'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, February 28, 2024
Tuesday, February 27, 2024
தந்தை பெரியார் பற்றி... - தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா -
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவரது சமூகப்பின்னணியைக் காரணமாக வைத்து விமர்சிப்பார்கள் அவரது அரசியல் எதிரிகள். ஆனால் அவரது இக்கட்டுரையைப் படித்தபோது உண்மையிலேயே வியந்துதான் போனேன். எவ்வளவு தெளிவாகப் பெரியாரின் சமூக, சீர்திருத்தக் கருத்துகளை அவர் அறிந்து வைத்திருக்கின்றார். பெரியார் மீது எவ்வளவுதூரம் மதிப்பு வைத்திருக்கின்றார். அவரை அவரது சமூகப்பின்னணி பற்றி விமர்சித்த அரசியல் எதிரிகளுக்குக் கூட இவ்வளவு தெளிவு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. தனது அரசியல் கருத்துகளில் தெளிவாக இருந்ததனால்தான் அவரால் இறுதிவரை மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிற்க முடிந்திருக்கின்றது. Kollywood Entertainment முகநூலில் பகிர்ந்திருந்த ஜெயலலிதாவின் 'தாய்' சஞ்சிகையில் எழுதிய கட்டுரை. -
ஜெயலலிதாவின் கட்டுரை கீழே;
1973-ல், நான் கதாநாயகியாக நடித்த ''சூரியகாந்தி" தமிழ்த் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த வெற்றி விழாவுக்குத் தலைமை வகித்து, கலைஞர்களுக்குப் பரிசுகளை வழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்களை நான் நேரில் சந்தித்தது அதுவே முதன் முறை, திரைப்படங்கள் என்றாலே அவருக்கு அவ்வளவாக விருப்பம் இருக்காது. திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட விழாக்களிலும் சாதாரணமாக அவர் கலந்து கொள்ள மாட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியோ, அன்றைக்கு அவ்விழாவுக்குத் தலைமை தாங்க தந்தை பெரியார் அவர்கள் சம்மதித்ததே என்னுடைய பேரதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.
Monday, February 26, 2024
நாவல்: வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்'
ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எனது நாவல் 'நவீன விக்கிரமாதித்தன்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாசியுங்கள். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கவிதைத் தொகுப்பு: ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் - வ.ந.கிரிதரன் -
பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தற்போது நூலகம் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசியுங்கல். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Sunday, February 25, 2024
தொடர் நாவல்: மனக்கண் (1) - முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை! - அ.ந.கந்தசாமி -
- ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூலை 29, 1967 வரை வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இந்நாவல் அமேசன் கிண்டில் பதிப்பில் மின்னூலாகவும் வெளியாகியுள்ளது. இன்னுமொரு நாவலான 'கழனி வெள்ளம்'. எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். -
முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை
ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. "ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?" என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு. ஆனால் அதை எப்படிக் கண்டறிவது? அந்தக் கடைக்கு போவதற்குத்தான் வீட்டிலுள்ள யாருமே அவனை அனுமதிப்பதில்லையே! ஆகவே அந்த விஷயம் என்றைக்குமே தீர்க்கப்படாத மர்மமாகவே அவன் உள்ளத்தில் புதையுண்டுவிட்டது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவாக..
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்ததினம் பெப்ருவரி 24. என்னைப்பொறுத்தவரையில் எம்ஜிஆரும் அவரும் என் அபிமான நடிகர்கள். என் பால்ய பருவத்தில் நான் அதிகமாகத் தமிழ்ப்படங்கள் பார்க்கத் தொடங்கிய காலத்தில் திரையில் கோலோச்சிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.
அரசியலைப்பொறுத்தவரையில் ஆணாதிக்கத்திலுள்ள தமிழக அரசியலில் தனித்து, துணிச்சலாக செயற்பட்டவர். அந்தத்துணிச்சல் எனக்குப் பிடிக்கும். பெண் சிசுக்களைக் காப்பாற்றத் தொட்டில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண்களுக்குப் பல்வேறு வகைகளில் பொருளியல்ரீதியிலான உதவித்திட்டங்களை ஆரம்பித்தார். அம்மா உணவகத்தின் மூலம் அடித்தட்டு மக்களும் பயன்படையச் செய்தார்.
