Wednesday, May 15, 2024

"சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்" - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா


'சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார். சொந்தப் புத்தியை கொண்டே சிந்திக்கச் சொன்னவர் பெரியார். தந்தை பெரியார்.' என்று பாடுபவர் பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்கிருஷ்ணா.
 
 
ஓரு படைப்பைப்பற்றி ஒருவருக்குப் பல்வேறு காரணங்களுக்காக விமர்சனங்கள் இருக்கும், பெரியாரின் அன்றைய காலகட்டடத்தில் அவர் சமூக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, ஆரியரின் ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். போராடியவர். அவருக்குத் தமிழ்க் காப்பியங்கள் மீது ஆரியரின் தாக்கம் அவற்றில் இருக்கும் காரணத்துகாக எதிர்ப்பு இருந்தால் அவற்றை அவர் தர்க்கரீதியாக எடுத்துரைத்திருந்தால் அவை அவரது கருத்துரிமை. அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். உணர்ச்சியின் அடிப்படையில் குரல் எழுப்புவதால் அர்த்தமில்லை. கம்பரைப்பற்றி, தொல்காப்பியரைப் பற்றியெல்லாம் அவருக்கு விமர்சனங்கள் இருந்தால் அவற்றைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அண்ணா கம்பரசம் எழுதியவர். அக்காலகட்டப் பின்னணியில் வைத்து அவர்கள் அன்று தெரிவித்த கருத்துகள் ஆராயப்பட வேண்டும். அதே பெரியார் பகுத்தறிவுக்காகப் பாடுபட்டவர். சுயமரியாதைக்காகப் பாடுபட்டவர். தமிழை எளிமைப்படுத்த வேண்டுமென்பதற்காக அவர் தமிழ்ச்சீர்திருத்தம் பற்றி குடியரசு பத்திரிகையில் 1935இல் எழுதியவர். அதனையே எம்ஜிஆர் பின்னர் நடைமுறைப்படுத்தினார். திருக்குறள் மாநாடுகள் பல நடத்தியதாகவும் அறிகின்றேன். ஒருவரை நாம் அவரது குறை நிறைகளுடன் தாம் அணுகுகின்றோம். அவ்விதமே நானும் பெரியாரை அணுகுகின்றேன்.

தமிழக வரலாற்றில், இந்திய வரலாற்றில் பெரியார் முக்கியமான ஆளுமையாளர். சமூக, அரசியற் சிந்தனையாளர் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.

மானுடர் யாவருமே முரண்பாடுகள் மிக்கவர்கள்தாம். அதற்குப் பெரியார் விதிவிலக்கானவர் அல்லர். அம்முரண்பாடுகளுடன் தாம் அவரை மட்டுமல்ல எல்லா சமூக, அரசியல் , கலை, இலக்கிய, அறிவியல் ஆளுமைகளையும் நாம் அணுகுகின்றோம்.

பெரியாரின் படைப்புகள்

பெரியாரியம் பற்றிய நிறப்பிரிகைக் கட்டுரைகள்:


பெரியார் பற்றி அ.மார்க்ஸ் -

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்