Tuesday, December 19, 2023

முனைவர் செ.இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள்!


இவர் ஒரு மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியை. இவர் முனைவர் செ.இராஜேஸ்வரி. மொழிபெயர்ப்பு, இதழியல், ஆய்வு, கற்பித்தல் எனப் பன்முக ஆளுமை மிக்க இவர் எம்ஜிஆரின் சினிமா, அரசியல் பற்றிய் ஆய்வுகளில் நாட்டம் மிக்கவர்.

எம்ஜிஆர் பற்றி விகடனில் தொடர் எழுதியவர். கனடாவிலிருந்து வெளிவரும் எழுத்தாளர் அகிலின் 'தமிழ் ஆதர்ஸ்.காம்' இணையத்தளத்தில் எழுதி வருபவர்.

இவரது நோக்கம் குறைந்தது 100 நூல்களையாவது எம்ஜிஆர் பற்றி எழுத வேண்டுமென்பது. இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மதுரையிலிருந்து சந்திரோதயம் என்னும் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது.

இவரது எம்ஜிஆர் பற்றிய நூல்கள் இணையக் காப்பகத்தில் (Archive.org) ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

எம்ஜிஆரால் எவ்விதம் தமிழகத்தின் ஆட்சியை இருந்தவரையில் தக்க வைக்க முடிந்தது என்பதற்கு ஓர் ஆதாரம் இவர். அவரால் பாமர மக்களை மட்டுமல்ல படித்த மக்களையும் ஈர்க்க முடிந்தது. இவ்விதம் மக்களைப் பரந்துபட்டரீதியில் தன் பக்கம் அவரால் ஈர்க்க முடிந்ததால்தான் தொடர்ந்து அரசியலில் வெற்றிவாகை சூட முடிந்தது. எம்ஜிஆரைப் போல் ஆக வேண்டுமென்று கனவு காணும் நவ காலத்து நாயகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமிது.



முனைவர் செ.இராஜேஸ்வரியின் எம்ஜிஆர் பற்றிய நூல்கள் புகைப்படங்கள், தகவல்களால் நிறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நூலும் நூறு பக்கங்களுக்குக் குறையாதவை. நூல்களை வாசிக்க -
https://archive.org/search?query=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D


 

No comments:

எழுத்தாளர்களைக் கொண்டாடுதல் என்பதும் சார்பானது!

எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது...

பிரபலமான பதிவுகள்