Wednesday, March 11, 2026

நினைவில் நிற்கும் கானம் : "என்ன என்ன வார்த்தைகளோ? சின்ன விழிப்பார்வையிலே. சொல்லி சொல்லி முடித்துவிட்டேன். சொன்ன கதை புரியவில்லை."


'வெண்ணிற ஆடை'  ஜெயலலிதாவின் முதலாவது திரைப்படம்  என்பதை நம்பவே முடியவில்லை. படம் முழுவதுமே ஜெயலலிதாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் ஜெயலலிதாவுக்குத் திரைப்படம் முழுவதும் தன் நடிப்புத்திறமையினை, நடனத்திறமையினை நன்கு வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. படத்தில் அவரது நடிப்பாற்றலைக் கண்டு எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டது.

காலத்தால் அழியாத கானம்: "நீ என்பது என்ன? நான் என்பதென்ன?"

 

 
'வெண்னிற ஆடை' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'என்ன என்ன வார்த்தைகளோ' பாடற் காணொளியை  முன்பு பகிர்ந்திருந்தேன். அதற்குக் கருத்துத் தெரிவித்திருந்த  முகநூல் நண்பர் அருள்குமார் எஸ்பி (Arul Kumar SP)  அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: " வெண்ணிற ஆடை படத்தில் வரும் முதல் பாடல் தான் ஜெயலலிதா அவர்கள் திரையில் முதன்முதலில் தோன்றி நடித்த காட்சி. கேட்கும் எவரையும் கலங்கடிக்கச் செய்யும் அந்த பாடலின் முதல் அடி : " நான் என்பதென்ன . நீ என்பதென்ன.. ஒரு நினைவு என்பதென்ன ...? நிலையில்லாத உலக மேடையில் நாமும் வந்ததென்ன ...?  - மன சிதைவு என்றால் என்ன என்பதை எளிமையாகச் சொன்ன வரிகள் !! நன்றி தோழர் ."

அவர் கூறியது உண்மைதான் . இதுதான் அந்தப் பாடல் . அவர் சுட்டிக்காட்டியதால் மீண்டும் பார்த்தேன். 

Monday, March 2, 2026

வ.ந.கிரிதரனின் முகநூல் உரைகள்! (1)


கலை, இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய என் எண்ணங்களை அவ்வப்போது காணொளிகளாகத் தருவதற்கு முடிவு செய்திருக்கின்றேன். அவ்வகையில் முகநூலில் பகிர்ந்துள்ள காணொளிகள் இவை.  இவை பற்றிய உங்கள் கருத்துகள் எவையாயினும் அறியத் தாருங்கள். இவை பற்றிய ஆரோக்கியமான தர்க்கங்களுக்கு அவை வழி வகுக்கும். காணொளிகள் என் 'ஐபோன்' மூலம் எடுக்கப்பட்டவை. 

நவீனம், நவீனத்துவம் பற்றி... https://www.facebook.com/reel/1254157106063345

Thursday, February 26, 2026

அஞ்சலி: பொதுவுடமைக் கட்சியின் தலைவர் இரா. நல்லகண்ணு மறைந்தார்!


இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார்.  விவசாயத்  தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர். 

பல விடயங்களில் இவர் உதாரண மனிதராக விளங்கினார்.  இவரது எண்பதாவது பிறந்ததினத்தின் போது கட்சி இவருக்கு ஒரு கோடி ரூபா நிதி வசூலித்துக் கொடுத்தது. அதனை இவர் கட்சிக்கே கொடுத்து விட்டார். தமிழக அரசு அம்பேத்கார் விருதாக ஒரு இலட்சம் ரூபா வழங்கியபோது அதில் பாதியைக் கட்சிக்கும்,  மீதியை விவசாயத் தொழிலாளர்  சங்கத்துக்கும் வழங்கினார். மாவட்ட எழுத்தாளர் சங்கத்தின் ஜீவா விருது, தமிழக அரசின் அம்பேத்கார் விருது  உட்படப் பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார். 

Wednesday, February 25, 2026

மறவன்புலவு க.சச்சிதானந்தனின் 'ஹிந்துத்துவா'!


'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய  நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட  மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.

அருண் சித்தார்த் தான் சார்ந்த சமூகத்திற்காகக் குரல் கொடுத்துவருபவர் என்னும் வகையில் முக்கியமானவர். இவரது கடந்த கால அரசியற் செயற்பாடுகள் முரண்பாடுகள் மிக்கவை.  சொந்த வாழ்க்கை அனுபவங்கள் காரணமாக இவர் வெளிப்படுத்தும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சைகளைக் கிளப்புபவை. இவரது செயற்பாடுகளில் முக்கியமானதாக நான் கருதுவது இதுவரை காலமும் பல்வேறு விதங்களில் ஒடுக்கப்பட்டு வரும் தான் சார்ந்த சமூகத்துக்காகக்குரல் கொடுத்து வருவது. அதனை ஏற்காமல் மூடி மறைத்து, கடந்து சென்றிட முடியாது. அது தீக்கோழி தன் தலையை மண்ணுக்குள் புதைப்பது போன்றது. 

Sunday, February 22, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!


வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!


- இசை & குரல் - SUNO AI.   ஓவியம் - கூகுள் AI

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்வது
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிவதும் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருப்பை அறிந்து கொள்வதற்கு நம்
இருப்பின் காலம் போதவே போதா.
இருந்தும் இருப்பை முழுவதும் அறிய
இருக்கும் வரையில் முயற்சி செய்வேன்.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன். 

வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!


இப்பாடலில் மேனாட்டு, கீழ்நாட்டு வாத்தியக் கருவிகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் பாவித்திருக்கின்றேன்.  அத்துடன் இராகம் - ஆனந்த பைரவியைப் பாவித்து உருவாக்கும்படி செயற்கை நுண்ணறிவைப் பணித்தேன். அதில் எவ்வளவுதூரம் அது வெற்றி அடைந்திருக்கின்றது என்பதை இசை வல்லுநர்கள்தாம் கூற வேண்டும். பாடல் அற்புதமாகவே பாடப்பட்டிருப்பதாகவே கேட்கையில் நான் உணர்ந்தேன். நீங்களும் அப்படியே உணர்வீர்கள் என்று கருதுகின்றேன்.

வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!

- இசை & குரல் - SUNO AI.   ஓவியம் - கூகுள் AI

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்வது
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிவதும் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முன்வைத்து 'கூகுள் நோட்புக் எல்எம்'மின் திறனாய்வு!

'கூகுள் நோட்புக் எல்எம்' (Google notebookLM) மூலம் மிகவும் பயனுள்ள கூகுள் நிறுவனத்தின் மென்பொருள்.    எனது சிறு நாவலான 'அமெரிக்க...