Tuesday, April 15, 2025

எழுத்தாளரும், நடிகருமான சோபாசக்தி மீதான பெண்ணிய அமைப்பின் அறிக்கை பற்றி...



'அதற்கமை பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective'  வெளியிட்ட  'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை' அறிக்கை பார்த்தேன். அதன் கீழ் நன்கறியப்பட்ட ஆளுமையாளர்கள் பலர் கையொப்பமிட்டிருந்ததையும் பார்த்தேன். இவ்வறிக்கை பற்றிச் சமூக ஊடகங்களில் பலர் காரசாரமாக விவாதிப்பதையும் பார்க்கின்றென்.  பெண்ணியக் குழு / Adhoc Feminist Collective  வெளியிட்ட  'ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை - https://adhocfeministcollective.blogspot.com/2025/04/blog-post.html

இது முக்கியமான பல குற்றச்சாட்டுகளை எழுத்தாளரும் , நடிகருமான சோபாசக்தி மீது  முன் வைக்கும் அறிக்கை. அவர் சொன்னார், இவ்வறிக்கை பற்றிப் பலரும் தம் கருத்துகளைத்  தெரிவித்து வருகின்றார்கள். சிலர் இதிலுள்ள குற்றச்சாட்டுகளை அப்படியே உண்மைகளாக  ஏற்றுக்கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இவ்விதமாக ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை அணுகும் மனப்பான்மை பல மனித உரிமை மீறல்களை உருவாக்க வல்லது. போராட்டக்  காலத்தில் துரோகிகளாக்கப்பட்ட பலர் மீது, அமைப்புகள் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் விளைவுகளை நாம் அறிவோம்.உண்மையில் சோபாசக்தியின் மீதான குற்றசாட்டுகள் உண்மையென்றால், ஆதாரங்கள் இருந்தால், இவ்விதமான அறிக்கைகளால் அவை அணுகப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றத்தின் முன் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு அவை நிரூபிக்கப்பட வேண்டும். அவ்விசாரணைகளே இக்குற்றங்களின் உணமை, பொய்த்தன்மையினை வெளிப்படுத்தும்.  ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அவை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றங்களை நாட வேண்டும்.

சோபாசக்தியின் அந்தரங்க வாழ்க்கை பற்றி எனக்குத்  தெரியாது. அவருடன் அந்தரங்கமாகப்  பழகியவர்கள் பற்றியும் எனக்குத் தெரியாது. அது அவர்களது தனிப்பட்ட  விடயங்கள்.  ஆனால் அவர்கள் ஏதோ ஒரு  வகையில் பாதிக்கப்பட்டிருந்தால் நீதியை நாட வேண்டும்.  இவ்வகையான அமைப்புகளை நாடினால் இவ்வமைப்புகள் அவர்களுக்கு நீதியை  பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்விதம் செய்யாமல் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினால் அச்செயலுக்கும் நடத்தைப் படுகொலைக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை.

இவை எவையும்ற்ற நிலையில் இவ்விதமான குற்றச்சாட்டுகளை அறிக்கைகளாக வெளியிடுவதும், அவற்றை அப்படியே உண்மைகளாக உள்வாங்கிக் கருத்துகளைத்தெரிவிப்பதும்
என்னைப்பொறுத்தவரையில் ஆக்கபூர்வமான செயலாகத் தெரியவில்லை. ஆனால் நாம் வாழும் சமூக ஊடகங்கள் கோலோச்சும்  காலகட்டத்தில் ஊடகங்கள் வெளிப்படுத்தும் எவற்றையும் அப்படியே உள் வாங்கி உணர்ச்சி வெறி கொண்டு எதிர்வினையாற்றுவதென்பது இயல்பான செயலாக மாறி விட்டது.

No comments:

குறிப்பேடாக விளங்கிய 'சி.ஆர்.கொப்பி' (CR)

எண்பதுகளில் என் உணர்வுகளின் வடிகால்களாக இருந்தவை எழுத்துகளே. அப்பொழுதுதான் மார்க்சிய நூல்களை  வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஒரு வித வெறியுடன்...

பிரபலமான பதிவுகள்