Friday, February 2, 2024

'தமிழக வெற்றி கழகம் (தவெக) : நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்! - ஊர்க்குருவி -


நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். அவர் தனது அரசியல் பார்வை பற்றிக் குறிப்பிட்டுள்ளதை 'இந்து தமிழ்'பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;

"விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்."


தற்போதுள்ள அரசியல் சூழல் என்னைப்பொறுத்தவரையில் நடிகர் விஜய்யுக்குச் சாதகமான பல விடயங்களைக் கொண்டுள்ளது.1. தற்போதைய அரசியல் சூழலில்  அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் போன்ற வசீகரம் மிக்க அரசியல் தலைவர்களைக் காணமுடியாது. கனிமொழி வசீகரமும், ஆளுமையும் மிக்க தலைவரென்றாலும் அவரால் அவர் அமைப்பின் ஆணாதிக்கத்தை மீறி வரும் துணிவும், சூழலும் தற்போது இல்லை.

2. எம்ஜிஆரின் வெற்றிக்கு மக்கள் அவரைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவராக ஏற்றுக்கொண்டது முக்கிய காரணங்களிலொன்று.  நடிகர் விஜய் அத்தகைய ஆளுமைகளில் ஒருவர். ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை , கவரும் ஆளுமை அவருடையது.

3. தனது  நற்பணி மன்றம் மூலம் ஏற்கனவே மக்கள் மத்தியில் பரவால அவரது சமூக சேவை அறியப்பட்டதொன்று.

4. சாதிப்பிளவுகள் , ஊழல் நிறைந்துள்ள தமிழக அரசியலில் இவற்றை மீறி எடுத்துச் செல்லும் ஒருவராக விஜய்யை மக்கள் பார்க்கும் சாதகமான அம்சமும் அவரது அரசியலுக்குத் துணை கொடுக்கும்.

5. எம்ஜிஆரைப் போல் முதல்  தடவையிலேயே ஆட்சியைப் பிடிப்பாரென்று நான் நினைக்கவில்லை. ஆனால் மிகப்பலமான அரசியல் கட்சிகளிலொன்றாக அவரது  கட்சி உருவாகும் வாய்ப்பு  உண்டு. அதன் மூலம் எதிர்காலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சந்தர்ப்பமுண்டு. எம்ஜிஆரைப் பொறுத்தவரையில் ஐம்பதுகளிலிருந்து அவர் தமிழக அரசியலில் செயற்பட்டு வந்த ஒருவர். 1967இல் இருந்து தமிழக சட்டசபையின் உறுப்பினர்களில் ஒருவராக விளங்கியவர். அவரை மக்கள் திமுகவின் முக்கிய தூண்களில் ஒன்றாகவே பார்த்தார்கள். கட்சியில் தலைமைக்கெதிராக முரண்பாடுகள் ஏற்பட்டபோது மக்கள் அவர் பக்கமிருந்தார்கள். இவ்விதமானதோர் அரசியல் பின்னணி நடிகர் விஜய்யுக்கு இல்லை. அண்மைக்கால நற்பணி மன்ற சமூக, சேவை வரலாறு மட்டுமே உண்டு.

6. தவெக, தமிழக வெற்றிக் கழகம் (TVK) திமுக போல் மூன்றெழுத்துக் கட்சி.  தமிழகத்தின் வெற்றிக்காக உழைக்கும் கட்சி என்னும் அர்த்தம் கொண்டது. அதே சமயம் தமிழகத்தின் வெற்றிக் கழகம் என்னும் இன்னுமோர் அர்த்தமும் கொண்டது. தமிழகத்தின் வெற்றிக்காக உழைத்து , தமிழகத்தின் வெற்றிக் கழகமாகத் தனது கட்சியை வளர்த்தெடுப்பது நடிகர் விஜய்யுக்குச் சிரமமாக இருக்காது என்பதென் எண்ணம்.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் - இரவு வானின் இரசிகை நான்! இசை & குரல் - Suno AI ஓவியம் - AI!

இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI இரவு வானை இரசிப்பதில் எனக்கு இன்பமே என்றும் பேர் இன்பமே விரிந்திருக்கும் இரவு வானின் சுடர்கள் வியப்பை...

பிரபலமான பதிவுகள்