Thursday, June 13, 2024

பேராசிரியர் சி.மெளனகுருவின் 'பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்'


எழுத்தாளர் ஜெயமோகனின் கேள்வி: "சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"
 
இதற்கான பதில்: ஆம்! பேராசிரியர் சி.மெளனகுரு 'பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்' என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதியுள்ளார். அது ஒரு விபவி வெளியீடு.

நுட்பம் (1980/1981): 'பேராசிரியர் சரத்சந்திராவும் தேசிய நாடகமும்' - எம்.எஸ்.எம்.அனஸ்


" சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?" என்னும் எழுத்தாளர் அண்மையில் எழுப்பிய கேள்விக்கான பதிலொன்று: ஆம். எம்.எஸ.எம். அனஸ் 1981/1982இல் எழுதியிருக்கின்றார்.
 
பேராசிரியர் எதிரிவீர  சரத் சந்திரா பற்றிய எம்.எஸ்.எம்.அனஸின் கட்டுரையொன்று, 'பேராசிரியர் சரத்சந்திராவும் தேசிய நாடகமும்' என்னும் தலைப்பில் நான் இதழாசிரியராகவிருந்த நுட்பம் சஞ்சிகையில் (!980/1981) பிரசுரமாகியுள்ளது.
 
கட்டுரை வெளியான நுட்பம் இதழுக்கான இணையத்தள முகவரி - https://noolaham.net/project/1049/104833/104833.pdf

Tuesday, June 11, 2024

எழுத்தாளர் ஜெயமோகனும் , இலங்கை இலக்கியச் சூழலும்!


"ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதம் கூறியதாக அறிந்தேன். ஆச்சரியம் தரவில்லை. உண்மையில் ஜெயமோகனை அறிந்தவர்களுக்கு இக்கூற்று ஆச்சரியம் எதனையும் தராது. ஜெயமோகனைப் பொறுத்தவரையில் தன்னைத் தன் துதிபாடிகள் மட்டும் கதைத்தால் போதாது. தன் எதிரிகளும் கதைக்க வேண்டும். அதற்கு அவர் கையாளும் தந்திரங்களில் ஒன்று தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு  மெல்ல அவல் கிடைத்த மாதிரி இச்சர்சைக்குரிய கருத்துகள் ஆகிவிடுகின்றன. ஆளுக்கு ஆள் கொதித்தெழுந்து துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜெயமோகனுக்குத் தேவை அதுதான். இதைப்பார்த்து ஆனந்தமடைவதில் அவருக்குப் பெரு விருப்புண்டு. தன் துதிபாடிகளின் பாராட்டுரைகளை விட எதிரிகளின் வசவுகளில் குளிர் காய்பவர் ஜெயமோகன்.

உலக மகாகவி சேக்ஸ்பியரைப் பாதித்த கவிஞன் கிறிஸ்தோபர் மார்லோ ( Christopher Marlowe)


Christopher Marlowe சேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த கவிஞர். இவரது புகழ்பெற்ற கவிதை  Hero and Leander!  ஹீரோ என்னும் பெண்ணுக்கும், லியான்டெர் என்னும் ஆணுக்குமிடையிலான காதலை விபரிப்பது. இக்கவிதை தூய  காதல், விதி, மானுட உணர்வுகளில் விதியின் பங்கு ஆகியவற்றை ஆராய்கின்றது.

இதில் கவிஞர் காதல் , வெறுப்பு போன்ற உணர்வுகள் தன்னிச்சையாகத்  தோன்றுகின்றன.  சிந்தித்துச் சீர்தூக்கி வருவதில்லை. பார்த்த மாத்திரத்தில் உருவாகின்றன. பின்னால் விதியிருந்து ஆட்டி வைக்கின்றது என்பது இவரது கருத்து.

இக்கவிதையின் காதலைப்பற்றிய  கடைசி இரு வரிகள் முக்கியமானவை. அவை:

Where both deliberate, the love is slight:
Who ever loved, that loved not at first sight?


Where both deliberate, the love is slight - காதல் சீர்தூக்கி, சிந்தித்துப் பார்த்து உருவாவதில்லை. அப்படி உருவானால்  the love is slight. அது முழுமையானதல்ல. 

Friday, June 7, 2024

படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! - முருகபூபதி -


- பதிவுகள் இணைய இதழில் வெளியான எழுத்தாளர் முருகபூபதியின் விமர்சனக் கட்டுரை. -

வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.

சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி, ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம். எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும் நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது ! யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாக வந்திருக்கும் கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.

Monday, May 27, 2024

சுதந்திரன்: 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ். பெளத்தத்தோடு இந்து மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது'


12.6.1960 சுதந்திரனில் தமிழின்பம் என்னும் புனைபெயரில் ஒருவர் 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ்.  பெளத்தத்தோடு இந்து  மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது' என்னும் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார்.

அதில் நாயக்க மன்னர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

உதாரணத்துக்கு அக்கட்டுரையிலிருந்து கீழ்வரும் பகுதிகளைப் பகிர்ந்துகொள்கின்றேன். வாசித்துப் பாருங்கள்:

"இந்த நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்துள்ளனர். ஆந்திர, சமஸ்கிருதப் பண்ண்டிதர்களுடன் தமிழ் வித்துவான்களும் சரிசமமான இடம் பெற்றிருந்தார்கள். இவர்களது தமிழ் சேவையிலான வேலைகளை இன்றும் தஞ்சையிலுள்ள சரஸ்வதி மகாலிலும், மதுரை திருமலை நாயக்கர் மகாலிலும் காணலாம். "

Sunday, May 26, 2024

காலத்தால் அழியாத கானம்: 'சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்'


'நல்லவன் வாழ்வான்' திரைப்படத்தின் மூலக்கதை நா.பாண்டுரங்கனுடையது. திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் அறிஞர் அண்ணா. டி.ஆர்.பாப்பாவின் இசையில் ஒலிக்கும் இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. இதுதான் அவர் எம்ஜிஆரின் படத்துக்கு எழுதிய முதலாவது பாடலென்று அறிகின்றேன்.
 
கவிஞர் வாலி எம்ஜிஆருக்குப் பொருத்தமாக வரிகளை எழுதுவதில் வல்லவர். அதனால் எம்ஜிஆர் இதயத்தில் நல்லவராக இடம் பிடித்தவர். இப்பாடலில் வரும் பின்வரும் வரிகள் எவ்வளவு அழகாகக் காதல் வரிகளுக்குள் கட்சிப் பிரச்சாரத்தைச் செய்கின்றன;
 
"அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
உள்ளத்தாமரை மலராதோ ?
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ ?"

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...