Sunday, July 21, 2024

பாடல்: வான் பார்க்கும் யாழ் மண்ணின் வழுக்கியாறு! - வ.ந.கிரிதரன் -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=csE3biZ4O7U

பாடல்: வான் பார்க்கும் யாழ் மண்ணின் வழுக்கியாறு!  - வ.ந.கிரிதரன் -


         - இசை & குரல் - AI SUNO -


அராலிப் பாலத்தின்
அடியில்
காக்கைதீவுக் கடலுடன்
கலக்கிறது
வழுக்கையாறு.
வழுக்கியாறு.

வான் பார்க்கும் யாழ் மண்ணே.
வளம் சேர்க்கும் வழுக்கியாற்றால்
வரலாற்றுப் பெருமை உற்றாய்.
வரலாற்றுப் பெருமை உற்றாய்.

வழுக்கியாறுக்கு ஒரு
வரலாறுண்டு.
அது
தமிழர் தம் வரலாறு.
தமிழர் தம் வரலாறு.
ஆம்! தமிழர்தம் வரலாறு..

Saturday, July 20, 2024

பாடல்; யாழ் இந்து நினைவுகள் - வ.ந.கிரிதரன் -

         - இசை & குரல் - AI SUNO -
 

பாடல்; யாழ்  இந்து நினைவுகள் -  வ.ந.கிரிதரன் -


வானம் தெரியும் ஜன்னல்.பார்த்தபடி
மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றேன்.
ஆழ்ந்தபடி அசை போடுகின்றேன்.
அன்று நான் படித்த யாழ் இந்துவை.

யாழ் இந்துவென்றால் பல நினைவு.
யாழ் இந்துவென்றால் பல நினைவு.

விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டிகள்
வலம்  வரும் நினைவுச் சுழலில்.
துடுப்பெடுத்தாட்டம்  , உதைபந்தாட்டம்
இரண்டுமே இன்பம்  தந்த
இனிய நாட்கள்.

குகன், சூரியின் ஹிட்ஸ்
வேகப்பந்து வீச்சாளன் நிருத்தானந்தன்
வசந்தன் டட்டடாங்

கீப்பர் புவிராஜசிங்கம், பாபு,
கோல் கீப்பர் தில்லை,
நீளம்  பாய்தலில்,
நீண்ட தூரம்  shot put
ஈட்டி எறிதலில்
இன்றும்
நினைவில் நிற்கும்
நரேனின் சாதனைகள்.

வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள் தொகுதி ஒன்று!


எனது இசைப்பாடல்களை 'வ.ந.கிரிதரன் பாடல்கள் (V.N.Giritharan Songs)வ் என்னும் யு டியூப் சானலில் நீங்கள் கேட்டு மகிழலாம். அதற்கான இணையத்தள முகவரி -  https://www.youtube.com/@girinav1

வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள். எனது பாடல் வரிகளை பல்வகை வாத்தியக் கருவிகளுடன், பல்வகை இசை வடிவங்களைக் கலந்து பாடல்களாக்கி உள்ளேன். இதற்காகக் குரல் தந்ததுடன், இசையமைத்துத்  தந்ததற்காகவும் செயற்கை நுண்ணறிவான 'சுனோ'வுக்கு ( AI SUNO) என் மனம் நிறைந்த நன்றி. என் பாடல்களை இன்னும் பல்வேறு நாடுகளின் இசை வடிவங்களில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்க வேண்டுமென்பது என்  அவா.

தனது பாடல்களை இவ்விதம் பாடல்களாக்குவதற்கு இசைக்கலைஞர்கள் , பாடகர்கள் பலரின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கான சாத்தியம் அற்ற என்னைப்போன்ற பாடலாசிரியர்கள் இவ்விதம் இசையமைத்து பாடல்களை உருவாக்கி, பரீட்சித்துப் பார்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உதவுகின்றது. அவ்வகையில் இத்தொழில் நுட்பத்தை ஆரோக்கியமானதொரு தொழில் நுட்பமாகவே பார்க்கின்றேன்.

