Tuesday, December 19, 2023

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை)


உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட முனைவர் வே.சீதாலட்சுமியின் 'தமிழ் நாவல்கள்' (அகர வரிசை) முக்கியமானதோர் ஆவணம். இந்நூலில் 6298 நூலாக வெளிவந்த நாவல்களின் பெயர்ப்பட்டியலைத் தொகுத்திருக்கின்றார் முனைவர் வே.சீதாலட்சுமி.
 
இந்நூலில் எனக்குத்தெரிந்த ஒரு சில நாவல்களின் பெயர்களைத் தவிர நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்கள் பலவற்றின் பெயர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சையைத் தந்தது.
 
உமாசந்திரனின் 'முழுநிலா', மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில்  வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), கல்பனாவின் 'யுகசந்தி', மாயாவின் 'மூடுபனி' , ஜெகசிற்பியனின் 'மண்ணின் குரல்' போன்றவகை நான் தேடிக்கொண்டிருக்கும் நாவல்களில் அடங்குவன.
அக்காலகட்டத்தில் பல நாவல்களை எழுதியவர் எழுத்தாளர் பி.எம்.கண்ணன். இவரை இன்று தமிழ் இலக்கிய உலகு மறந்தேவிட்டதெனலாம். இவரது வெளியான நூல்களையெல்லாம் இத்தொகுப்பின் பட்டியலில் காணமுடிகின்றது.
 
மாயாவியின் மொழிபெயர்ப்பில் உருவான இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்திருக்கக் கூடும்.)
 
இவ்விதமான ஆவணங்கள் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வுகளுக்கு வழித்துணையாக இருப்பவை. அதனால் ஆரோக்கியமானவை..
இந்நூலின் ஆவணச்சிறப்புக்கு ஓர் உதாரணம்;
 

எனக்கு மாயாவி எழுதிய ஓரிரு நாவல்கள் பற்றியே தெரியும். அவை கண்கள் உறங்காவோ (கல்கியில் தொடராக வெளியானது), வாடாமலர் (ராணிமுத்து), மூடுபனி (கலைமகள்). 
 
இவ்வாவண நூலில் மாயாவியின் படைப்புகளைத் தேடியபோது 35 நாவல்கள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. இவை மாயாவி எழுதிய நாவல்களின் முழுமையான பட்டியல் அல்ல. ஏனென்றால் கல்கியில் மாயாவியின் நாவல்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவை வந்துள்ளன. 
 
