முகநூல் என்னைத் தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமைகளுடன் பிணைத்து வைத்தது. அவர்களில் ஒருவர் எழுத்தாளர் அமரர் நந்தினி சேவியர். மறக்க முடியாத இலக்கிய ஆளுமை.
என் முகநூல் பதிவுகளுக்கு அவர் இட்ட எதிர்வினைகளை, மெசஞ்சர் மூலம் பரிமாறிக்கொண்ட உரையாடல்களை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். அவர் இருந்திருந்தால் இன்று அவருக்கு வயது 75.
எனக்கு மிகவும் பிடித்த அவரது பண்பு: தான் ஏற்றுக்கொண்ட மார்க்சியக் கோட்பாடுகளூடு , சமூக, வர்க்க, அரசியல் விடுதலையினை நாடிய அவர் இறுதிவரை அவ்வழியே தளும்பாமல் வாழ்ந்து வந்தவர். அதில் அவர் மிகவும் தெளிவாகவிருந்தார்.
சக எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசித்து, அவற்றைப்பற்றிய சிறு குறிப்புகளுடன் அவற்றை ஆவணப்படுத்தியவர். அவரது எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகில் முக்கியமானவை. சமூக மாற்றங்களை வேண்டி நிற்பவை. பிரச்சாரத்தன்மையற்றவை.
பெருந்தொற்றுக் காலத்தில் நாமிழந்த இலக்கிய ஆளுமைகளில் அவர் ஒருவர். தற்செயலாகப் பெருந்தொற்றுத் தடுப்பூசி பெற்றவர், எதிர்பாராதவாறு நிலைமை சீர்கெட்டு மறைந்தது பெரும் இழப்பே. அவரது எழுத்துகளூடு அவர் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்பார்.
இங்குள்ள நந்தினி சேவியரின் ஓவியத்தை வரைந்திருப்பவர் ஓவியர் எஸ்.நளீம். 'நடு' இணைய இதழிலிருந்து நன்றியுடன் பாவித்துக்கொள்கின்றேன்
No comments:
Post a Comment