'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Sunday, February 1, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!
- இசை & குரல் - SUNO AI ஓவியம்: கூகுள் AI
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
கண்ணுக்குக் தெரியாத உயிர்கள் எத்தனை!
கண்ணுக்குத் தெரியும் உயிர்கள் எத்தனை!
எண்ணற்ற உயிர்களின் இருப்பிடம் அல்லவா!
கண்ணுங் கருத்துமாகப் பேணுதல் கடமை அல்லவா!
வெறுமை சூழ் பேரண்டத்தில் உயிர் அல்லவா!
சிறுமைப் படுத்தல் தகுமோ முறையோ?
சூழலைப் பேணுவோம். தவறுகளைக் களைவோம்.
ஞாலத்தின் நிலையை மாற்றுவோம். நம் காலக் கடமையல்லவா!
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
"அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?" - ராஜு அங்கிள் நினைவுகள்!
ராஜு அங்கிளை (அம்மாவின் கடைசிச் சகோதரர்) நினைத்ததும் என் நினைவில் வரும் முக்கிய விடயங்களிலொன்று அவரது 'ரெகோர்ட் பிளேயர் ஸ்டாண்ட்' . மரத்தால் ஆன அழகான 'ரெகோர்ட் பிளேயர்' அமைப்பு அது. அவரை இசைப்பிரியர் என்றும் கூறலாம். மேனாட்டுப்பாடகர்களின் ஒலித்தட்டுகள் ( Records) தொடக்கம் சிங்கள 'பைலாப்' பாடல்களின் ஒலித்தட்டுகள் வரை பல பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves), எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), பீட்டில்ஸ் (Beatles) போன்றோரின் ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. அவர் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே கனடா வந்து விட்டதால் , அது வரை எட்டாக் கனியாகவிருந்த அந்த ரெகோர்ட் பிளேயர் எமக்கும் எட்டும் கனியானது. அதன் பின் அங்குள்ள ஒலித்தட்டுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ்வதுண்டு. அவற்றிலொன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு சிங்களப்பாடல். அதனைப் பாடியவர் யார் என்பது தெரியாது. ஆனால் கேட்ட முதல் தடவையே என்னைக் கவர்ந்துவிட்ட பாடல் அது. அண்மையில்தான் அப்பாடலை யு டியூப்பில் தேடிக் கண்டு பிடித்தேன். அதனைப்பாடியவர் அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற விளங்கிய சிங்களப்பாடகர் சி.டி.ஃபெர்ணாண்டொ என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். அந்தப்பாடல்: "அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?"
கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ஊடகவியலாளரும் , கலைஞருமான கிருபா கந்தையா!
ஊடகவியலாளரும், கலைஞரும், புகைப்படப்பிடிப்பாளருமான கிருபா கந்தையா அவர்களின் 'தடயத்தார்' 'யு டியூப் சானல்' சத்தமின்றி முக்கியமானதொரு பணியினை ஆற்றி வருகின்றது. 'டொரோண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளைக் காணொளிகளாக்கி இந்தத் 'தடயத்தார்' சானலில் பதிவிட்டு வருகின்றார் கிருபா கந்தையா. 'தடயத்தார்' சானல் கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ஆவணப்படுத்தி வருகின்றது. இது அவ்வளவொன்றும் இலகுவான செயலல்ல. கடும் உழைப்பினையும் , அர்ப்பணிப்பையும் வேண்டுமொரு செயல்.
இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். அது அவசியமானதும் கூட. இதுவரை இவரது இந்தச் சானலைப் பார்க்காதவர்கள் சென்று பாருங்கள். பிடித்திருந்தால் அதைப் பாராட்டுங்கள். அதைச் 'சப்ஸ்கிரைப்' ( Subscribe) செய்யுங்கள். எவ்விதப் பணமும் கொடுக்கத்தேவையில்லை. இவ்விதம் செய்வதன் மூலம் கிருபா கந்தையா அவர்களின் உழைப்பை, ஆரோக்கியமான பணியை நீங்களும் அங்கீகரிக்கின்றீர்கள்.
Subscribe to:
Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!
- இசை & குரல் - SUNO AI ஓவியம்: கூகுள் AI நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்! காலவெளி தந்த பேர் அதிசயம்! கண்ணுக்குக் தெரியாத உயிர்கள் எத்தனை! ...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...