Tuesday, April 30, 2024

'மணிக்கொடி' தந்த ஜோதிர்லதா கிரிஜா!


கடந்த 18.04-2024 அன்று மறைந்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவின் முக்கியமான நாவல் 'மணிக்கொடி'.  இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து கல்கியின்  'அலை ஓசை' , ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' ஆகியவை ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவ்வரிசையில் வெளியான இன்னுமொரு நாவல்தான் ஜோதிர்லதா கிரிஜாவின் 'மணிக்கொடி'.  

ர.சு.நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் 'கல்கி' சஞ்சிகையின் வெள்ளிவிழா நாவல் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற நாவல்.  ஜோதிர்லதா கிரிஜாவின் 'மணிக்கொடி' கல்கியின் பொன்விழா நாவல் போட்டியில் முதற் பரிசு பெற்ற நாவல்.


தனது பெரியப்பாவின் இந்திய சுதந்திரம் அடைந்த தினம் வரையிலான நாட்குறிப்புகளை அடிப்படையாக வைத்து' எழுதியதாக அவரே குறிப்பிட்டிருக்கின்றார். மரணப்படுக்கையில் கிடந்தபோது  அப்பெரியப்பா அக்குறிப்புகளை நாவலாக்கும்படி வேண்டியதாகவும்,அதனால் இந்நாவலை எழுதியதாகவும்' மேலும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.


என் வாசிப்பனுவத்தில் நான் வாசித்த சஞ்சிகைகளில் அடிக்கடி இவரது படைப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன.  அதன் மூலம் எனக்கு இவரைப்பற்றிய அறிமுகம் கிடைத்தது. ஆரவாரமற்று தொடர்ச்சியாகச் சளைக்காமல் எழுதிக்கொண்டிருந்தவர். அண்மைக்காலமாக இவர் திண்ணை இணைய இதழில் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். இவரது நாவல்கள் பல வெளியாகியிருந்தன. தமிழ்ப்பெண் எழுத்தாளர்களில் தவிர்க்கப்பட முடியாதவர் இவர்.

இந்நாவல் பற்றியும், இதன் உருவாக்கம் பற்றியும் எழுத்தாளர் ஜெயஶ்ரீ ஷங்கர் எழுதிய  'மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா' என்னும் 'திண்ணை' இணைய இதழில் பெப்ருவரொ 10, 2014 வெளியான இக்கட்டுரை எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா பற்றிய சுருக்கமான அறிமுகக் குறிப்பினையும் உள்ளடகியுள்ளது. 


திண்ணைக் கட்டுரை

விக்கிபீடியாக் குறிப்பு

No comments:

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்லதொரு வழிகாட்டி

'கனடா குடிவரவு ஸ்மார்ட் திட்டம்'(Canada Immigration Smart Plan): சர்வதேச மாணவர்களுக்கான, கனடாவுக்குக் குடிபுக விரும்புவோருக்கான நல்ல...

பிரபலமான பதிவுகள்