Tuesday, February 13, 2024

எழுத்தாளர் டானியல் அன்ரனியின் 'முல்லை' சஞ்சிகை!


இலங்கையில் வெளியான கலை, இலக்கியச் சஞ்சிகைகள் பற்றிய பூரணமான ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது  அவசியம். நூற்றுக்கணக்கில் சஞ்சிகைகள் பல  வெளிவந்து , பொருளாதாரச் சூழல் காரணமாகத் தாக்குப்பிடிக்க முடியாது காணாமல் போயிருக்கின்றன.இவை பற்றியெல்லாம், இவற்றில் எழுதிய எழுத்தாளர்கள்,  பங்களித்த ஓவியர்கள் , வெளியான பல்வகை ஆக்கங்கள் பற்றியெல்லாம் தகவல்கள் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆய்வுகள் செய்யப்பட  வேண்டும்.


எழுத்தாளர் டானியல் அன்ரனி சமர் காலாண்டிதழின் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வந்தவர். சமர் வெளியீட்டகம் மூலம் தனது 'வலை' சிறுகதைத்தொகுதியினையும் ஜனவரி 1987இல் முதற்பதிப்பாக வெளியிட்டவர். ஆனால் எத்தனைபேருக்கு எழுபதுகளில்  இவர் 'முல்லை' என்னும் சஞ்சிகையினை ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வந்தவர் என்பது தெரியும்? ஜனவரி 1987 வெளியான 'வலை' தொகுப்பின் பின்பக்க ஆசிரியர் பற்றிய குறிப்பில் கூட அச்சஞ்சிகை பற்றிய தகவலினைக் காண முடியவில்லை.

'நூலகம்' தளத்திலும் 'முல்லை'யினைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.  இது போல் எத்தனையெத்தனை சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றிய தகவல்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கும், இவற்றைப்பற்றியெல்லாம் அறிவதற்கு இவை பற்றி கிடைக்கப்பெறும் பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தேடிப்பார்க்க வேண்டும். ஆய்வுகள் ஆற்ற வேண்டும்.

இன்னுமொரு விடயம் பழைய சஞ்சிகைகள், பத்திரிகைகளை மேய்கையில் பெண் எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ள விபரங்களை அறிய முடிகின்றது. ஆனால் நாம் பொதுவாக அறிந்த பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை வெகு குறைவானதே. பெண் எழுத்தாளர்களின் சரியான பங்களிப்புகளும் முறையாக ஆராயப்பட வேண்டியது அவசியம். இது பற்றி இலங்கையில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பீடங்கள் கவனத்தில்  எடுக்குமென்று எதிர்பார்ப்போம்.

இங்கு டானியல் அன்ரனியின் 'முல்லை' பற்றி, 31.3.1972 வெளியான ஈழநாடு பத்திரிகையின் செய்திக்குறிப்பைக் காண்கின்றீர்கள். இச்சஞ்சிகை பற்றி அறிந்தவர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


 'வலை' சிறுகதைத் தொகுப்பினை வாசிக்க

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்