Friday, December 19, 2025
முகநூலிலும் சம்பாதிக்கலாம்!
நண்பர்களே! இக்காணொளியை முழுவதுமாகப் பாருங்கள். இது உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும். எனக்கு மிகவும் உதவியாகவுள்ளது.
முகநூல் உண்மையில் பொருளாதாரரீதியிலும் உதவக்கூடியது என்பதை எடுத்துக்காட்டும் காணொளி இது. பலருக்கு முகநூலின் ஆரோக்கியமான பயன்கள் தெரிவதில்லை. முகமூடிகளில் வந்து ஒருவரையொருவர் தாக்குவதிலும் , ஒருவரின் புகழ்பெற்ற பதிவைக் களவாடித் தம் பெயரில் போடுவதிலும், ஒருவரைப்பற்றி அவதூறுகள் செய்வதிலும் இருக்கும் ஆர்வம் அதிகம். உண்மையில் முகநூலை ஆரோக்கியமாகப் பாவித்தால் , இதன் மூலம் நட்பைச் சம்பாதிக்கலாம், பணத்தையும் சம்பாதிக்கலாம். உங்கள் படைப்புகளையும் பலரிடத்தில் எடுத்துச் செல்லலாம். பொருட்களை விற்கலாம். வாங்கலாம். இப்படிக்கூறிக்கொண்டே போகலாம்.
Wednesday, December 17, 2025
சமகால இலங்கையின் கட்டட, நகர வடிவமைப்புக் கலையின் சிறந்ததோர் எடுத்துக்காட்டு மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Hub (MMC) - வ.ந.கிரிதரன் -
நகர வடிவமைப்பில் முக்கியமானதோர் அம்சம் போக்குவரத்தால் திணறிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகும். அந்த வகையில் Kottawa நகரில் அமைந்துள்ள மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Centre (MMC) முக்கியமானதொரு சாதனை. இவ்வகையில் மேனாடுகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கையாளப்படும் செயற்பாடுகளையெல்லாம் உள்வாங்கி (உதாரணத்துக்கு Park and Ride) , இலங்கையின் காலநிலைக்கேற்ப, மக்களின் பாவனையை மனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறந்ததொரு கட்டடமாக இதனைக் கருதலாம். இதனை வடிவமைத்த கட்டடக்கலை நிறுவனம் கட்டடக்கலைஞர் முடித ஜெயக்கொடியின் 'Muditha Jayakody Associates (MJA)' நிறுவனமாகும்.
Tuesday, December 16, 2025
இலங்கையின் முன்னோடிப் பெண் நிலவடிவமைப்புக் கலைஞர் (Landscaoe Architect) ஹெஸ்டர் பஸ்நாயக்கவும் அவரது நிலவடிவமைப்புகலை (Landscaoe Architecture) பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -
கட்டக்கலை பற்றி அறிந்த அளவு பொதுவாக நிலவடிமைப்புக் கலை (Landscaoe Architecture) பற்றிப் பலர் அறிந்திருப்பதில்லை. உண்மையில் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலையுடன் பின்னிப் பிணைந்த இன்னுமொரு கலைதான் நிலவடிவமைப்புக் கலை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் சரித்திரச் சின்னங்கள் நிலவடிவமைப்புக் கலை எவ்வளவுதூரம் நகர அமைப்பில் முக்கிய இடத்தை வகித்தது என்பதை உணர்த்தும் சான்றுகள். உதாரணத்துக்குச் சிகிரியா நகர அமைப்பில் நிலவடிவமைப்புக் கலையின் பங்களிப்பு வெளிப்படை. இது போல் பழமை வாய்ந்த விகாரைகள், அரச முக்கியத்துவம் மிக்க கட்டடங்கள், ஆலயங்கள் இவற்றிலெல்லாம் நிலவடிவமைப்புக் கலையின் தாக்கத்தைக் காணலாம். இன்று இத்துறை ஒரு பட்டப்படிப்பாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கபப்ட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் நிலவடிவமைப்புக் கலையில் முன்னோடிகளில் ஒருவரான திருமதி ஹெஸ்ட்ர பஸ்நாயக்க பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வதே இப்பதிவின் நோக்கம்.
எழுத்தாளர் தேவனின் (யாழ்ப்பாணம்) நாடகத்துறைப் பங்களிப்பு!
