Monday, June 24, 2024

இசையில் பாண்டித்தியம் மிக்கவர்களே! சில கேள்விகள்!


இசை அறிஞர்களே! இசை பற்றி அறிந்த முகநூல் நண்பர்களே! இசையில் பாண்டித்தியம் மிக்கவர்களே. உங்களிடம் சில கேள்விகள். நான் சுருதி, தாளம், Notes, Beats, சுரம் , இராகம் போன்றவற்றைப் பற்றி புரிந்துகொண்டிருப்பதை இங்கு எடுத்துக் கூறுவேன். அதில் தவறேதுமிருப்பின் அறியத்தாருங்கள்.
 
இசை நிகழ்ச்சிகளில் நடுவர்கள் எப்போதும் சுருதி பற்றிக் கூறுவார்கள். நான் புரிந்து கொண்ட அளவில் சுருதி அல்லது சந்தம் அல்லது ஆங்கிலத்தில் Rhythm அல்லது Tune இவையெல்லாம் ஒன்றே. இந்த என் புரிதல் தவறா?
சுருதி பிசகாமல் பாடுவது என்பது மேற்படி இசை அமைப்பாளர்கள் உருவாக்கிய சந்தம் அல்லது 'டியூனை' விளங்கி , அதற்கேற்பப் பாடுவது. இல்லையா?
 
ஆங்கிலத்தில் நோட்ஸ் என்பது சுரங்களே. 'பீட்' என்பது தாளமே.
இசை அமைப்பாளர்களின் டியூன் அல்லது சந்தம் , தாளாத்துக்கு அமைவாக இருக்கும். சுரங்களைக் கொண்டு உருவாகும் இராகங்களின் அடிப்படையில் அவை இருக்கும். பாடுபவர் தாளம் போட்டுக்கொண்டே பாடுவது அந்தச் சந்தம் அல்லது சுருதி விலகாமல் பாடுவதற்கே.
 
இவற்றை இவ்விதமே நான் புரிந்து வைத்துள்ளேன். இவற்றில் தவறுகள் இருப்பின் அறியத்தாருங்கள். நான் இசை அறிஞன் அல்லன். இசையை இரசிப்பவன். இசை பற்றி மேலதிகமாக அறியும் ஆவல் மிக்கவன். அவ்வளவே.

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்