Monday, June 17, 2024

தி ரோலிங் ஸ்டோன்ஸ்ஸின் 'பூதம் அல்லது சாத்தான் மீதான இரக்கம்' (Sympathy For The Devil)


எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர்.
 
அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்).
தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.
 
பாடகர் தன்னைச் சாத்தானாக உருவகித்துப் பாடும் பாடலின் வரிகளை உணர்ந்து இரசிக்கையில் பாடலும், பாடகரின் நடிப்பும், குரலும், நடன அசைவுகளும் சுவைக்கும்.
 
பாடலின் தொடக்கத்தில் 'Please allow me to introduce myself' (தயவுகூர்ந்து என்னை அறிமுகப்படுத்த விடு) என்று தன்னை அறிமுகப்படுத்தும் பூதம் (பாடகர் குரலினூடு) தொடர்ந்து வரும் தான் வேறுயாருமில்லை பூதமே என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர வைக்கின்றது. 
 
அதற்கு அது வரலாற்று நிகழ்வுகளைத் துணைக்கழைக்கின்றது. உதாரணத்துக்கு ருஷ்யப் புரட்சி, கென்னடி படுகொலை, ஜார் மன்னர்களின் படுகொலை போன்ற நிகழ்வுகளையெல்லாம் துணைக்கழைக்கும் பூதம் அவை எல்லாவற்றுக்கும் காரணம் தானே என்கின்றது. இப்பட்டியலில் பூதம் எனக்கு ருஷ்யப் புரட்சியை உள்ளடக்கியதில் உடன்பாடில்லை. 
அதனைத்தவிர்த்துவிட்டே இப்பாடலை இரசித்தேன் மிக் ஜகருக்காக. 
 
தான் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும் (I've been around for a long, long year), மானுடர்களின் ஆன்மா,நம்பிக்கையை பறித்திருப்பதாகவும் (Stole many a man's soul and faith) இவ்விதம் பல கூறும் பூதம் , தன்னால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கின்றது. அத்துடன் கூறுகிறது 'உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். என் பெயரை ஊகித்திருப்பீர்கள் என்றும் நம்புகின்றேன்.' (Pleased to meet you, hope you guess my name) என்று கூறும் பூதம் 'ஆனால் உங்களால் என்னைப் புரிந்து கொள்ள விடாமக் தடுப்பது என் விளையாட்டின் தன்மை' (“But what's puzzling you is the nature of my game) இவ்விதம் கேலியும் செய்கிறது. தன்னையிட்டுப் பெருமிதப்பட்டுக்கொள்ளவும் செய்கிறது. பாடலின் இறுதியில் பூதம் பார்வையாளரைப் பார்த்து கேட்கும் 'என் பெயர் என்ன?' வென்று.
 
மிக் ஜகரின் துடிப்பு மிக்க நடன அசைவுகள், பல் வகை உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல், வசீகரம் மிக்க உடல், உள ஆளுமை, பாடும் திறன் , மேடையை முழுதாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை, நீண்ட தலைமுடியுடன் கூடிய உடல்வாகு என்னை மிகவும் கவர்ந்தவை.
தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் சக வாத்தியக் கலைஞர்கள் ஒவ்வொருவரையும் , அவர்களது இசை வல்லமையையும் நான் இரசிப்பவன். இப்பாடலும் அவர்கள்தம் திறமையினை வெளிப்படுத்தும்.
 
 
Sympathy For The Devil  Song by The Rolling Stones

YeowYeowYeow
 
Please allow me to introduce myselfI'm a man of wealth and tasteI've been around for a long, long yearStole many a man's soul and faithAnd I was 'round when Jesus ChristHad his moment of doubt and painMade damn sure that PilateWashed his hands and sealed his fate
Pleased to meet you, hope you guess my nameBut what's puzzlin' you is the nature of my game
Stuck around St. PetersburgWhen I saw it was a time for a changeKilled the Tsar and his ministersAnastasia screamed in vainI rode a tank, held a general's rankWhen the Blitzkrieg raged and the bodies stank
Pleased to meet you, hope you guess my nameOh, yeahAh, what's puzzlin' you is the nature of my gameAww, yeah
I watched with glee while your kings and queensFought for ten decades for the gods they madeI shouted out, "Who killed the Kennedys?"When after all, it was you and meLet me please introduce myselfI'm a man of wealth and tasteAnd I laid traps for troubadoursWho get killed before they reach Bombay
Pleased to meet you, hope you guess my nameOh, yeahBut what's puzzlin' you is the nature of my gameAww, yeah(Uh, get down heavy!)
Pleased to meet you, hope you'll guess my nameAww, yeahBut what's confusin' you is just the nature of my gameMmm, yeah
Just as every cop is a criminalAnd all the sinners saintsAs heads is tails, just call me Lucifer'Cause I'm in need of some restraintSo if you meet me, have some courtesyHave some sympathy and some tasteUse all your well-learned politesseOr I'll lay your soul to wasteMmm, yeah
Pleased to meet you, hope you guessed my nameMmm, yeahBut what's puzzlin' you is the nature of my gameMmm, mean it, get down
Woo-hoo!Aww, yeahGet on downOh, yeahBa-bum-bum, ba-ba-bumAh, yeahTell me, baby, what's my name?Tell me, honey, can you guess my name?Tell me, baby, what's my name?I'll tell you one time, you're to blame
Ooh-hoo, ooh-hoo, ooh-hooAll rightOoh-hoo-hoo, ooh-hoo-hoo, ooh-hoo-hooAh yeahOoh-hoo-hoo, ooh-hoo-hooAh, yes, what's my name?Tell me, baby, ah what's my name?Tell me, sweetie, what's my name?Ooh-hoo-hoo, ooh-hoo-hoo, ooh-hoo-hoo, ooh-hoo-hooOoh-hoo-hoo, ooh-hoo-hoo, ooh-hoo-hooAh, yeahWhat's my name?
 

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

இசை & குரல் - AI Suno ஓவியம் - AI நானொரு குதிரை வளர்ப்பாளன். நான் வியாபாரி அல்லன். நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான். என்னிடம் நல்ல குதிர...

பிரபலமான பதிவுகள்