என் மூத்த மகள் தமயந்தி எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமய்ம் டொராண்டோவிலிருந்து வெளியாகும் டொராண்டோ ஸ்டார் பத்திரிகை Brand New Planet என்னுன் சிறுவர்களுக்கான பத்திரிகையை வாரந்தோறும் வெளியிட்டு வந்தது. அதில் அவர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான ஊதியத்தையும் பத்திரிகை நிறுவனம் அனுப்பி வைத்துக்கொண்டிருந்தது, ஒரு தடவை அவரை வைத்துக் Cover Story செய்ய வேண்டுமென்று ஸ்டார் பத்திரிகை விரும்பியது. அதற்காக ஒரு புகைப்படக்காரரையும் அனுப்பி வைத்தது. அவ்விதம் அவரது படத்தைத் தாங்கி வெளியான Brand New Planet பத்திரிகையையும், அவரது கட்டுரையையும், அதில் வெளியான புகைப்படங்களையுமே இங்கு காண்கின்றீர்கள்.
சிறுவர்களுக்காக வெளியான அந்தப் பத்திரிகை தற்போது வெளிவருவதில்லை என்பது துரதிருஷ்ட்டமானது.
பின்னர் தமயந்தி 'டொரோண்டொ' பொதுசன நூலகத்தினர் ஆண்டு தோறும் வெளியிடும் பதின்ம வயதினருக்கான Young Voices சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் மூன்று வருடங்கள் (2012-2014) இயங்கியிருக்கின்றார்.
No comments:
Post a Comment