Sunday, April 21, 2024

எம்ஜிஆரின் 'என் தங்கை'


எம்ஜிஆரின் நடிப்பைப் பார்க்கவேண்டுமானால் பார்க்க வேண்டிய திரைப்படம் 'என் தங்கை' அண்ணன் ,தங்கை பாசத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட உணர்ச்சிகரமான கதை. முடிவில் அவலச்சுவை மிகுந்தது.
எம்ஜிஆர் தன் ஆரம்ப காலத்தில் சமூகப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கின்றார். அந்தமான் கைதி, நாம், என் தங்கை , பணக்காரி அவற்றில் சில. 
'நாம்' எம்ஜிஆரும், கலைஞரும் இணைந்து உருவாக்கிய மேகலா பிக்சர்ஸ் மூலம் வெளியிட்ட திரைப்படம். பின்னர் எம்ஜிஆர் மேகலா பிக்சர்ஸிடமிருந்து விலகிவிட்டதாக அறிகின்றேன். அந்நிறுவனத்தைக் கலைஞர், முரசொலி மாறன் ஆகியோர் பொறுப்பெடுத்துக்கொண்டனர்.
 
'என் தங்கை'யில் எம்ஜிஆரின் தங்கையாக நடித்திருப்பவர் E.V. சரோஜா. இவர் பின்னர் மதுரை வீரனில் 'வாங்க மச்சான் வாங்க', சக்கரவர்த்தித் திருமகளில் 'ஆடவந்த அண்ணாச்சி' பாடல்களில் எம்ஜிஆருடன் , சக நடிகைகளுடன் இணைந்து நடனமாடியிருப்பார். பின்னர் சொந்தமாக E.V.R பிக்சர்ஸ் மூலம் 'கொடுத்து வைத்தவள்' எடுத்து அதில் எம்ஜிஆரின் இணையாக நடித்திருப்பார்.
 
- 9.4.1952 வெளியான சுதந்திரன் பத்திரிகையில்..

'என் தங்கை' மிகுந்த வெற்றியைப் பெற்ற திரைப்படம். இலங்கையில் கண்டியில் 350 நாட்கள் கடந்து ஓடியதாக எங்கோ வாசித்திருக்கின்றேன். உண்மை, பொய் தெரியவில்லை. ஆனால் முருகன் (ஜிந்துப்பிட்டி) திரையரங்கில் 100 நாட்கள் கடந்து ஓடியதை அக்காலகட்டத்தில் வெளியான சுதந்திரன் (9.4.1952) பத்திரிகை விளம்பரம் மூலம் அறிய முடிகின்றது.
படத்தின் முடிவைத் தீவிர எம்ஜிஆர் இரசிகர்கள் பார்த்தால் குறைந்தது மூன்று நாட்கள் மனத்தில் உளைச்சல் அடைவார்கள்.
 
'நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் தெளிவாக்கப்பட்ட 'என் தங்கை' திரைப்படத்தைப் பின் வரும் இணைப்பில் கண்டு களியுங்கள் -
 


No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்