எம்ஜிஆர் முதல்வராகவிருந்த காலத்தில் சத்துணவுத்திட்ட நிர்வாகத்தில் நிலவிய சீர்கேடுகளைக் களைந்திட உதவினார். தமிழக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காதவாறு தன் அரசியலை நடத்தினார். இவையெல்லாம் அவரது ஆரோக்கியமான பக்கங்கள். அவரது திட்டங்களினால் பலர் பயனடைந்தார்கள்.
Sunday, February 18, 2024
நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமார்!
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் சில ஊர்கள் கலைகளுக்குப் புகழ்பெற்றவை. அளவெட்டி இத்தகைய ஊர்களிலொன்று. இன்னுமொரு ஊர் கரவெட்டி. கலைஞர்கள் பலரை, சமூக,அரசியற் செயற்பாட்டாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்கிய ஊர் கரவெட்டி. மார்கசியக்கருத்துகளை உள்வாங்கிய அரசியல் ஆளுமைகள் பலரைத் தந்த ஊர் அது. இந்நாடகக் கலைஞர் அண்ணாவியார் கணபதி உதயகுமாரும் கரவெட்டிக்குப் புகழ் சேர்க்கும் கலைஞர்களில் ஒருவர்.
Friday, February 16, 2024
வெள்ளி சிணுங்கி அழ ஏலே ஏலோ
கவிஞர் மஹாகவியின் 'புதியதொரு வீடு' இசை நாடகத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை மிகவும் சிறப்பாகப் பாடியிருக்கின்றார் எழுத்தாளரும், பாடகருமான திவ்வியராஜன். திவ்வியராஜனின் இதயத்தை வருடித் தாலாட்டும் குரலுக்கு நான் எப்போதும் அடிமை. என்ன குரல்! நல்ல குரல் வளம் இருந்தால் மட்டும் போதாது. வரிகளை உணர்ந்து, உள் வாங்கித் தன்னை மறந்து , வரிகளுடன் ஒன்றிப்பாடகர் பாடுகையில்தான் அப்பாடல் கேட்பவரின் இதயங்களை வருடிச் சென்று அதனுடன் ஒன்றிட முடியும். திவ்வியராஜனின் குரலைக் கேட்பதும் இன்பம். அவர் பாடும் அழகைப் பார்ப்பதும் இன்பம்.
கவிஞரின் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளன. வெள்ளி சிணுங்கும் கும்மிருட்டு விண். மெல்லச் சுழன்றெழுந்து மேல் விழும் காற்று. வார் கடலின் நீர் கிழிக்கும் வள்ளம். கடற்றொழிலாளர் கரைவலை வள்ளம் வலித்துக் கடலில் செல்லும் காட்சியினை,சுற்றியிருக்கும் இயற்கைச் சூழலைச் சிறப்பாக, உணர்வுபூர்வமாகச் சித்திரித்திருக்கின்றார் கவிஞர் மஹாகவி.
Wednesday, February 14, 2024
ஆவணக்காணொளி: கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை
எழுத்தாளர் கு,அழகிரிசாமி பற்றிய சிறப்பானதோர் ஆவணக்காணொளி. அவரை எழுத்தாளராக மட்டுமே அறிந்திருந்த எனக்கு 'கு.அழகிரிசாமி கொலக்கால் திரிகை' என்னும் இக்காணொளி அவரது பன்முக ஆளுமையை அறிய வைத்தது. இதன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தைச் சிறப்பாகச் செய்திருப்பவர் அ.சாரங்கராஜன். வாழ்த்துகள்.
Tuesday, February 13, 2024
Camels are marvelous!
Camels never break down
and never get tired seeing deserts,
never get scared witnessing desert storms.
they love traveling long journeys.
