Sunday, December 10, 2023
'டைம்' சஞ்சிகையின் நூற்றிலொருவர் எம்.சஞ்சயன்!
முனவைர் எம்.சஞ்சயன் (M. Sanjayan) 'சர்வதேசப் பேணுப்படுதல்' (Conservation International) என்னும் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி. அமெரிக்காவில் வசிப்பவர். 'பேணப்படுதல்' துறையில் அறிவியல் அறிஞரான இவர் எழுத்தாளரும் கூட. தொலைக்காட்சிகளில் இத்துறையில் செயற்படும் இவர் இயற்கையைப் பேணுவதன் மூலம் மானுடரின் வாழ்வை வளப்படுத்த வேண்டுமென்று செயற்படுபவர். இவரது கட்டுரைகள் Science, Nature & Conservation Biology போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது இயற்கையைப் பேணுதல் பற்றிய செயற்பாடுகளுக்காகவும், எழுத்துகளுக்காகவும் சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் கவனத்தை ஈர்த்திருப்பவர். 'சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல்' துறையில் . கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் ஓர் இலங்கைத் தமிழர். இவர் பிரதான நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றும் அமைப்பு சூழற் பாதுகாப்புக்காகச் செயற்படும் முக்கியமானதோர் அமைப்பு. இவரது சூழலியல் பேணல் மற்றும் காலநிலையைச் சீராக்குதல் பங்களிப்புகளுக்காகச் சர்வதேசப் புகழ்பெற்ற 'டைம்' (Time) சஞ்கை வருடாவருடம் தேர்ந்தெடுக்கும் 100 சிறந்த ஆளுமைகளில் ஒருவராக இவ்வாண்டு (2023) இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் ''டைம்' சஞ்சிகையின் பட்டியலில் இடம் பெறும் முதலாவது இலங்கையைர், இலங்கைத் தமிழர் இவரென்று நினைக்கின்றேன்.
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் மகன் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. தந்தை புனைவில் கவனம் செலுத்தினால் தனயன் அபுனைவில் கவனம் செலுத்துகின்றார். வாழ்த்துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
யாழ்ப்பாணம் போவோமா?
[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...

No comments:
Post a Comment