Thursday, April 24, 2025

எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவாக....


பொதுவாக ஒருவரின் வாசிப்பனுபவத்தில் பால்ய பருவம், பதின்மப் பருவம், இளமைப்பருவமென்று பருவங்களுக்கேற்ப வாசிப்பனுபவமும் வளர்ந்துகொண்டே செல்லும். சிலரின் எழுத்துகள் மட்டும் அனைத்துப் பருவத்தினரையும் கவரும் தன்மை மிக்கவை. ஆனால் அவற்றின் அர்த்தங்கள் பருவங்களின் மாறுதல்களுக்கேற்ப மாறிக்கொண்டே செல்லும். உதாரணத்துக்கு மகாகவி பாரதியாரின் எழுத்துகளைக் குறிப்பிடலாம்.  

என் பால்ய பருவத்தில்  என் அப்பா வாங்கித் தந்த பாரதியாரின் கவிதைகள் பிடிக்கும். ஆனால் அப்போது நான் இரசித்த அவரது எழுத்துகளை நான் புரிந்து கொண்டதற்கும், பின்னர் வளர்ந்த பின் வாசித்தபோது அடைந்த இன்பத்திற்கும், புரிதலுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசமுண்டு. அப்போது அவரது சொற்களின் நேரடி அர்த்தம் , இனிமையில் மயங்கிய மனது, பின்னர் வளர்ந்ததும் அவற்றின் பின்னால் மறைந்து கிடக்கும் அர்த்தங்கள் கண்டு பிரமித்துப்போனது.ஜெயகாந்தனின் எழுத்துகளும் அவ்விதமே அவ்வயதிலேயே என்னை ஆட்கொண்டன. அதற்குக் காரணம் அவரது எளிய மொழி நடையும், அன்றாட மானுடர்கள் பற்றிய விபரிப்புகளுமே. 'பிணக்கு' கதையை வாசித்தபோது சாதாரணமாக ஒரு பாட்டனுக்கும், பாட்டிக்குமிடையிலான சண்டையாக விளங்கி வாசித்த மனத்துக்கு ,  வளர்ந்தபின்னர் வாசித்தபோது உண்மை அர்த்தம் விளங்கியது. இது போல் அவரது பல சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் எல்லாமே அன்றும் என் வாசிப்புக்கு மகிழ்வைத்தந்தன. பின்னர் வளர்ந்து , வாசிப்பில் வளர்ச்சி  கண்ட பின்பும் மகிழ்ச்சியைத் தந்தன.

இன்று ஜெயகாந்தனின் பிறந்த தினம். அவரது தோற்றமும், மறைவும் ஏப்ரில் மாதத்தில்தான். அவரது நினைவு ஏற்படுத்திய உணர்வுகளின் விபரிப்பே மேலுள்ள என் எண்ணங்கள்.




No comments:

பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'

- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி -   *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்க...

பிரபலமான பதிவுகள்