To read the full poem
எழுத்தாளர் டானியல் அன்ரனியின் 'முல்லை' சஞ்சிகை!
இலங்கையில் வெளியான கலை, இலக்கியச் சஞ்சிகைகள் பற்றிய பூரணமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது அவசியம். நூற்றுக்கணக்கில் சஞ்சிகைகள் பல வெளிவந்து , பொருளாதாரச் சூழல் காரணமாகத் தாக்குப்பிடிக்க முடியாது காணாமல் போயிருக்கின்றன.இவை பற்றியெல்லாம், இவற்றில் எழுதிய எழுத்தாளர்கள், பங்களித்த ஓவியர்கள் , வெளியான பல்வகை ஆக்கங்கள் பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
Thursday, February 8, 2024
இணையத்தில் தமிழும், பதிவுகள், திண்ணை & தமிழ்மணம் ஆகியவற்றின் பங்களிப்பும் பற்றி..
Wednesday, February 7, 2024
Poem: A liberated bird in the empire of solitude
எனது ஆங்கில வலைப்பதிவில் A liberated bird in the empire of solitude! என்னும் தலைப்பில் கவிதையொன்றை பதிவிட்டுள்ளேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கின்றேன். உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன்.
Tuesday, February 6, 2024
Poem: Dimensional Barrier and the Question of God! or You Are My God!
எனது ஆங்கில வலைப்பதிவில் Dimensional Barrier and the Question of God! or You Are My God! என்னும் தலைப்பிலொரு கவிதையினைப் பதிவிட்டுள்ளேன். அதனை எனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன். உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.
Poem: Dimensional Barrier and the Question of God! or You Are My God!
Below us, there are Flatlanders.
Visiting their world is my preferred hobby.
Differences in dimensions benefit us,
because of this,
the world of Flatlanders always entrances me.
The reason behind this bliss is the superiority complex.
It's our weakness as well.
Is it not enough for my bliss or entrancement?
Monday, February 5, 2024
எம்ஜிஆர் பற்றிய அவதூறுப்பேச்சு! அரசியல் 'லூசு' ஒருவரின் அறியாமையா?
எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு' என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.
Friday, February 2, 2024
'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -
நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."
தற்போதுள்ள அரசியல் சூழல் என்னைப்பொறுத்தவரையில் நடிகர் விஜய்யுக்குச் சாதகமான பல விடயங்களைக் கொண்டுள்ளது.
Thursday, February 1, 2024
எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் 'தாய்வீடு'க் கட்டுரையான "'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்" பற்றி...... வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'வ.ந.கிரிதரனின் கட்டுரைகள்' என்னும் எனது நூல் பற்றிய விமர்சனக் குறிப்புகளை பெப்ருவரி தாய்வீடு பத்திரிகையில் எழுதியிருக்கின்றார். இது அண்மையில் 'டொராண்டோ'வில் நடந்த எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்படி கட்டுரை நூல் பற்றி அவர் வாசித்த கட்டுரையின் எழுத்து வடிவம். அருண்மொழிவர்மனுக்கு எனது நன்றி.
மேற்படி விமர்சனக் குறிப்பில் அவர் பல விடயங்களைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார். அவை பற்றி விரிவாக விரைவில் என் பார்வையில் கருத்துகளை முன் வைப்பேன். இங்கு இக்கட்டுரைத்தொகுப்பை என் அபிமானக் கவி பாரதிக்குச் சமர்ப்பித்தது பற்றிய அவரது விமர்சனக் குறிப்புக்கான என் நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
கண்ணம்மாக் கவிதை: இருப்புப் பற்றியதோர் உரையாடல் கண்ணம்மாவுடன்! - வ.ந.கிரிதரன் -
காலவெளி பற்றிக் கதைப்பதென்றால், உன்னுடன் கதைப்பதென்றால் களி மிகும் கண்ணம்மா. கூர்ந்த கவனிப்பும், தெளிந்த கருத்துகளும், தேர்ந்த சொற்களும் உன்...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...