Tuesday, June 16, 2026
'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு!
'கனவு' இதழின் 'இலங்கைச் சிறப்பிதழ்'!
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வரும் இலக்கியச் சிற்றிதழ் 'கனவு'. விளம்பரங்கள் அற்று வெளியாகும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'கனவு' இதழின் ஆகஸ்ட் 1991 இதழ் 'இலங்கைச் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது.
Sunday, June 14, 2026
வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல்!
எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூலின் முதல்பிரதி தமிழகத்தில் ஸ்நேகா (தமிழகம்) & மங்கை (கனடா) வெளியீடாக 1996இல் வெளியானது. அண்மையில் திருத்தப்பட்ட இரண்டாவது பிரதி அமேசன் - கின்டில் மின்னூலாக வெளியானது.
Wednesday, June 10, 2026
'இமயம்' சாய்ந்தது: இயக்குநர் பாரதிராஜா மறைவு!
| - இயக்குநர் பாரதிராஜா - |
இயக்குநராக, தயாரிப்பாளராக, திரைக்கதை ஆசிரியராக, நடிகராக எனப் பன்முக ஆற்றல் பெற்ற கலைஞர் அவர்.
நாடகத்தனமான வசனங்களும், 'செட்'டுகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த்திரையுலகுக்கு உயிர்த்துடிப்புடன் கூடிய கிராமத்து மண்ணை அறிமுகப்படுத்திவர் 'இயக்குநர் இமயம்' என்று அறியப்பட்ட பாரதிராஜா. அண்மைக்காலமாக அவர் பற்றி வெளியான செய்திகளின் அடிப்படையில் அவர் விரைவில் மறைவார் என்னும் எண்ணம் தோன்றியிருந்த போதும், உண்மையில் அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியைத்தான் தந்தது. பேரிழப்புத்தான்.
இவரது திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்தவை: பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, மண் வாசனை . இ வை உடனே நினைத்ததும் நினைவுக்கு வந்தவை. இப்படைப்புகள் பாரதிராஜாவின் புகழைக் கலையுலகில் நிறுத்தி வைக்கும். இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரையும் நானும் பகிர்ந்து கொள்கின்றேன்.
Tuesday, June 9, 2026
கலாமோகனின் 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை பற்றி.....
| எழுத்தாளர் க.கலாமோகன் |
கடந்தவாரம் ஸ்கார்பரோவில் நடைபெற்ற 'துவாரம்' சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டில் உரையாற்றியவர்கள் தொகுப்பிலுள்ள 'காதல் கதைகளும், சில காதலிகளும்' சிறுகதை ப்ற்றிக் கூறிய கருத்துகளைக் கேட்டபோது அவர்களில் எவருமே அக்கதையைச் சரியான கோணத்தில் புரிந்து கொண்டார்களா என்றொரு கேள்வி என் மனத்தில் எழந்தது.
அந்தக் கதை காதல் கதைகள் எழுதும் வயோதிப் எழுத்தாளர் ஒருவர் பற்றிய கதை சொல்லியின் விபரிப்பு. அதன்படி அக்கதை பற்றி உரையாடியவர்கள் அவ்வயோதிப எழுத்தாளின் பல்வேறு காதலிகளைப்பற்றியும், இவ்விதமான சமூகப் பிறழ்வுகள் அன்றாடம் நடப்பவைதாம் என்றும், ஆனால் அவை பொதுவாகச் சமூகம் அறியாதவகையில் மறைக்கப்பட்டு விடுகின்றன என்றும் குறிப்பிட்டார்கள். ஆனால் உண்மையில் அந்தக் கதை என்ன கூறுகின்றது? அவ்வெழுத்தாளரின் காதலிகளைப் பற்றி யார் கூறுகின்றார்கள்? அவற்றில் உள்ள உண்மைத் தன்மை என்ன? இவை போன்ற விபரங்களை அவர்கள் அச்சிறுகதையூடு ஆராய்ந்தார்களா? இவை பற்றிய கட்டுடைப்புகளே இச்சிறு பதிவு.
Sunday, June 7, 2026
''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' - எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ்!
''மஞ்சு வந்து , கொஞ்சுகின்ற மலை அழகு! (மேற்குத் தொடர்ச்சி மலை)'' என்று குறிப்பிட்டு, என் பால்யப் பருவத்து நண்பரும், ஶ்ரீராம் விக்னேஷ் என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவருமான நண்பர் வவுனியா விக்கி இவ்வழகிய மேகங்களில் தாலாட்டில் மெய்ம்மறந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையினை தன் அலைபேசிக் கமராவுக்குள் அகப்படுத்தி அனுப்பியிருந்தார்.
நெஞ்சைக் கொள்ளும் இயற்கையின் வனப்பில் நானும் மெய்ம்மறந்தேன். விக்கி சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. அதனை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இவை.
![]() |
| எழுத்தாளர் ஶ்ரீராம் விக்னேஷ் (வவுனியா விக்கி) - |
இன்று நண்பருக்குப் பிறந்தநாளும் கூட. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விக்கி. இயற்கையின் தாலாட்டில் , மேகங்களின் அரவணைப்பில் தன்னை மெய்ம்மறந்து கிடக்கும் மலைத்தொடரின் அழகில் எம்மையும் மெய்ம்மறக்க வைத்ததற்கு நன்றியும் கூட.
மேற்குத்தொடர் மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல் எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் 'பொன் விலங்கு' நாவலை நினைவூட்டுகின்றது. உண்மையில் நாவலில் அவர் கொடைக்கானல் என்னும் பெயரைப் பாவித்திருக்க மாட்டார், மல்லிக்கைப்பந்தல் என்றே குறிப்பிட்டிருப்பார். ஆனால் அதனை அவர் கொடைக்கானலுக்காகவே பாவித்திருக்க வேண்டுமென்று உணர்வதுண்டு. ஏனென்றால் மல்லிக்கைப்பந்தலும் மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள நகரம்.
விசுவநாதன் டீச்சர் (திருமதி தவமணி விசுவநாதன்) மறைவு!
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும், முன்னாள் யாழ் மேயர் திரு.இராசா விசுவநாதனின் மனைவியுமான விசுவநாதன் டீச்சர் மறைந்ததாக வாட்ஸ் அப்பில் என் சகோதரிகளில் ஒருவர் தகவல் அனுப்பியிருந்தார்.
விசுவநாதன் டீச்சர் அம்மாவின் (நவரத்தினம் டீச்சர்) சிநேகிதிகளில் என் நினைவுக்கு உடனடியாக வரும் இருவரில் ஒருவர். மற்றவர் முன்னாள் யாழ் இந்த மகளிர் கல்லூரி அதிபரான இராமநாதன் டீச்சர்.
என் அப்பாவின் மறைவின்போது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வந்திருந்தார். அம்மாவுடன் அழுதபடி நின்ற தோற்றம் மனக்கண்ணில் தெரிகிறது.
அம்மாவின் பால்யப் பருவத்திலிருந்து பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையாக எனத் தொடர்ந்த நட்பு தொடர்ந்து நீடித்தது.
முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!
முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics' . 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...