மாயாவியின் நூல்கள்
 
1. அகதி : மாயாவி ; 1951 , 156. சென்னை , சாந்தி , ரூ 2 , 1955 , 168 , தென் ஆற்காடு , புதுமை , ரூ 2 .
2. அவள் ; மாயாவி . 1951 , 64 , சென்னை , அமுதம் . அணா 8 .
3. அழிவற்ற காதல் ; மாயாவி , 1958 , 336 , பம்பாய் , பெர்ல் ,
4. அன்பின் உருவம் ; மாயாவி , 1950 , 111 , புதுக்கோட்டை பழநி , ரூ.1-8-0
5. அன்பின் ஒலி ; மாயாவி ,
6. இரவில் நடந்தது ; மாயாவி , - , 56 , ரூ 1 .
7. இளமைக்கனவு , மாயாவி , 1967 , 534 , சென்னை , சோதி நிலையம் , ரூ 5 மூலம் . The yearling , மார்ஜோரி கின்னான் ராலிங்ஸ் .
8. எத்தனை கோடி இன்பம் ; மாயாவி , மார்ச் . 1962 , 559 . சென்னை , கலைமகள் , ரூ6-50 . (இப்பெயரில் குமாசி சித்ரா என்னும் பெயரில் விகடனில் ஒரு தொடர் நாவல் வெளியானது நினைவிலுண்டு. குமாரி சித்ரா ஒருவேளை மணியனாக இருககக் கூடும். அவர் அப்பொழுது குமாரி பிரேமலதா என்னும் பெயரில் லவ பேர்ட்ஸ் தொடர் நாவலை எழுதினார். இரண்டுமே ஓவியர் ஜெயராஜின் ஓவியங்களுடன் வெளியானவை.)
9. ந்தும் மூன்றும் அல்ல ; மாயாவி , 1960 , 395 , பம்பாய் , பெர்ல் , 75 பை , ஆங்கில , இன்னஸ் , ஹெலன் மாக் .
10. கண்கள் உறங்காவோ ; மாயாவி ; மார்ச் 1961 , 398 , சென்னை , பாரதி , ரூ 15 .
11. கதையும் கற்பனையும் ; மாயாவி . சென்னை அமுதம் , ரூ 1.50 .
12. கவரிமான் ; மாயாவி , 1963 , 273
13. காதலர் சொர்க்கம் ; மாயாவி , 1977. 315 , சென்னை த . எ . கூ . ச , ரூ 10 .
14. கோமேதகக் களவு ; மாயாவி , 1961 , 215 , சென்னை , வானதி , ரூ 3.30 .
15. சங்கமம் : மாயாவி , 1956 , 149 , சென்னை , அமுதம் , ரூ 2 .
16. சவால் சரோஜா , மாயாவி , 1970. 244 , சென்னை ,
17. சிங்க மேட்டுப் பங்களா ; மாயாவி , 1961 , 164 , சென்னை , வானதி , ரூ 3.50 .
18. தங்கம் ; மாயாவி , 1967 , 136 , சென்னை , குயிலன் ,
19. துள்ளும் உள்ளம் ; மாயாவி , 1965 , 602 , சென்னை மகள் , ரூ 7-50 .
20. தெய்வம் தந்தது ; மாயாவி , 1953 , 100 , சென்னை , அமுதம் , ரூ 1-4-0 .
21. தொடுவானம் : மாயாவி , 1962 , 590 , சென்னை , வானதி .
22. நேசம் மறக்கவில்லை நெஞ்சம் ; மாயாவி , 1967 , 390 , சென்னை வானதி , ரூ 7.50 .
23. பாசக்கயிறு : மாயாவி , - , சென்னை , டம்டம் , 12 அணா . 243
24. பூகம்பம் ; மாயாவி , 1956 , 155 , சென்னை , அல்லயன்ஸ் . ரூ 2 .
25. பெண் வாரிசு ; மாயாவி , நவம் . 1966 , 330 , சென்னை , இளங்கோ , ரூ 4 , ஆங்கில . - , ஹென்றி ஜேம்ஸ் .
26. மதுராந்தகியின் காதல் ; மாயாவி , 1962 , 320 , சென்னை , வானதி , ரூ 7-50 .
27. மறுமலர்ச்சி ; மாயாவி , 1950 , 495 , சென்னை , அமுதம் , ரூ 7 .
28. மூடுபனி ; மாயாவி , 1969 , 537 , சென்னை , , கலைமகள் ,
29. ரோமுக்கு அப்பால் , மாயாவி , 1959.394 . பம்பாய் . யெர்ல் ,
30. வாடா மலர் ; 1951 , மலர் ; 1951 , 1956 , 168. சென்னை , அமுதம் ,
ரூ 2-50 . மாயாவி , ஏப் . 1969. சென்னை , ராணிமுத்து . ரூ 1 .
31. வாடா விளக்கு ; மாயாவி , 1958. 97. 184 , சென்னை அமுதம் , 30 பை ( இரண்டு பாகம் 🙂
32. வால் நட்சத்திரம் ; மாயாவி , 1952 , 1959 , 68 , சென்னை 30 பை .
33. வீதியில் ஒரு விடுதி ; மாயாவி , 1957. 472 , பம்பாய் , பெர்ல் , 75 பை , ஆங்கில . எ ரூம் ஆன் த ரூட் . காட்ப்ரே ப்ளண்ட்ன்
34. ஜீவத்திரை ; மாயாவி , 
 

 
 
girinav@gmail.com

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்