Monday, May 27, 2024

சுதந்திரன்: 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ். பெளத்தத்தோடு இந்து மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது'


12.6.1960 சுதந்திரனில் தமிழின்பம் என்னும் புனைபெயரில் ஒருவர் 'கண்டி இராச்சியத்தில் அரசோச்சியது தமிழ்.  பெளத்தத்தோடு இந்து  மதத்துக்கும் சிறப்பான இடம் இருந்தது' என்னும் கட்டுரையொன்றினை எழுதியிருக்கின்றார்.

அதில் நாயக்க மன்னர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

உதாரணத்துக்கு அக்கட்டுரையிலிருந்து கீழ்வரும் பகுதிகளைப் பகிர்ந்துகொள்கின்றேன். வாசித்துப் பாருங்கள்:

"இந்த நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்குப் பெரும் சேவை செய்துள்ளனர். ஆந்திர, சமஸ்கிருதப் பண்ண்டிதர்களுடன் தமிழ் வித்துவான்களும் சரிசமமான இடம் பெற்றிருந்தார்கள். இவர்களது தமிழ் சேவையிலான வேலைகளை இன்றும் தஞ்சையிலுள்ள சரஸ்வதி மகாலிலும், மதுரை திருமலை நாயக்கர் மகாலிலும் காணலாம். ""இவர்களது காலத்தில் தமிழ் மொழியும் கண்டி இராச்சியத்தில் உபயொகிக்கப்பட்டது. கண்டி மன்னர்களிடமிருந்து இந்திய மன்னர்கள் பலருக்கும் தமிழிலேயே கடிதங்கள் எழுதப்பட்டன.  பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் கண்டிய இராச்சித்திற்குமிடையேயும் தமிழிலேயே கடிதப்போக்குவரத்துகள் நடைபெற்று வந்துள்ளன. இவற்றை இன்றும் நூரளையிலுள்ள தொல்கலைப்பொருட்காட்சிச் சாலையில் காணலாம்...... கண்டியை பிரிட்டிஷ்  சாம்ராச்சியத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்திலும் பல அமைச்சர்கள் (அதிகாரிகள்) தமிழில் கையெழுத்திட்டுள்ளதைக் காட்சிச் சாலையில் இன்றும் காணலாம்."

கட்டுரையை முழுமையாக வாசிக்க https://noolaham.net/project/433/43257/43257.pdf

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

இசை & குரல் - AI Suno ஓவியம் - AI நானொரு குதிரை வளர்ப்பாளன். நான் வியாபாரி அல்லன். நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான். என்னிடம் நல்ல குதிர...

பிரபலமான பதிவுகள்