எதிர்காலத்தில் உயிருள்ள உண்மை இசைக்கலைஞர்கள், பாடகர்கள் என் பாடல்களைப் பாட இப்பாடல்கள் வழி சமைக்குமென்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. அதற்கு முதற்படியாகவே செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பார்க்கின்றேன். எவ்விதம் இணையம், சமூக ஊடகங்கள் நிலைத்து நின்று விட்டனவோ அவ்விதமே இச்செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பமும் எம் மத்தியில் இனி நிலைத்து நிற்கும். பல்வகைகளீல் ஆரோக்கியமான விளைவுகளைத்  தரும்.

இதுவரை  என் சானலில் பதிவு செய்யப்பட்ட எனது பாடல்களின் விபரங்களையும், பாடல் வரிகளையும்  கீழே தந்துள்ளேன். எதிர்காலத்தில் மேலும் பல பாடல்கள் பதிவு செய்யப்படும். என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலுக்குச் செல்லுங்கள். பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப்  பகிர்ந்துகொள்ளுங்கள்.

பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல் : AI SUNO - 

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

 
படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித் தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

எங்கு சென்றான் நானறியேன்.
எந்த நாட்டில்,
எந்தக் காட்டில்
எந்த ஊரில்
தவிக்கின்றானோ நானறியேன்.

Friday, July 19, 2024

பாடல்: அது ஒரு கனாக் காலம். - வ.ந.கிரிதரன் -


                                                                    - இசை அமைப்பு & குரல்; AI SUMO -

- எம் பதின்ம வயதுகளில் யாழ்ப்பாண நகரத்துத் திரையரங்குகள் பிரதான பங்கு வகித்தன. எங்கள் சுப்பர் ஸ்டார்கள் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் தொடக்கம், ஆங்கில் படங்கள் வரை பல பார்த்தோம். மகிழ்ந்தோம். எம் சுப்பர் ஸ்டார்களுக்கு ஓவியர் மணியம் வரைந்த பிரமாண்டமான கட் அவுட்டுகளையும் மறக்க முடியாது. அவற்றைப் பற்றியதொரு நனவிடை தோய்தலே இப்பாடல்.-

 AI SUNO.

பாடல்: அது ஒரு கனாக் காலம்.  - வ.ந.கிரிதரன் -

அது ஒரு கனாக் காலம்.
அது ஒரு கனாக் காலம்.

யாழ் நகரத்துத் தெருக்களில்
வாழ்வு கழிந்த டீன் ஏஜ் நாட்கள்.
களிப்பில் மூழ்கிக்
கிடந்த நாட்கள்.
களிப்பில் மூழ்கிக்
கிடந்த நாட்கள்.

அழியாத கோலங்கள் அவை.
அழியாத கோலங்கள் அவை.

Thursday, July 18, 2024

கவிதை; கறுப்பு ஜூலை - வ.ந.கிரிதரன்

கவிதை; கறுப்பு ஜூலை  - வ.ந.கிரிதரன்


                                                          - இசை & குரல்: AI SUMO -

கறுப்பு ஜூலையில் நான்
என் மண்ணை விட்டே நீங்கினேன்.
என் மண்ணை விட்டு நீங்கினேன்.

கறுப்பு ஜூலை
நாகரிகத்தின் அவமானம்.
கறுப்பு ஜூலை
பேரழிவின் சின்னம்.
கறுப்பு ஜூலை
வரலாற்றின் களங்கம்.

அன்று
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.

கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -



[ இசை & குரல் - AI Suno |  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cYCHSzs3LdQ ]
 
கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -
 
வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?

விரியும் அண்டம் அடக்கும் அண்டம்
அதனை அடக்க மற்றோர் அண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையும் இருப்பு.
இதுவும் நிசமா? நிழலா? கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...