எழுத்தாளர் சுவிஸ் பா.ரவி தன் முகநூற் பதிவொன்றில் 'எழுத்தாளரைக் கொண்டாட வேண்டும் என சொல்லப்படுவதை எப்படி அணுகுவது என குழப்பமாக இருக்கிறது' எனக் கூறியிருந்தார்.
இதற்கான என் இதுவாக இருக்கும்:
எழுத்து மீதான அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானது. உங்கள் எழுத்து பற்றிய கருதுகோளின்படி உங்களுக்கு யார் எல்லாரும் தரமான எழுத்தாளர்களாகத் தெரிகின்றார்களோ அவர்களைக் கொண்டாடுங்கள்.
அதே மாதிரி எழுத்தின் ஆரம்பப்படியிலிருக்கும் ஒருவருக்கு வெகுசனப் படைப்புகளைத் தரும் எழுத்தாளர்களைப் பிடித்திருக்கும் அவர்கள் அவர்களைக் கொண்டாடுவார்கள். மிகவும் தீவிரமான வாசிப்புள்ளவர்கள் அவ்விதமான எழுத்தாளர்களைக் கொண்டாடுவார்கள்.
கொண்டாடுதல் என்பது சார்பானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானது.
No comments:
Post a Comment