Tuesday, May 7, 2024
கனவுக் காளை மோகன்!
'மைக்' மோகன் என்று இவரை அழைப்பார்கள். ஒரு காலத்தில் யுவதிகளின் கனவுக் காளையாக விளங்கியவர் மோகன். இதற்கு முன்னர் இவ்விதம் கருதப்பட்ட நடிகர் ஜெய்சங்கர். இவரது வெற்றி ரஜனி, கமல் போன்றவர்களின் பட வெற்றிகளை ஓரங்கட்டும் வகையில் அமைந்திருந்தன. இவர் படங்கள் வெளியாகும் நாட்களில் அவர்கள் தம் வெளியீடுகளைத் தவிர்க்கும் அளவுக்கு இவரது வெற்றி அமைந்திருந்தது. ஒரு சாயலில் கமலைப்போலிருக்கும் இவரது தோற்றத்தில் கமலிடம் இல்லாத அப்பாவித்தனம் கலந்த அழகு மிளிர்ந்திருக்கும்.
இவ்விதம் வெற்றிப்பட நாயகான விளங்கிய இவர் தமிழ்த்திரையுலகிலிருந்து காணாமல் போனது ஒரு துரதிருஷ்ட்டமே. இதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:1. இவருக்குக் குரல் கொடுத்து வந்த ரவீந்திரக்கும் ,இவருக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கு. இவர் தன் குரலில் நடித்ததை நடிகர்கள் ஏற்கவில்லை.
2. இவருக்கு எயிட்ஸ் என்று நடிகையொருவர் கிளப்பிவிட்ட புரளி. யார் அந்த நடிகை? தெரியவில்லை. இவ்விதமான ஊடகச்செய்தியை அறிந்திருக்கின்றேன். இன்றும் அதே இளமையுடன் இவரிருக்கும் தோற்றத்தைக் கண்டிருக்கின்றேன்.
3. இவருக்கெதிராக உச்சநட்சத்திரங்கள் கொடுத்த அழுத்தங்கள்.
இவரது வெற்றித்திரைப்படங்கள் சில:
நெஞ்சத்தை கிள்ளாதே: மகேந்திரன் இயக்கத்தில் மோகன், சுகாசினி, பிரதாப் நடித்த திரைப்படம் . இப்படம் 300 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது தேசிய விருதும் வழங்கப்பட்டது.
கிளிஞ்சல்கள்: 1982-இல் துரை இயக்கிய கிளிஞ்சல்கள் 150 நாட்கள் ஓடிய திரைப்படம்.
மௌன ராகம்: டைரக்டர் மணிரத்தினம் இயக்கம். ரேவதி, கார்த்திக், மோகன் இணைந்து நடித்த படம். 250 நாட்கள் மேல் ஓடியது. இசை இசைஞானி இளையராஜா.
பயணங்கள் முடிவதில்லை, வேங்கையின் மைந்தன், நூறாவது நாள், நான் பாடும் பாடல், உதயகீதம், தென்றலே என்னை தொடு, குங்குமச்சிமிழ், இதய கோவில், பிள்ளை நிலாஆகிய திரைப்படங்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்று இணையத்தில் வாசித்தது நினைவிலுண்டு.
இன்றும் இவரது படப் பாடல்களைக் கேட்பது இனிமையானதோர் அனுபவம்.
மோகன் படப் பாடல்கள் : https://www.youtube.com/watch?v=Vw68ENZlUxs
Subscribe to:
Post Comments (Atom)
அழியாத கோலங்கள்: ராணி வாராந்தரி சிறுவர் தொடர்கதைகள்!
என் பால்யப் பருவத்தில் எம் வாசிப்புப் பசிக்குத் தீனியாக இருந்தவற்றுள் ராணி வாராந்தரியில் வெளியான சிறுவர் தொடர்கதைகளும் அடங்கும். ராணி வாராந...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...

No comments:
Post a Comment