Friday, April 11, 2025

தாமரைச்செல்வியின் முதல் நாவல் 'சுமைகள்'


எழுத்தாளர் தாமரைச்செல்வியின் முதல் நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியான 'சுமைகள்'. தற்போது அந்நாவலும் நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

வேலை வெட்டி இல்லாமல், இளமைக் கனவுகள் பல நிறைவேறாத நிலையில் வாழும் செந்தில் என்னும் இளைஞன், தன்னை நம்பி வந்திருக்கும் தீபா என்னும் பெண்ணையும் தன்னுடன் அழைத்து வீட்டுக்கு வருகின்றான். அவ்விதம் வருபவன் அச்சுமையுடன் , வீட்டுச் சுமைகளையும் துணிவுடன் ஏற்றுக்கொள்கின்றான். வீட்டுச் சுமைகளைத் தீர்த்தவுடனேயே தீபாவுடனான வாழ்க்கை ஆரம்பமாகுமென்று உறுதி செய்துகொள்கின்றான். 

தாமரைச் செல்வியின் எழுத்திலிருக்கும் முக்கியமானதோர் அம்சம் வாழ்க்கை எத்துணை இடர்களைத்தந்தாலும், அவற்றால் துவண்டு விடாது, அவற்றை எதிர்கொண்டு , நம்பிக்கையுடன் அதனை எதிர்கொள்ளும் உறுதியினை வெளிப்படுத்தும் பாத்திரங்கள். அதனைத் தாமரைச்செல்வியின் முதல் நாவலான சுமைகள் நாவலிலும் காணலாம். அந்த நம்பிக்கையுடன் , உற்சாகத்துடன், உறுதியுடன் தான் சுமந்திருக்கும் சுமைகளுடன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கின்றான் செந்தில் என்னும் வாலிபன். அவ்விதம் முடியும் நாவலின் முடிவு நம்பிக்கைக்குரிய, இன்பம் மிக்க எதிர்காலத்தைத் தொடக்கி வைக்கிறது. சுட்டிக் காட்டுகின்றது. வாசகர்களுக்கும் இன்பத்தை மட்டுமல்ல, ஒரு வழிகாட்டியாகவும் அமைகின்றது அந்த முடிவு.

நாவலுக்கான இணைப்பு - https://noolaham.net/project/965/96487/96487.pdf



No comments:

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...