Tuesday, June 11, 2024

உலக மகாகவி சேக்ஸ்பியரைப் பாதித்த கவிஞன் கிறிஸ்தோபர் மார்லோ ( Christopher Marlowe)


Christopher Marlowe சேக்ஸ்பியர் காலத்தில் வாழ்ந்த கவிஞர். இவரது புகழ்பெற்ற கவிதை  Hero and Leander!  ஹீரோ என்னும் பெண்ணுக்கும், லியான்டெர் என்னும் ஆணுக்குமிடையிலான காதலை விபரிப்பது. இக்கவிதை தூய  காதல், விதி, மானுட உணர்வுகளில் விதியின் பங்கு ஆகியவற்றை ஆராய்கின்றது.

இதில் கவிஞர் காதல் , வெறுப்பு போன்ற உணர்வுகள் தன்னிச்சையாகத்  தோன்றுகின்றன.  சிந்தித்துச் சீர்தூக்கி வருவதில்லை. பார்த்த மாத்திரத்தில் உருவாகின்றன. பின்னால் விதியிருந்து ஆட்டி வைக்கின்றது என்பது இவரது கருத்து.

இக்கவிதையின் காதலைப்பற்றிய  கடைசி இரு வரிகள் முக்கியமானவை. அவை:

Where both deliberate, the love is slight:
Who ever loved, that loved not at first sight?


Where both deliberate, the love is slight - காதல் சீர்தூக்கி, சிந்தித்துப் பார்த்து உருவாவதில்லை. அப்படி உருவானால்  the love is slight. அது முழுமையானதல்ல. 

Who ever loved, that loved not at first sight? - உண்மைக் காதலானது முதற் பார்வையில்  உருவாவது.  உடனடியானது. அவ்வேளைப் பெருக்கெடுக்கும் உணர்ச்சிகளின் அடிப்படையில் உருவாவது. சிந்தித்துச் சீர்தூக்கி உருவாவதல்ல.  அவ்விதம் செய்து உருவாவது உண்மைக்காதல் அல்ல. இதைத்தான் இவ்வரி எடுத்துரைக்கின்றது.

Who ever loved, that loved not at first sight?  என்னும் இந்த வரியைத்தான் உலக மகாகவி சேக்ஸ்பியரும் தனது புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்றான 'As you like it' நாடகத்தில் பாவித்துள்ளார். இதனால் இவ்வரியைப் பலர், ஆய்வாளர்கள் உட்படப் பலர், சேக்ஸ்பியரின் வரியாகவே  நினைத்து விடுகின்றார்கள். அவ்விதமே தம் ஆய்வுக் கட்டுரைகளிலும் பாவித்து வருகின்றார்கள். இது கவிஞர் கிறிஸ்தோபர் மார்லோ சேக்ஸ்பியர் மீது ஏற்படுத்திய பாதிப்பையே எடுத்துக்காட்டுகின்றது.  நம் காலத்துக் கவிஞர்கள் பலரை மகாகவி பாரதியார் பாதித்துள்ளதை அவர்களது படைப்புகளில் அவ்வப்போது காண்கின்றோம் அல்லவா. அது அவர்கள் மீது பாரதியின் பாதிப்பைக் காட்டுகின்றதல்லவா. அது போன்றதுதான் இப்பாதிப்பும். உதாரணத்துக்குக் கவிஞர் கண்ணதாசனின் 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' திரைப்படப் பாடலைக் கூறலாம்.

No comments:

வ.ந.கிரிதரனின் 'அழியாத கோலங்கள்' ( பால்ய, பதின்மப் பருவத்து நனவிடை தோய்தல்)

அண்மையில் நண்பரும் எழுத்தாளருமான டானியல் ஜீவா அவர்கள் 'ஏன் நீங்கள் உங்கள் பால்ய பருவத்து அனுபவங்களை நூலாக்கக் கூடாது? நீங்கள் எழுதும் வவ...

பிரபலமான பதிவுகள்