Saturday, May 11, 2024

காலத்தால் அழியாத கானம் - எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா?


மானுடரின் முதற் காதல் அனுபவமென்பது வளர்ச்சியின் ஒரு படிக்கட்டு.  பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. காரணம் முதிர்ச்சியடையாத மானுடப் பருவத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மையமாக வைத்து உருவாகும் அனுபவம் அது. ஆனால் அதுவே அதன் சிறப்பம்சமும் கூட. அவ்வனுபவத்தில் உள்ளங்கள் உணர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படுகின்றன.அதற்குப் பின் வளர்கையில் இலாப, நட்டங்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் பக்குவத்துக்கு அவை மாறி விடுகின்றன. இதுவே பெரும்பாலும் முதற் காதல் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம்.சமூக, பொருளியல் தாக்கங்களுக்கு உட்படாத உள்ளங்களில் ஏற்படும் காதலென்பதால் பெரும்பாலும் நிறைவேறாவிட்டாலும் வாழ்வு முழுவதும் நினைவுகளில் தொடருமோர் அனுபவமாக நிலைத்து விடுகின்றது அது. அதனைத்தான்  இவ்வகையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களைக் கேட்பவர்கள் எழுதும் எதிர்வினைகள் வெளிப்படுத்துகின்றன, உதாரணத்துக்கு இப்பாடலை யு டியூப்பில் கேட்டுச் சிலர் எழுதிய எதிர்வினைகளைப் பார்ப்போம்:

இப்பாடலின் சிறந்த வரி 'அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்'. உளவியல் அடிப்படையில் உண்மையான வரி.  ஒருவர் அன்புக்குரியவரை மனப்பூர்வமாக, மனமொன்றி நினைத்தால் அவர் எத்தனை  ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்தாலும் அதைப் புரிந்து  கொள்வார் என்பது உளவியல் அறிஞர்கள் சிலரின் கருத்து.

 உதாரணத்துக்குச் சாதாரணமாகவே நீங்கள் ஒருவரை உற்றுப் பார்க்கும்போது அவர் சடுதியாகத்  திரும்பிப் பார்ப்பதை அவதானிக்கலாம்.  அதெப்படி சாத்தியம்? அவர் நீங்கள் பார்ப்பதைக் கண்களால் உணரவில்லை.ஆனாலும் நீங்கள் பார்ப்பதை அவரது ஆழ்மனம் புரிந்துகொள்கிறதல்லவா. அதுவே ஆழ்மனத்தின் பேராற்றல். அது எப்போதுமே, நீங்கள் நித்திரையில் இருக்கும்போது கூட உங்களை , சூழலை அவதானித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் நித்திரையில் இருப்பவர்கூட வீதி வழியே நடந்து சென்று பத்திரமாக வீடு திரும்ப முடிகின்றது.

இந்த உண்மையை உளப்பூர்வமாக உணர்ந்ததால்தான் கவிஞரால் இவ்விதம் 'அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்' என்று பாட முடிகின்றது.

இப்பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் அ.மருதகாசி.  இசை - திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன். குரல் - பி.சுசீலா. சுசீலா அவர்களின் மிகச்சிறந்த பத்துப் பாடல்களுக்குள் இப்பாடலும் அடங்குமென்பது என் எண்ணம்.

எழுபதுகளில் நேயர் விரும்பிக் கேட்டவையில் , சென்னையின் தேன் கிண்ணத்தில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்களிலொன்று.

https://www.youtube.com/watch?v=biEJv1e8eR4

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

இசை & குரல் - AI Suno ஓவியம் - AI நானொரு குதிரை வளர்ப்பாளன். நான் வியாபாரி அல்லன். நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான். என்னிடம் நல்ல குதிர...

பிரபலமான பதிவுகள்