Friday, June 21, 2024

பாப் மார்லி: 'உங்கள் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்'

ரெகே (Reggae) இசையென்றதும் முதலில் நினைவுக்கு வரும் பாடகர் பாப் மார்லி (Bob Marley) . அறுபதுகளின் இறுதியில் ஜமைக்காவில் உருவான இசை வடிவம் இது. தனித்துவமான 'ரிதம்' கொண்ட இசை. சம உரிமை, சமூக நீதி, அடக்குமுறைகளுக்கெதிராக ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகக் குரல் கொடுத்தல் போன்றவை ரெகே இசையின் சமுதாயப் பிரக்ஞையினை வெளிப்படுத்தினாலும் காதல், ஆன்மீகம், உறவுகள் பற்றியுமிருக்கும், 
 
பிரதான பாடகருடன் சேர்ந்து பாடுதல், பிரதான பாடகரின் கேள்விகளுக்குச் சக பின்னணிப்பாடகர்கள் பதிலளித்தல் போன்ற வகைகளிலும் பாடல்கள் அமைந்திருக்கும். ரிதம், பாவிக்கப்படும் இசைக்கருவிகள், சுருதியின் வேகம் இவற்றின் அடிப்படையில் ரெகே இசை பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. 
 
முப்பதுகளில் ஜமைக்காவில் உருவான ரஸ்டஃபாரி (Rastafari) இயக்கத்தின் தாக்கமும் ரெகே இசையிலுண்டு. ரஸ்டஃபாரி இயக்கத்தில் ஆபிரிக்கக் கலாச்சாரக் கூறுகளின் தாக்கம் (குறிப்பாக எதியோப்பிய காலனியவாதத்துக்கெதிராக போராட்டம் ஆகியவற்றின் தாக்கம்) உண்டு.
'Get Up, Stand Up for Your Rights' பாப் மார்லியின் முக்கிய பாடல்களில் ஒன்று. ' உங்கள் உரிமைகளுக்காக எழுந்து நில்லுங்கள்' என்று அறைகூவல் விடுக்கிறது.
 

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்