைக்காக, கீழ்த்தஞ்சையில் கள ஆய்வு செய்தபோது அந்த அழித்தொழிப்புடன் தொடர்புடைய பல தோழர்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஆச்சர்யமானவை என்பது ஒருபுறம். இன்னொருபுறம் இயக்கம் தொடர்பான தகவல்களிலும் ஒருவர் சொன்னதற்கும் இன்னொருவர் சொல்வதற்குமிடையில் முரண்பாடுகள் இருக்கும். காரணம் நக்சல்பாரி இயக்கம் ஒரு தலைமறைவு இயக்கம். அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் பற்றிய முறையாக ஆவணப்படுத்தப்பட்ட, தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது. பல விஷயங்கள் செவிவழிச்செய்திகள்தான்.





