Sunday, December 10, 2023

அஞ்சலி: ரிவாட் அலாரீர் (Refaat Alareer)


பாலஸ்தீனக் கவிஞரும், காசாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ரிவாட் அலாரீர் (Refaat Alareer) கடந்த புதன் இஸ்ரேல் காசா மீது நடத்திய குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இஸ்ரேலின் பலத்த குண்டுத்தாக்குதல்களுக்கு மத்தியிலும் கவிஞர் ரிவாட் அலாரீர் காசாவை விட்டு நீங்காமல் அங்கேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்.முகநூல் எதிர்வினைகள்:

1. Cheran Rudhramoorthy: //???? Important information on Refaat’s assassination: The day before yesterday, Refaat received a phone call from the Israeli intelligence about locating him in the school where he took refuge. They informed him that they were going to kill him. He left the school not wanting to endanger the others, and at 6 p.m. his sister's apartment was bombed, where he was killed, his sister and her four children.// The above information was shared by fellow Gaza poet Mosab Abu Toha , who has been continually reporting from Gaza until a few days ago.

2. Kunapalan Selvaratnam - எங்கே போனது மேற்கத்தியர்கள் போற்றும் ஜனநாயகம், மனித நேயம், உலக சட்ட விதிமுறைகள், ஜ.நாவின் வரையறைகள், யுத்த குற்றங்கள்? மேற்கத்தியர்களின் விதிமுறைகள் எல்லாம் மூன்றாவது உலக நாடுகளுக்கே மட்டுமே! மேற்கத்தியர்களின் அசல் முகம் தெரிந்துவிட்டது.

3. Navaratnam Giritharan -  மேற்கு நாடுகள் உக்ரெயின் & ருஷ்யா யுத்தத்தில் ருஷ்யாவுக்கு எதிராக, அதன் செல்வந்தக் குடிமக்களுக்கு எதிராக எத்தனை எத்தனை தடைகளை விதித்தன. அவர்களது சொத்துகளை அபகரித்தன. ருஷ்ய அதிபருக்கெதிராக போர்க்குற்ற விசாரணை நடத்திக் குற்றவாளியாக்கின. ஆனால் இன்று இஸ்ரேல் காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது தொடுத்திருக்கும் தாக்குதல்கள் ஏற்படுத்தியிருக்கும் அழிவுகள் கண்டும் மேற்படி மேற்குலகம் மெளனகமாகவிருக்கிறது.

4. Pathmanaban Mahalingam - தேசப்பற்று மிகுந்த கவிஞன் . அவர் இறந்தாலும் உலக மக்கள் நினைவில் என்றும் வாழ்வார் .

5. Mohd Jihad - பெருந்துயரம். சமூகத் தலைவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள் என குறிவைத்துக் கொல்லப்படுவது தொடர்கிறது. ஐ.நா சபை, ம‌னித உ‌ரிமை அமைப்புகள், சர்வதேச சமூகம், புத்திஜீவிகள் என அனைவரும் வாய்மூடி மௌனித்து இருக்க, ஒரு பெரும் அநீதி இழைக்கப்பட்ட சமூகம் அழிந்து கொண்டிருக்கிறது. இறைவா! இந்த அப்பாவிகளை காப்பாற்ற யாருமே இல்லையா???

6. Veluppillai Thangavelu - ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர்த் தாக்குதல் நடத்திய போது ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதல் இஸ்ரேலிய படைகள் மீதோ, இஸ்ரேலிய இராணுவ இலக்குகள் மீதோ நடந்திருந்தால் உலகம் ஒன்றும் சொல்லியிருக்காது. பொது மக்களையும் தாக்கிய காரணத்தால் இஸ்ரேல் திருப்பித் தாக்க இடம் கொடுத்துவிட்டது. இஸ்ரேல் நாட்டை பல அராபு நாடுகள் ஒப்பித்துவிட்டன. ஹாமாஸ் மட்டும் இஸ்ரேல் நாட்டை ஒப்பிக்கத் தயாரில்லை. இப்போது காசாவில் இருந்து ஹாமாசை வெளியேற்ற இல்லை துடைத்து அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துவிட்டது. இதனால் காசா பகுதி மேற்குக் கரையோடு மீண்டும் இணைக்கப்படப் போகிறது. அராபு - யூதச் சிக்கலுக்கு இரண்டு நாடுகளை உருவாக்குவதே தீர்வுக்கு வழி. Two state solution.

7. Kasi Senthivel - இஸ்ரேலிய சியோனிச கொடூரர்களின் கொலைவெறிக்கு வன்மையான கண்டனம். ஆழ்ந்த அஞ்சலி.

8. Sreeno Sri Sreesu  - Without any unadulterated mind or action, just for the sake of publicity and fake show-off, many BIASED LOW-LIVES come and vomit lies in the social media that is so nauseating and unsavory. This SOCIAL MEDIA (especially "X", formerly known as Twitter) is full of this so-called INTELLECTUAL PHONIES. And, obvious idiots. மெய் விரும்பா பொய்யர். யதார்த்தத்தையும் நிதர்சனத்தையும் பொய் மாற்றாது.

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்