தேவன் (யாழ்ப்பாணம்) - சிறந்த எழுத்தாளர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர் சிறந்த நாடகாசிரியர் என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அதைத்தெரிவிக்கும், ஆவணச்சிறப்பு மிக்க கட்டுரை ஈழநாடு வாரமலரில் , கணேஷ் எழுதிய 'தேவன் ஒரு தனி இயக்கம்' என்னும் இக்கட்டுரை. இதில் அவர் தேவனுடன் நடத்தும் உரையாடலில் , தேவனே தன் நாடக அனுபவங்களை விபரிக்கின்றார். அவற்றிலிருந்து பெற்ற தேவனுடைய நாடகத்துறை அனுபவங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் இவை:
Monday, December 15, 2025
காலத்தால் அழியாத கானங்கள்: மெல்லப் போ! மெல்லப் போ!
[டிஜிட்டல் ஓவிய (Google Nano Banana) உதவி: வநகி]
https://www.youtube.com/watch?v=9AT_Vh5-Oos
எம்ஜிஆர் சுடப்பட்ட பின் நடித்து வெளியாகிப் பெருவெற்றியடைந்த திரைப்படம் 'காவல்காரன்' . யாழ் ராஜா திரையரங்கில் நூறு நாட்களைக் கடந்து ஓடியது. கொழும்பிலும் 100 நாட்களைக் கடந்து ஓடியது.
கறுத்த டீ சேர்ட்டுடன் , கட்டுமஸ்தான உடலுடன் நடித்திருப்பார் எம்ஜிஆர். சுடுபட்ட பின்னர் அவ்விதமானதொரு ஆரோக்கியமான தோற்றத்துடன், ஆடிப்பாடி, ஓடி நடித்திருப்பார் எம்ஜிஆர் இப்பாடலில்.
எம்ஜிஆர், கவிஞர் வாலி, எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் & பி.சுசீலா கூட்டணியில் உருவான காலத்தால் அழியாத கானங்களிலொன்று இந்தப்பாடல்.
Sunday, December 14, 2025
வீரகேசரி மற்றும் தமிழ் ஊடகங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!
வீரகேசரி நிறுவனத்தாருக்கு ஓர் அன்பான வேண்டுகோள். வீரகேசரி இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு, தமிழ் அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துகள். இன்று இணையத்தொழில் நுட்பமுள்ள காலகட்டம். வீரகேசரியின் பழைய பிரதிகளை வெளிவந்த ஆண்டிலிருந்து இன்று வரை பார்க்கும் வசதிக்கொண்ட வசதியினை ஏற்படுத்தினால், அது வாசகர்களுக்கும், கலை,இலக்கிய ஆளுமைகளுக்கும், திறனாய்வாளர்கள், ஆய்வாளர்களுக்கும், அவற்றில் எழுதிய எழுத்தாளர்கள் , ஊடகவியலாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக அமையும். அதற்காக நியாயமான கட்டணத்தையும் அறவிடலாம். இதனைச் செய்வதால் இலாபமே. ஏன் இதுவரை இதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இக்கோரிககை வீரகேசரி நிறுவனத்துக்கு மட்டுமல்ல. இலங்கையிலிருந்து வெளியாகும் அனைத்துத் தமிழ் ஊடகங்களுக்கும்தாம்.
['டிஜிட்டல் ஓவியம்' (கூகுள் நனோ பனானா) உதவி: வநகி}
இலக்கிய ஆளுமையாளர் ஒருவரை வெளிப்படுத்துமோர் அரிய காட்சி!
இலக்கிய ஆளுமைகள் அவர்கள் பணி புரியும் ஊடக நிறுவனங்களில் தம் பணியில் மூழ்கியிருக்குக் காட்சிகளை உள்ளடக்கிய புகைப்படங்கள் அரிது. அவ்விதமானதொரு காட்சியினை அண்மையில் 'வரலாறு பேசும் பொற்கணங்கள் – வீரகேசரியின் 75 ஆண்டு கொண்டாட்டத் தொகுப்பு' என்னும் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட காணொளியில் கண்டேன்.
அதில் பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை) அவர்கள் தம் பணியில் மூழ்கிக் கிடக்கும் காட்சியினைக் கண்டேன். அதைத்தவறவிடக்கூடாதென்பதற்காக அக்காட்சியினைக் 'கூகுள் நனோ பனானா' செயற்கை நுண்ணறிவு கொண்டு 'டிஜிட்டல்' ஓவியமாகப் பதிவு செய்தேன். அதனையே இங்கு காண்கின்றீர்கள்.
Subscribe to:
Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு உற்ப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...




.png)
